Breaking News

வடக்கு அமைச்சுக்களில் மாற்றம்

வடமாகாண முதலமைச்சரின் கீழ் இருந்த 7 அமைச்சு துறைகள் வடமாகாண அமைச்சர்கள் மூவருக்கு பகிர்ந்து மாற்றப்பட்டுள்ள நிலையில் மாற்றப்பட்ட அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து அமைச்சர்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளனர்.


ஊடகங்களுக்கு அனுமதியளிக்காமல் மிக அமைதியான முறையில் ஆளுநர் அலுவலகத்தில் குறித்த பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்படி தற்போதைய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தற்போதுள்ள அமைச்சுக்களுடன் சேர்த்து கூட்டுறவு, நீர் வழங்கல், உணவு விநியோகம் ஆகிய அமைச்சு துறைகளும், தற்போதைய சுகாதார அமைச்சருக்கு தற்போதுள்ள அமைச்சு துறைகளுடன் சேர்த்து சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரங்கள் அமைச்சு துறைகளும், தற்போதைய மீன்பிடி அமைச்சருக்கு தற்போதுள்ள அமைச்சு துறைகளுடன் சேர்த்து வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன.