Breaking News

எனது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை-மகிந்த

இலங்கையில் எந்த விதத்திலும் நீதித் துறைக்கோ மனித உரிமைக்கோ பந்தகம் விளைவிக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.நான் மனித உரிமை மீறியதாக பொது வேட்பாளர் கூறியுள்ளார், இங்குள்ள எனது மக்களுக்கு தெரியும்.


மக்களின் ஆதரவு இருக்கும் வரைக்கும் என்னை ஒருபோதும் மனித உரிமை விசாரணைக்கு அனுப்ப முடியாது.நான் இலங்கையில் யுத்தத்தில் ஒரு பொதுமகனையும் மரணிக்கவில்லை, மரணித்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே.

இன்று இலங்கை அபிவிருத்தியை பாருங்கள், துவிசக்கர வண்டியில் சென்று மணி அடித்து கடிதம் கொடுத்த தபால் ஊழியர்கள் மோட்டர் வண்டியில் சென்று பாப் பாப் அடிக்கின்றறாக்கள்.வெளிநாடுகளிடம் பணம் வாங்கியது மக்கள் சாப்பிடுவதற்கு அல்ல எல்லாம் இலங்கையின் அபிவிருத்திக்காக மட்டுந்தான்.

பொது மக்களின் காணிகளை நாங்கள் எடுத்தாலும் இன்று அடுக்கு மாடிகள் கட்டி கொடுத்துள்ளோம் 4 வருடங்களில் நான் செய்த அபிவிருத்தி ஒரு ஜனாதிபதியும் செய்யவில்லை.எனது மக்கள் என்னை நம்பலாம் நான் சொன்னதை செய்வேன் செய்வதை தான் சொல்லுவேன்.