Breaking News

பூவே பூவே காந்தள்ப் பூவே

பூவே பூவே காந்தள்ப் பூவே
பூவே பூவே காந்தள்ப் பூவே

சரணம் 1

செந்தமிழீழத் திசைகள் தோறும் சிரித்தாய் பூவே
சிந்தை நிறைந்த தேசியப் பூவாய் சிலிர்த்தாய் பூவே
நெஞ்சு கலந்த தமிழரின் வீரம் போற்றிடும் பூவே -இதழ்
நஞ்சு சுமந்து மாவீரர் சபதம் ஏற்றிடும் பூவே



பூவே பூவே காந்தள்ப் பூவே
பூவே பூவே காந்தள்ப் பூவே

சரணம் 2

தாய்த்தமிழீழத் தலைவர் மனதில் பதிந்தாய் பூவே
தமிழர்கள் வாழ்வில் தனித்துவமாக நிமிர்ந்தாய் பூவே
வீறுகொண்டெழுந்த வேங்கையர் தாகம் அறிந்தாய் பூவே
விழிமுடித் தூங்கும் வீரருக்காக விரிந்தாய் பூவே  

பூவே பூவே காந்தள்ப் பூவே
பூவே பூவே காந்தள்ப் பூவே

- கலை மகள் -