Breaking News

பெரும்பான்மை சமூகத்தினர் ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார்களா?


ஆட்சி மாற்றம் ஒன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.
ஜன­நா­ய­கத்­தையும் மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் பறிக்கும் வகையில் மஹிந்த ராஜபக் ஷ அறி­மு­கப்­ப­டுத்­திய அர­சியல் கலா­சா­ரத்தை இல்­லாது ஒழித்து புது­யு­க­மொன்றை இலங்­கையில் உரு­வாக்க வேண்­டு­மென்ற தாகத்­துடன் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்கும் ஜனா­தி­ப­திக்கும் எதி­ரான சக்­திகள் ஒன்று திரண்டு எதி­ர­ணி­யாக உரு­வாகி நிற்கும் தேர்­த­லாக நடை­பெறப் போகின்ற தேர்தல் களை கட்டி காணப்­ப­டு­கி­றது. 

கூட்­ட­மைப்பைப் பொறுத்­தவரை என்ன முடிவை எடுக்­கப்­போ­கின்­றது என்­பதில் தான் தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வும் எதிர்­கால போக்கும் நிர்ண­யிக்­கப்­ப­ட­வுள்­ளது என்­பது வெள்­ளிடை மலை­யாகும். இலங்­கையில் சட்ட ஆட்சி வீழ்ந்­த­மைக்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி ஆட்சி முறை­யா­னது இரா­ணுவம், பொலிஸ், அமைச்­சர்கள் ஆகிய நிய­ம­னங்கள் மற்றும் ஆணைக் குழுக்கள் நிய­ம­னங்கள் என அனைத்து நிர்­வாகப் பொறுப்­புக்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டி­ருப்­பதே இதற்குக் காரணம். இந்த சட்ட ஆட்சி நிலை மாற வேண்டும். 

மாற்­றப்­பட வேண்டும் என்ற தீவி­ரத்­துடன் புதிய ஆட்சி முறை­மை­யொன்று கொண்டு வரப்­பட வேண்டும் என்ற தாகத்­துடன் எதி­ர­ணி­யினர் உரு­வா­கி­யி­ருக்­கி­றார்கள் என்ற நிகழ்­வு­க­ளையும் தற்­போது பார்க்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. இலங்­கையில் ஒரு ஆட்சி மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்ற கருத்து கட்­சிகள் மத்­தி­யிலும் சில புத்திஜீவிகள் மத்­தி­யிலும் பேசப்­பட்டு வந்த அபிப்­பி­ரா­ய­மாக இருந்­தாலும் அதை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடிய சாத்­திய நிலை­களையோ அல்­லது சூழ்­நி­லை­க­ளையோ உரு­வாக்கும் சக்தி யாரிட­முமே இருந்­த­தில்லை. 

தேர்தல் ஒன்றின் மூலம் கொண்டு வரக்­கூ­டிய ஜன­நா­யக ஆட்சி மாற்­றத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக மக்கள் இருந்­தாலும் கூட தேர்தல் பிர­க­ட­னத்­தையோ அறி­வித்­த­லையோ செய்யக் கூடிய அதி­காரம் அவர்­க­ளிடம் இல்­லை­யென்­ப­தே­யுண்மை. 

அந்த அதி­கா­ரத்தைக் கொண்­ட­வர்­க­ளாக அர­சாங்­கமே உள்ளது. அந்த வகையில் தான் ஜனா­தி­பதி, தேர்­த­லுக்­கான கால அளவு இன்னும் இரண்டு வரு­டங்கள் இருந்தும் கூட நான்கு வருட நிறை­வுடன் தம் செல்­வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் காட்ட ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

நடை­பெறப் போகின்ற ஜனா­தி­பதி, தேர்­தலை ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வரக்­கூ­டிய ஒரு சந்­தர்ப்­ப­மாகக் கொண்டு புதிய ஆட்­சி­யொன்றை நிறுவி புதிய ஜன­நா­யக பாரம்­ப­ரி­யத்தை உரு­வாக்க வேண்­டு­மென்ற ஆதங்­கத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்குள் இருந்து உடைந்து வந்த முன்னாள் அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் தற்­பொ­ழுது எதி­ர­ணி­யாக ஒன்றிணைந்­தி­ருக்­கி­றார்கள். 

இந்த அணி­யி­னரை எட்ட நின்று ஆத­ரிக்­கி­ற­வர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள். இவ்­வா­றா­ன­தொரு காய் நகர்த்­தலை மதி நுட்­ப­மா­கவும் தந்­தி­ரத்­து­டனும் நகர்த்­தி­யி­ருப்­ப­வர்கள் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவரின் ஆலோ­சகர் மலிக் சமரவிக்­கி­ரம ஆகியோர் இரக­சி­ய­மா­கவும் ராஜ­தந்­திர ரீதி­யிலும் காய்­களை நகர்த்தி வெற்­றியும் கண்­டுள்­ளனர். இவை நாட­றிந்த விட­யங்கள் தான். ஆனால், ஆட்சி மாற்­ற­மொன்று வேண்டும். புதிய அர­சியல் கலா­சாரம் உரு­வாக்­கப்­பட வேண்டும். 

புதிய யுகத்­துக்­கான வித்தை இட வேண்டும் என்று ஆசைப்­ப­டு­ப­வர்கள் யார்? இலங்கை மக்­களா அல்­லது சர்­வ­தே­சமா? சிறு­பான்மை சமூ­கமா? விரக்தி கொண்­டி­ருக்கும் குறித்த அர­சியல் தலை­மைத்­து­வங்­களா? இவை தவிர்ந்த வேறு ஒரு சக்­தியா ஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கின்­றது, என்­பதே இங்கு எழுப்­பப்­படும் கேள்­வி­களாகும். 

ஆட்சி மாற்­ற­மொன்றை இலங்கை மக்கள் வேண்டி நிற்­கி­றார்கள் என்று கூறப்­ப­டு­மானால் சிங்­களம், தமிழ், முஸ்லிம் ஏனைய சமூ­கங்கள் என்ற பல்­லின சமூகம் வாழும் இலங்­கையில் இந்த சமூ­கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஆட்சி மாற்­றத்தைக் கோரு­கின்­றார்கள் என்று கூறு­வ­தற்­கு­ரிய எவ்­வித தர­வு­க­ளையும் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் யாருமே பெற முடி­யாது. அவர்­க­ளுக்கு கிடைக்­க­வு­மில்லை. 

பெரும்­பான்மை சமூ­க­மென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் பேரினச் சமூகம் ஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கின்­றதா அல்­லது கோரிக் கொண்­டி­ருக்­கி­றதா என எந்த அடை­யாளங்கள் மூலமோ, அபிப்­பி­ரா­யங்கள் மூலமோ அறி­யப்­ப­ட­வில்லை. ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு என்ன நினைக்­கி­ற­தென்றால் யுத்த வெற்றி, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, தேச அமை­தியைக் கொண்டு வந்த தம்மை எந்த சக்­தி­க­ளாலும் தோற்­க­டித்து விட முடி­யாது என்பதாகும். 

அண்­மையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு கூறி­யி­ருந்தார். நான் நாட்டு மக்­களை நம்­பு­கின்றேன். நாட்டை நேசிக்கும் மக்கள் இந் நாட்டில் இருக்கும் வரை தற்­போ­தைய அர­சாங்­கத்தை யாரும் தோற்­க­டிக்க முடி­யாது. அது­மட்­டு­மன்றி 28 தேர்­தல்­களில் வெற்றி பெற்ற இன்­றைய அர­சாங்கம் 29 ஆவது தேர்­த­லான ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் வெற்றி பெறும் என மஹிந்த ராஜபக் ஷ உறு­தி­யிட்டுக் கூறி­யி­ருந்தார். 

இதே­வேளை, எதி­ர­ணியில் கூட்டுக் சேர்ந்­தி­ருப்போர் கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமைக்கு முடிவு கட்­டுவோம். குடும்ப ஆட்சி முறை­மையை இல்­லாது ஆக்கி ஜன­நா­யக ஆட்சி முறை­மை­யொன்றை உரு­வாக்­குவோம். இதற்கு நாட்­டி­லுள்ள அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்­டு­மென்று. 

2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி பத­வியை ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்சே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையை இல்­லாது ஆக்­குவேன் என அளித்த வாக்­கு­று­தி­களை தனது இரண்­டா­வது பருவ காலத்­திலும் நிறை­வே­ற்றாமல் மூன்றாம் முறையும் அந்த அதி­கா­ரத்தை தன­தாக்க போட்­டி­யிட முன்­வந்தது ஏற்றுக் கொள்ள முடி­யாத ஒன்று எனக் குற்றம் சாட்டிக் கொண்டு அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய உடைந்து வெளி­யே­றி­யதும் ஜே.வி.பி.யினர் வெளி­யேறி அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்து வரு­வதும் மஹிந்த தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துக்கு பாரிய சவா­லாக ஆகி­விட்ட சூழ்­நி­லையில் தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­கவும் மூத்த அமைச்­ச­ராகவும் பதவி வகித்த மைத்­தி­ரி­பால சிறி­சேனா எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருப்­பது பாரிய அர­சியல் மாற்­றத்­துக்­கான சூட்­சு­மக்­க­யிறு என எடுத்துக் கூறப்­ப­டு­கி­றது. 

இவரின் உடைவும் வில­கலும் சுதந்­திரக் கட்­சியின் அதா­வது ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பலத்­துக்கு ஆப்­பாகி விட்­டது. சிங்­கள பெரும்­பான்மை சமூ­கத்­தினர் மத்­தியில் பாரிய பிரிவை உண்­டாக்கும் சாணக்­கி­ய­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது எனப் பேசப்­ப­டு­கி­றது. சிங்­களப் பெரும்­பான்மை சமூகம் ஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கின்­றார்­களா? அல்­லது யுத்த வெற்­றியின் மூலம் தேசத்­துக்கு விடிவு தந்த தலை­மைத்­து­வத்தை மீண்டும் அரி­யா­ச­னத்தில் அமர்த்­து­வார்­களா என்­ப­தெல்லாம் மக்­களின் வாக்குப் பலத்தில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது. 

எவை எப்­ப­டி­யி­ருந்த போதிலும் ஆளும் அர­சாங்­கத்­துக்கு நடை­பெறப் போகின்ற ஜனா­தி­பதித் தேர்­த­லா­னது ஒரு அக்­கினிப் பரீட்­சை­யா­கவே இருக்கப் போகி­றது என்­ப­தற்கு மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஒன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அர­சியல் மாற்றம் நிகழ வேண்­டு­மென சர்­வ­தேசம் எதிர்­பார்க்­கின்­றதா? இல்லை சூழ்ச்­சிகள் செய்து வரு­கின்­றதா? என்ற சந்­தே­கங்கள் இன்று இலங்­கையின் தேசிய சமூ­கங்­க­ளுக்­கி­டையே பெருத்த சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. 

இலங்கை அர­சாங்கம் கூறிக் கொண்­டி­ருக்­கி­றது எதி­ர­ணியின் உரு­வாக்கம் என்­பது ஒரு சர்­வ­தேச சதி­யென்று. தமிழ் ஈழத்தை உரு­வாக்கும் சர்­வ­தே­சத்தின் நோக்­கத்தை பின்­ன­ணி­யாகக் கொண்டே எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பாக வெளி­நாட்டு தூத­ரங்­களின் உத­வி­யுடன் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­மி­டையே ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்ள ஒப்­பந்­தங்கள் தொடர்­பான தக­வல்களை சரி­யான நேரத்தில் வெளி­யிடுவோம். அது ­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சே அவர்­களை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு அனுப்­பு­வது என்ற தீர்­மா­னத்­துடன் டயஸ் போரா­வுடன் இணைந்து எதி­ர­ணி­யினர் கூட்­டுத்­திட்டம் தீட்­டி­யி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது என விளை­யாட்டுத் துறை அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­தி­ருந்தார். 

அவர் மேலும் எதி­ர­ணி­யினர் பற்றிக் கூறு­கையில்; தாம் ஆட்­சிக்கு வந்­ததும் தமி­ழீ­ழத்தை பெற்றுக் கொடுப்­பதற்கு என்று ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகியோர் மேற்­கு­லக நாடு­க­ளுடன் இர­க­சிய ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ள­மையை உரிய நேரத்தில் வெளிப்­ப­டுத்­து­வோ­மென இன­வாத கோஷ­மிட்­டி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. 

மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எவ்­வ­ளவு அழ­கான பொய்யை வரைந்­துள்ளார் என்­பது இதி­லி­ருந்து தெரிந்து கொள்ள முடியும். விடு­தலைப் புலிகள் மீது தொடுக்­கப்­பட்ட போருக்கு எந்­தெந்த உலக நாடுகள் இலங்கை அர­சாங்­கத்­துக்கு தள­பாட உத­வி­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் யுத்த உபா­யங்­க­ளையும் நல்­கி­யதோ அதே நாடுகள் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் நோக்­கு­ட­னேயே எதி­ர­ணியை உரு­வாக்கி சூழ்ச்சி செய்து வரு­கின்­றன என்­பது அர­சாங்­கத்தின் குற்றச் சாட்­டாகக் காணப்­ப­டு­கி­றது. இதில் எந்­த­ளவு யதார்த்தம் இருக்­கி­றது என்­பது சொல்­லா­மலே விளங்கிக் கொள்ளக் கூடிய விட­ய­மாகும். 

அர­சாங்­கத்தின் இந்த அப்­பட்­ட­மான குற்­றச்­சாட்டை மறு­த­லித்த எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருந்தார். 47 வரு­டங்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்து வந்­துள்ளேன். என்னை ஆத­ரிக்கும் மாது­லு­வாவே தேரர் மற்றும் ஜாதிக ஹெல உறு­மய பொது எதி­ர­ணியில் இணைந்­தி­ருப்போர் அனை­வரும் வெளி­நாட்டு சதியில் அங்கம் வகிப்­போரா? என அவர் கேட்­டுள்ளார். 

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பினால் கிளப்­பி­வி­டப்­பட்­டி­ருக்கும் சர்­வ­தேச சதி­யென்ற விவ­காரம் சாதா­ர­ண­மாக கூறக்­கூ­டிய ஒரு குற்­றச்­சாட்­டல்ல. அது கன­தி­யாக நிரூ­பிக்­கப்­பட வேண்­டிய ஒரு விட­ய­மாகும். அவ்­வாறு நிரூ­பிக்­கக்­கூ­டிய திறனோ ஆதா­ரங்­களோ இருக்­கு­மாயின் அது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் எதி­ர­ணி­யினர் எவ்­வ­ளவு ஆபத்­தான குற்­றச்­சாட்­டுக்கு முகங்­கொ­டுக்க நேரிடும் என்­பது எதி­ர­ணி­யி­ன­ருக்கு விளங்­காத ஒரு விட­ய­மல்ல. 

ஆட்சி மாற்­றத்தை விரும்பும் இன்­னு­மொரு தரப்­பி­ன­ராக எண்­ணப்­ப­டு­ப­வர்கள் இலங்­கையில் வாழும் சிறு­பான்மை சமூ­க­மென அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் தமிழ் மக்­களும் முஸ்லிம் சமூ­க­மு­மாகும். இதில் தமிழ் சமூகம் தமது அர­சியல் உரி­மை­க­ளுக்­காக கடந்த ஆறு தசாப்­தத்­துக்கு மேலாக போராடி வந்­துள்­ளது. 

அஹிம்சை வழிப்­போ­ராட்டம், ஆயுத போராட்டம் இராஜ­தந்­திரப் போராட்டம் என்ற பல பரி­மா­ணங்கள் போராட்­டத்தின் வர­லாற்று வழி­க­ளாக இருந்­தி­ருக்­கின்­றன. இலங்­கையில் மாறி­மாறி வந்த தேசிய அர­சாங்­கங்கள் தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் மீது அக்­கறை காட்­டாத சூழ்­நி­லையில் ஆயுத போர்­மு­னைப்­புக்கள் வெடித்­தெ­ழுந்­தன. முப்­பது வருட காலப்­போரில் இழந்­த­வைகள் இழக்­கப்­பட்­ட­வைகள் ஏராளம். 

இவை­யெல்­லா­வற்­றையும் துவம்சம் செய்யும் வகையில் பாரிய யுத்­த­மொன்றை மேற்­கொண்டு வெற்­றிக்­கொண்ட தற்­போ­தைய அர­சாங்கம் நியாயமான தீர்வை முன்­வைப்போம், அர­சியல் சுதந்­தி­ரத்தை தமிழ் மக்­க­ளுக்கு வழங்­குவேன் என்று கூறிக்­கொண்டு சர்­வ­தேச சமூகம் உட்­பட அனை­வ­ருக்கும் போக்கு காட்டி வருகிறது. உலக அனு­ச­ர­ணை­யுடன் யுத்­தத்தை வெற்­றி­கொண்ட இந்த அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை முன்­வைக்க முடி­ய­வில்லை. 

மாறாக காணி அப­க­ரிப்பு, காணாமல் போனோர் விவ­காரம், மீள்­கு­டி­யேற்ற தட்­டிக்­க­ழிப்பு, புனர்­வாழ்வு செய்­யாமை மற்றும் கலா­சார மையங்கள், காணி சுவீ­க­ரிப்பு, இரா­ணு­வக்­கு­டி­யி­ருப்பு, பேரினக் குடி­யேற்றம் போன்ற இன்­னோ­ரன்ன கெடு­பி­டி­களை வட­கி­ழக்கில் நிகழ்த்தி வரு­கின்ற சூழ்­நி­லையில் இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி வல்­ல­மையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். 

ஆட்சி மாற்­ற­மொன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென நினைப்­பதில் நியாயம் இருக்­கலாம். ஆனால், அதைக் கொண்டு வரக்­கூ­டிய வல்­லமை தமிழ் தரப்­புக்கு உண்டா என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும். 

வட, கிழக்கைப் பொறுத்­த­வரை ஐந்து கட்­சி­களின் கூட்­டாக விளங்­கு­கின்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கஜேந்­திர குமார் பொன்­னம்­ப­லத்தின் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய விடு­தலை முன்­னணி கிழக்கில் தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்சி இலங்கை தமிழர் மகா சபை, ஈரோஸ் தமிழர் விடு­தலைக் கூட்­டணி என பதிவு செய்­யப்­பட்ட பதிவு செய்­யப்­ப­டாத தமிழ் தரப்­பி­னரை அடை­யா­ளப்­ப­டுத்தும் கட்­சிகள் இதே­போன்று மலை­யக மக்­களை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­து­வ­தாக கூறிக்­கொள்ளும் ஆறு­முகம் தொண்­டமான் தலை­மை­யி­லான இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் சாந்­தினி சந்­தி­ர­சே­கரன் தலை­மை­யி­லான மலை­யக மக்கள் முன்­னணி பிர­பா­ க­ணேசன் தலை­மை­யி­லான ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் திகாம்­பரம் தலை­மை­யி­லான தொழி­லாளர் ஐக்­கிய முன்­னணி மனோ­க­ணேசன் தலை­மை­யி­லான ஜன­நா­யக மக்கள் முன்­னணி ஆகி­யவை ஒன்று இணை­வதன் மூலமோ அல்­லது ஆளும் அர­சாங்­கத்­துக்­கெ­தி­ராக கூட்டு சேர்­வதன் மூலமோ ஆட்சி மாற்­ற­மொன்றைக் கொண்­டு­வர முடி­யுமா என்­பது குதி­ரைக்­கொம்­பா­கவே பார்க்­கப்­படும். 

மேலே பெயர் சூட்­டிக்­காட்­டப்­பட்ட கட்­சி­களில் பல மறைந்தும் மறை­யா­மலும் வெளிப்­ப­டை­யா­கவும் மறை­மு­க­மா­கவும் அர­சாங்­கத்­துக்கு துணை­போகும் கட்­சி­க­ளாக இருந்து கொண்­டி­ருக்கும் நிலையில் வட­கி­ழக்கு மற்றும் மலை­ய­கத்தை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் கட்­சி­களால் ஆட்சி மாற்­ற­மொன்றை கொண்­டு­வ­ர­மு­டி­யுமா இவர்கள் அனை­வ­ரையும் ஒன்று இணைக்கும் சக்தி யாரி­டமும் உள்­ளதா? என்­ப­தெல்லாம் பகற்­க­ன­வா­கவே முடியும். 

இன்று ஆட்சி மாற்­ற­மொன்றை விரும்பும் இன்­ன­தொரு தரப்­பி­ன­ராகக் கரு­தப்­ப­டு­ப­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­க­ளாக இருக்­கலாம். கடந்த காலங்­களில் முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கொடு­மைகள் அட்­டூ­ழி­யங்கள், அநி­யா­யங்கள் அந்த சமூ­கத்தை நிலை­கு­லைய வைத்­துள்­ளது என்­பது உண்­மையே. 

விரக்­தியும் வெறுப்பும் கொண்­டி­ருக்­கின்ற இந்த சமூ­கத்தை பிர­தி­நி­தித்துவப் ­ப­டுத்­து­வதில் செல்­வாக்கு பெற்று நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ரிஷாட்­ப­தி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், அதா­வுல்லா தலை­மை­யி­லான அ.இ.தேசிய காங்­கிரஸ் மற்றும் உதி­ரிக்­கட்­சிகள் ஆட்­சி­மாற்­ற­மொன்றை விரும்­பு­கின்­றனவா? இல்­லையா என்­பது பற்றி முடி­வு­காண முடி­யா­ம­லே­யுள்­ளது. 

ஆனால் முஸ்லிம் சமூ­கத்தை பொறுத்­த­வரை ஆட்சி மாற்­ற­மொன்றின் மீது அக்­க­றை­கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள் என்ற பர­வ­லான அபிப்­பி­ரா­யமும் கருத்தும் விரவி வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் மக்­களைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் அனைத்­துமே ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைக்கு இது­வரை வழங்கி வந்த ஆத­ரவை இன்­று­வரை வாபஸ் பெற்­றுக்­கொண்­ட­தாக தெரி­ய­வில்லை. 

பிந்­திக்­கி­டைத்த தக­வ­லின்­படி அமைச்சர் ரிஷாட்­ப­தி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கிழக்கு மாகா­ணத்தில் அர­சுக்கு வழங்கி வந்த ஆத­ரவை மீள் பரி­சீ­லனை செய்து நடு­நிலை வகிக்­கப்­போ­வ­தாக கூறி­யி­ருக்­கின்­றது. இதன் இந்த நிலைப்­பாடு ஏதா­வது தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யுமா என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும். 

அது­வு­மன்றி இலங்­கையின் தேசிய கட்­சி­க­ளான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் நிரந்­த­ர­மான ஆத­ர­வா­ளர்கள் முஸ்லிம் சமூ­கத்தில் இன்னும் இருந்து கொண்­டுதான் இருக்­கின்­றார்கள். இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு ஆத­ரவை வழங்­க­வி­ருக்­கின்­றது என்­பது இன்னும் மூடு­மந்­தி­ர­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

அக்­கட்­சியின் பொது செய­லாளர் ஹசன் அலி ஜனா­தி­பதித் தேர்தல் பற்றி கருத்து தெரி­விக்­கையில்; இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உட்­பட சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு எத்­த­கைய தீர்­வு­களை முன்­னெ­டுப்­பார்கள் என்­ப­தி­லேயே மு.காங்­கி­ரஸின் அடுத்த கட்ட நகர்வு தங்­கி­யுள்­ளது. கொள்­கைப்­பி­ர­க­டனம் உட்­பட்ட சம­கால அர­சியல் நிலை­வ­ரங்­களை மு.காங்­கிரஸ் உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கி­றது. 

மக்கள் நலன் சார்ந்த முடிவை மு. காங்­கிரஸ் எடுக்­கு­மென்று ஹசன் அலி கூறி­யுள்ளார். இதே­பல்­ல­வி­யையே தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எடுக்­கப்­போகும் தீர்­மானம் நாட்டின் சகல மக்­க­ளுக்கும் சிறந்த நல்ல முடி­வாக நாம் எடுப்போம் எதி­ர­ணியின் பொது வேட்பாளர் மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சே­னவின் முற்­போக்­கான கருத்­துக்­களை கூட்­ட­மைப்பு வர­வேற்­கின்­றது என கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். 

கூட்­ட­மைப்பைப் பொறுத்­தவரை என்ன முடிவை எடுக்­கப்­போ­கின்­றது என்­பதில் தான் தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வும் எதிர்­கால போக்கும் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வுள்­ளது என்­பது வெள்­ளிடை மலை­யாகும். ஆளும் அர­சாங்­கத்தின் தலைவர் மகிந்த ராஜபக் ஷவை ஆத­ரிக்கும் முடிவை இவர்கள் எடுக்க முடி­யுமா? மாறாக எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரியை ஆத­ரிக்­கப்­போ­வ­தாக முடிவை எடுப்­பார்­க­ளானால் இவர்­களின் ஆத­ரவை மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தரப்­பினர் எவ்­வாறு தமது தேர்தல் பிரச்­சா­ரத்­துக்கு பயன்­ப­டுத்­து­வார்கள். என்­ப­தெல்லாம் தர்­ம­சங்­க­ட­மான நிலை­யா­கவே காணப்­படும். 

ஏலவே தமி­ழீ­ழத்தை அமைக்க சர்­வ­தே­சத்­துடன் சேர்ந்து எதி­ர­ணி­யினர் சூழ்ச்சி செய்து வரு­கின்­றார்கள் என அப்­பட்­ட­மான பொய்யை அள்­ளி­வீசும் அர­சாங்­கத்தின் வாய்க்கு அவல் கிடைத்­த­தா­கவே ஆகி­விடும். அது­வு­மின்றி அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ரையும் ஆத­ரிக்­காமல் மறு­புறம் எதி­ரணி வேட்­பா­ள­ரையும் ஆத­ரிக்­காமல் கூட்­ட­மைப்பு நடு­நி­லை­வ­கிக்க முடி­யுமா? அந்த நடு­நி­லை­வ­கிப்பு எதிர்­கால தமிழ் மக்­களின் அர­சியல் முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு துணை­போக முடி­யுமா என்­ப­தெல்லாம் ஆராய்ந்து நிதா­ன­மாக எடுக்­கப்­பட வேண்­டிய முடிவு என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. 

இவ்­வா­றான சிக்­கல்­களும் சங்­க­டங்­களும் சச்­ச­ர­வு­களும் கொண்ட தேர்­த­லாக ஆகி­யி­ருக்கும் 7ஆவது ஜனா­தி­பதித் தேர்­த­லா­னது ஆட்சி மாற்­றத்தை கொண்­டு­வ­ருமா. எதி­ர­ணி­யினர் மற்றும் சிறு­பான்மைத் தரப்­பினர் ஆகியோர் ஒன்று இணை­வதன் மூலம் ஆட்சி மாற்­றத்­துக்­கான முடி­வைக்­கொண்டு வர­மு­டி­யுமா? அந்த முடி­வுக்கு அமைய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறைமை ஒழிக்­கப்­பட்டு புதிய ஜனநாயக கலாசாரமொன்றை உருவாக்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கின்றதா இந்த வாய்ப்பொன்றின் மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவுகாண முடியுமா என்பதெல்லாம் மக்கள் அளிக் கப்போகும் தீர்ப்பிலேயே தங்கியுள்ளது.