இலங்கை இராஜதந்திரிகளின் பயணத்திற்குத் தடை
இலங்கையின் இராஜதந்திரிகளும், இராணுவ உயரதிகாரிகளும் கனடாவிற்கு வருவதை அனுமதிக்க வேண்டாமென ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன், கடிதம் மூலம் கனடியப் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
கனடிய மனிதவுரிமை மையத்தினால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வில் வைத்து இதற்கான அறிவித்தலை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் அவர்கள், மேலும் தனது கடிதத்தில் இலங்கை நிலவரம் பற்றித் தெரிவிக்கையில்
,இலங்கையில் மற்றயை இனங்களும் நீதியுடனும் சமாதானத்துடனும் வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே கனடா இவ்வாறு தடைகளை விதிப்பதன் மூலம் ஏனைய நாடுகளும் இவ்வாறான நிலையைப் பின்பற்ற வழிவகுக்கும் எனத் தெரிவித்ததோடு,
கனடியர்கள் இப்போது இலங்கையின் வடக்கிற்குச் செல்ல முடியாத நிலையில் இலங்கை அரசைச் சார்ந்தவர்கள் கனடாவருவதைத் தடுக்க வேண்டுமெனவும், இலங்கை தொடர்பான பல விடயங்களில் முன்னுதாரணமாக இருந்த கனடியப் பிரதமர் இந்த விவகாரத்தையும் கவனத்திலெடுக்க வேண்டுமெனவும் தனது கடிதத்தில் கேட்டிருந்தார்.