போர்க்குற்ற விசாரணைகளில் மாற்றமில்லை- அரசாங்கம்
போர்க்குற்றச் செயல் விசாரணைகள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையிடம் அண்மையில் கோரியிருந்தார்.சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டியது அவசியமானது என அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.உள்நாட்டு ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கை தொடர்பான சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்கத்கது.விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அறிவித்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.