Breaking News

ரிசாத் மகிந்தவை ஆதரிக்க முடிவு

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


நேற்று சனிக்கிழமை மாலை ரிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்துப் பேசினர். இதன்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முக்வைத்தது என்றும், அவற்றுக்கு ஜனாதிபதி தகுந்த பதில் வழங்கியுள்ளார் என்றும், இதன் அடிப்படையில் தேர்தலில் மஹிந்தவை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.