Breaking News

MY 3 மேடைக்கு தீ வைப்பு -மகிந்தவின் கட்டவுட்டுக்கள் தீக்கரை(காணொளி)

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவின் தேர்தல் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.


இதனால் ஆத்திரமடைந்த மைத்திரியின் ஆதரவாளர்கள் அங்கு கட்டப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சேவின் கட்டவுட்டுக்களை கிழித்து எரித்தனர்.

காலி - வதுரப பகுதியில் இன்று மாலை நடைபெறவிருந்த பிரச்சார கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடைக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. இரண்டு டிபேன்டர்களில் வந்த குழுவினரே இன்று அதிகாலை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அலங்காரங்களுக்கு தீ வைத்தமையால் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கல்நெவ - கலங்குடிய மவாத்தகம பிரசேத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த சம்பவத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கும் ட்ரக் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


AttckMailtreRally2 600px
AttckMailtreRally1 600px