யாழ்.பல்கலையில் போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீடு அதிகரிப்பு,உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டது.