நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்-மைத்திரி
நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடி வருவதாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஹக்மன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படும்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மேம்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இந்த அரசாங்கம் மக்களின் பொருளாதாரம் பற்றி கவனம் செலுத்தத் தவறியுள்ளது.100 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் காலத்தில் மட்டும் நிவாரணங்களை வழங்க உத்தேசித்துள்ளார்.அபிவிருத்திக்காக சகல விடயங்களும் அர்ப்பணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறான நிலைமை கிடையாது.
அபிவிருத்தி என்று பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் பணம் முழுவதும் ஆட்சியாளர்களின் பொக்கட்களுக்கே சென்றது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்