யாழ்.பல்கலையில் திட்டமிடல் கண்காட்சி
உலக நகர திட்டமிடல் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக திட்டமிடல் மாணவர்கள் “நகரத்தை திட்டமிடல்” என்ற தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்றை நடாத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத்தொகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை நாளைய தினம் காலை 9 மணிக்கு திட்டமிடல் தொடர்பான ஆய்வரங்கும் கைலாசபதி கலையரங்கில் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர்.