இரணைமடு குளத்தருகில் விகாரை
இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது விகாரையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு சிறிய விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.