Breaking News

மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழிபாட்டுக்கென திருப்பதி செல்லும் நிலையில் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 

 மகிந்த ராஜபக்ச திருப்பதி வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு வந்தவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனா்..     

 தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், ராஜபக்சவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்துள்ளனா்.  இதனிடையே மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை காலை திருப்பதியில், தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.    ரேணிகுண்டாவிலிருந்து திருப்பதி மலை அடிவாரம் வரை 200 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.