Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-16 (காணொளி)

கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்து மட்டக்களப்பு
அம்பாறை மாவட்டங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் இறங்கினார்கள்.

2004 ஆண்டு 3ம் திகதி, கருணவின் பிரிவு தொடர்பான கடிதங்கள், அறிக்கைகளாகவும், செய்திகளாகவும், ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

உலகத் தமிழினத்தின் இதயத்தில்; இரத்தத்தை வரவளைக்கும்படியான ஒரு கடிதத்தை, கருணா, விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அனுப்பிவைத்தார். கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளின் மீதுதான் அந்த கடிதங்கள் வரையப்பட்டிருந்தன. 

கிழக்கு மாகான மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில், அந்த இரண்டு கடிதங்களும் மிக மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பிரதேசவாதப் பூதத்தை கிழப்பிவிடும் வகையில் அந்தக் கடிதங்கள், கச்சிதமாகத் திட்டமிட்டு வரையப்பட்டிருந்தன. 

அதேவேளை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களையும், அந்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களையும் ஒரு மிகப் பெரிய துரோகத்தின் அடையாளமாக மாற்றிவிடக் கூடிய ஆபத்தை அந்தக் கடிதங்கள் ஏற்படுத்தியிருந்தன.

அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.



முன்னைய பதிவுகள்