ஆளுநரை மாற்றுவது தொடா்பான நடவடிக்கைக்கு தயாா்- தவராசா
வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபைக்கு தடையாக ஆளுநர் இருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டு, அவருக்கு எதிராக எடுக்கப்படும்; தீர்மானங்களுக்கு நாம் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.