வறுமையை இல்லாதொழிப்பேன்- மைத்திரிபால
நாட்டில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். கூட்டமைப்பாக முன்னணியாக நாம் இன்று அணி திரண்டுள்ளோம்.வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே நாம் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். எமக்கு பாரியளவில் மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.