Breaking News

தமிழக மீனவா்கள் மீது தாக்குதல்

கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை நோக்கி இன்று காலை கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.


இன்று காலை 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள், 626 படகுகளில்  கச்சத்தீவு, தலைமன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை ஆறு ரோந்து படகுகளில் அங்கு சென்ற கடற்படையினர் இவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

இந்த சம்பவத்தையடுத்து மீனவர்கள் படகுகளுடன் இ்ந்திய எல்லைக்குள் திரும்பிச் சென்றுள்ளதகவும். இதன் போது மீனவர்களின் 20க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ள போதிலும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.