மகிந்த ஆட்சியில் இருக்கும்வரை அதிகார பகிர்வு இல்லை-ராஜித
மகிந்த ஆட்சியில் இருக்கும்வரை வடபகுதிமக்கள் அதிகாரபகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் எதையும் வழங்க விரும்பவில்லை தரகுப்பணத்தை பெறுவதற்காகவே வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.குறித்த அபிவிருத்தி மூலம் மக்களுக்கு நன்மை கிட்டவில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு , தமிழ்மக்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, உட்பட பல விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் பல தடவை கேட்டும் அவர் அதனை நிறைவேற்றவில்லை.
எனவேதான் ஜனாதிபதி மகிந்த, இவை எவற்றிற்கும் தயாராகயில்லை என தெரிந்த பின்னரே தான் அரசிலிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.