Breaking News

அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசிய சிரியா- 52பேர் பலி

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பகுதியில் சிரியா போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 52 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.


இதற்கிடையே சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதில் ஜனாதிபதி அசாத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணத்தில் குயாபசீன் அருகேயுள்ள அல்பாப் நகரின் மீது சிரியா போர் விமானங்கள் நேற்று முன்தினம் சரமாரி குண்டுகளை வீசி தாக்கின.

அயர்ந்து உறங்கி கொண்டிருந்த மக்கள் மீது பேரல் குண்டுகள் மற்றும் ஸ்டீல் குண்டுகள் போன்றவை வீசப்பட்டன.அதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின, இத்தாக்குதலில் பொதுமக்கள் 52 பேர் பலியாகினர், 200 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தகவலை சிரியா கண்காணிப்பு குழுவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் சிரியாவில் கடந்த 3 நாட்களாக 470 தடவை குண்டு வீச்சு நடந்துள்ளதாகவும், அதில் பொதுமக்கள் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.