Breaking News

மகிந்தவை தோற்கடித்து அனுப்புங்கள்-விஜித ஹேரத்

மகிந்த ராஜபக்‌சவை தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 


 நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்‌சவுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபடப்போவதில்லை அதுமட்டுமல்லாமல், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை பகிரங்கமாக ஆதரிக்கப்போவதில்லை.   ஜனவரி 8 ஆம் திகதி  ராஜபக்‌சவை தோற்கடிக்கும் வகையில் வாக்களிக்குமாறு  நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன், 

ஜே.வி.பி., வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பரப்புரையில் ஈடுபடாது.   நாங்கள் இந்தத் தேர்தல் சட்டவிரோதமானது என்று கருதுகிறோம். இதன் காரணமாகவே நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை. நாங்கள் மகிந்த ராஜபக்‌சவை தோற்கடிக்க முயலுவோம்.   அதேவேளை, ஏனைய வேட்பாளர்கள் குறித்து நாங்கள் உறுதியளிக்கமாட்டோம். ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் என்ன செய்வது என்பது குறித்தே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.