Breaking News

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதியில்

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஸ்பகுமார தெரிவித்தார். 

கடந்த ஓகஸ்ட் 5ம் திகதி தொடக்கம் 29ம் திகதிவரை நடைபெற்ற உயர்தர பரீட்சையில் 296, 313 பரீட்சார்த்திகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.