அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் கட்சிக்கு பிரதமா் பதவி -ரணில்
பொதுத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறும்.பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும். அதற்கு அடுத்த படியாக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படும்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாக பிரதிப் பிரதமர் பதவி உருவாக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.