Breaking News

இலஞ்சத்தில் 85வது இடத்தை பிடித்தது இலங்கை


டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால்
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலின் 2014ஆம் ண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை 85ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 

175 நாடுகளை மையப்படுத்தியே 2014ஆம் ஆண்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிரண்டும் இடம்பிடித்துள்ளன. 


உலக வங்கி மற்றும் உலக பொருளாதார புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 



2013ஆம் ஆண்டில் 177 நாடுகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கை 91ஆவது  இடத்தைப் பிடித்திருந்தது. 



இந்த பட்டியலின்படி, உலகிலேயே ஆகக் குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக டென்மார்க்கும் ஆகக்கூடிய இலஞ்சம் பெறும் நாடாக சோமாலியாவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.