ஜனவரி 8ம் திகதிக்கு பின் நாடாளுமன்றம் கட்சி மாறும்-ரணில்
ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கையாளும் சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறும் என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியப்பட்டுள்ளதன் மூலம் முழு பொது எதிர்க்கட்சியும் வலுவடைந்துள்ளது.
தனிப்பட்ட ரீதியில் பாதுகாக்க எனக்கு வாரிசுகள் இல்லை. இதனால், இளைய சமூகத்தை பாதுகாப்பதே எனது எதிர்பார்ப்பு எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.