மகிந்தவின் ஆட்சியிலேயே நாடு அதிக அழிவுகளை சந்தித்துள்ளது-சம்பிக்க
இலங்கையில் விடுதலைப் புலிகள் 30 வருட காலத்தில் மேற்கொண்ட அழிவுகளை காட்டிலும் கடந்த ஐந்து வருடங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இன்று சர்வதேச சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் பெற்றோல் 63 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். எனினும் 134 ரூபாவுக்கே இலங்கையில் பெற்றோல் தற்போது விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.