இந்தோனேசியாவில் 14 இலங்கையர்கள் கைது
கடவுச்சீட்டுக்கள் அற்றநிலையில், இந்தோனேசிய அதிகாரிகளால் 14 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் பெலாவன் என்ற பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவுக்கு பிரவேசிக்க முற்படும்போதே கைதாகியுள்ளனர்.கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.