பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்து விரிவுரையாளர் சங்கம் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தமது செயற்பாடுகளில் அத்துமீறல்களை மேற்கொள்வதாக விரிவரையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இந்தநிலையில் விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக இன்று பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.