Breaking News

மைத்திரியின் ஆதரவாளர்களுக்கு நேர்ந்த கதி!!

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள்
27 பேரின் தொலைபேசி அழைப்புகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மகிந்த பாலசூர்ய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த பிரிவில் பணியாற்றுபவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக- ஒரு பிரிவிற்கு எட்டு மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் தொலைபேசி உரையாடல்களை கேட்டு பதிவுசெய்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக முக்கிய பிரமுகர்கள் பலரின் தொலைபேசி உரையாடலை இடைமறித்துகேட்ட போதிலும் அரச புலனாய்வு பிரிவினர் இறுதிவரை பொதுவேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்காதது அவர்களுக்கு அரசாங்கத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய அரசியல்வாதிகளின் தொலைபேசிஉரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் போன்றவற்றை இடைமறித்தபோதிலும் தங்காளல் சந்தேகத்திற்கு இடமான எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என தெரிவித்த அரச புலனாய்வு பிரிவின் தலைவர் மீது ஜனாதிபதி சீற்றம்கொண்டு தாக்க முயன்றதாகவும், அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.