Breaking News

உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற அழுத்தம்-கூட்டமைப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காணப்படும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக 

தெரிவித்துள்ளனர்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களையும், வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரையும் அகற்ற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவாலிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு தாஜ் ஹோட்டலில் வைத்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அஜித் தோவலை சந்தித்திருந்தனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இதனால் படையினரை அகற்ற அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமெனவும் கூட்டமைப்பினர் கோரியதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், இராணுவத்தை அகற்றுவது குறித்த தீர்மானத்தை அரசாங்கமே எடுக்க வேண்டுமென தோவால் கூட்டமைப்பினரிடம் கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.