Breaking News

ஜனவாி 8க்குப் பின்னரும் நானே ஜனாதிபதி-ஆவேசமாக சொல்லும் மகிந்த

ஜனவரி 8க்குப் பின்னரும் தானே ஜனாதிபதி
என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு எம்பிலிப்பட்டியவில் நடந்த சந்தை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியவேளையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

எதிர்கட்சிகள் விசித்திரமான ஓர் கொடி போல ஒன்று கூடியிருப்பதாகவும் இதன்போது அவர கூட்டிக்காட்டினார். 

ரணிலும் சந்திரிக்காவும் தூதரகங்களுடன் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஹெம உறுமய ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறினார். 

அதைப்போல ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்போடும் ஒப்பந்தம் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறான நிலையில் சகோதரத்துவமாக கூடிய அரசாங்க கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு தாம் வெற்றி பெறுவதாக அவர் தெரிவித்தார். 

நானே அடுத்த ஜனாதிபதியும் என தெரிவித்த மகிந்த ராஜபக்ச ஜனவரி 8க்குப் பிறகும் நான்தான் ஜனாதிபதி என்றும் அதைக் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை என்றும் மேலும் குறிப்பிட்டார்.