தேர்தல் குறித்து 34 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 34 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அதில் 10 முறைப்பாடுகள் பாரதூரமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு, அச்சுறுத்தல் மற்றும் சொத்து சேதம் ஏற்படுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலுடன் தொடர்புடைய சிறிய சம்பவங்கள் குறித்து 24 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் அதில் 4 சம்பவங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
அரச சொத்துக்கள் பயன்பாடு, அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுதல், இடமாற்றம் வழங்கல் மற்றும் சட்டவிரோத போஸ்டர் கட்அவுட் போன்றவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.