Breaking News

முஸ்லிம் காங்கிரஸின் மீது சட்ட நடவடிக்கை- பொதுபலசேனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுபலசேனா எச்சரித்துள்ளது. 


மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால் மீண்டும் 1915ம் ஆண்டை போன்று சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்படும் என்று தாம் கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறியுள்ளார்.

இதனை அவர் வாபஸ் பெறவேண்டும். இல்லையேல் காங்கிரஸின் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுபலசேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் திலந்த விதானகெ எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் காரியப்பர் பொது விவாதம் ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் விதானகே கோரியுள்ளார்.