மலையக மக்களை ஏமாற்றி கொண்டே இருக்க முடியாது-திகாம்பரம்
எமக்கு பல பிரச்சினைகள் இருந்தும் இந்த அரசாங்கத்தால் தீர்வுகளை பெற்றுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து மலையக மக்களை ஏமாற்றி கொண்டிருக்க முடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம், எமக்குள்ள வாக்குகளை பயன்படுத்தி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அமோக வெற்றி பெறச் செய்வோம் என்றார்.
சிறிகொத்தாவில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.எதிரணியுடன் இணைந்துள்ள எமக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. எனவே பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.