யாழ் அபிவிருத்திகுழு கூட்டத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் காணொளிகள்
வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக் கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதேபோன்று கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் ஈ.பி.டி.பி சந்திரகுமாருக்கிடையிலும் பலத்த வாதங்கள் இடம்பெற்றது கைதடியில் மாடுமேய்ப்பதாக சந்திரகுமாரால் தெரிவிக்கப்பட்டபோது மாடுமேய்ப்பதற்கு கூட உங்களை மக்கள் தெரிவுசெய்யவில்லையே என கஜதீபன் பதிலளித்தார்.
இவ்வாறு இருதரப்பிலிருந்தும் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றது இறிப்பாக இதில் ஈ.பி.டி.பி ஆயுத தாரிகளால் அழைத்துவரப்பட்ட சிலரும் வடமராட்சியில் டக்ளஸால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையினை பொறுப்புடன் நடாத்திவரும் மணிதரன் என்பவரும் மூர்க்கத்துடன் நடந்துகொண்டனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது போத்தலால் தாக்கியுள்ளனர்.
பதிலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தாக்குதல் மேற்கொள்ள கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது. இங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் உங்கள் பார்வைக்காக.