Breaking News

போரின் 75சதவீத வெற்றி என்னுடையது-சந்திரிக்கா

விடுதலைப் புலிகளுடனான போரின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 
 
எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மாத்தறையில் நேற்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த போரை நடத்தியதும் அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. போரின் 75 சதவீதமானவை எங்களது, நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ச அரசு வெற்றிகண்டது. இருப்பினும்,யுத்தம் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே' என அவர் மேலும் தெரிவித்தார்.