மைத்திரிக்கு ஆதரவளிக்கும் உரிமை கூட்டமைப்பிற்கு உண்டு- ஜே.வி.பி.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கு வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும்.
தங்களுக்கு விருப்பமான எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆதரவளிக்கவும் உரிமையுண்டு. அதற்கு எதிர்ப்பை வெளியிட எவருக்கும் அதிகாரம் கிடையாது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளிருந்தோ அல்லது வெளியில் இருந்தோ ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு என மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.