Breaking News

சூடான ஆடுகளம் ஏ.எல்.நிப்றாஸ்


பொது வேட்­பாளர் அறி­விக்­கப்­பட்ட பின்னர் 
“கண்ணா நீயும் நானுமா?” என்ற பாடல் அடிக்­கொரு தடவை ஞாப­கத்­திற்கு வரு­கின்­றது. நீங்கள் அத்­தனை பேரும் உத்­த­மர்­தானா சொல்­லுங்கள் என்ற பாடலும் இடைக்­கிடை மேற்­கி­ளம்­பு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்தல் களம் இவ்­வ­ளவு சூடாக இருக்கும் என்று ஆளும் கட்­சி­யினர் மட்­டு­மன்றி எதி­ரணி கூட்டுக் கட்­சி­களும் கூட நினைத்­தி­ருக்க மாட்­டார்கள். ஜனா­தி­பதி தேர்தலில் வெற்றி பெறு­வது மிகச் சுல­ப­மான காரியம் என்றும் அதற்­கான ராஜதந்­தி­ரங்கள் எல்லாம் தம்­மிடம் கைநி­றைய என்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு நினைத்துக் கொண்­டி­ருந்­தது. 

மறு­பு­றத்தில் கிட்­டத்­தட்ட ஒரு தசாப்­த­காலம் ஆட்சி செய்­து­விட்ட ஒரு ஜனா­தி­ப­தியை தோற்­க­டிப்­ப­தற்கு எதிர்க்­கட்­சிகள் ஒரு பொருத்­த­மான பொது வேட்­பா­ளரை தேடிக் கொள்ள முடி­யாமல் தலையைப் போட்டு பிய்த்துக் கொண்­டி­ருந்­தன. இதனால் மூன்­றா­வது தட­வை­கூட தற்­போ­தைய ஜனா­தி­ப­தியை வெல்ல முடி­யாத நிலை தோன்­றி­வி­டுமோ என்ற அச்சம் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐ.தே.க.வை வெகு­வாக ஆட்­டிப்­ப­டைத்­தது. 

முன்­கதை சுருக்கம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியில் பிர­த­ம­ராக இருந்த தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 2005ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யானார். தன்­னு­டைய பதவிக் காலம் முடி­வ­டை­வ­தற்கு ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் இருந்த நிலை­யி­லேயே 2010 முற்­ப­கு­தியில் மீண்டும் ஜனா­தி­பதித் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றார். 

இருப்­பினும் அவ்­வ­ருடம் நவம்பர் 19ஆம் திக­தியே இரண்­டா­வது பதவிக் காலத்­திற்­காக சத்­தியப் பிர­மாணம் செய்து கொண்டார். 2010 ஜனா­தி­பதித் தேர்தல் வெற்­றிக்கும் பத­வி­யேற்­புக்கும் இடைப்­பட்ட காலத்தில் மிகப் பெரிய காரியம் ஒன்றை செய்து முடித்தார் மஹிந்த ராஜ­பக் ஷ. அதா­வது மூன்­றா­வது முறையும் ஜனா­தி­பதி தேர்தலில் போட்­டியிட இட­ம­ளிக்கும் 18ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றினார். 

விடு­தலைப் புலி­களை ஆயுத ரீதி­யாக தோற்­க­டித்து வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த வெற்­றியை அவர் பெற்­றி­ருந்தார். இது, இதற்கு முன்னர் இருந்த அர­சாங்­கங்­க­ளாலும் ஜனா­தி­ப­தி­க­ளாலும் சாத்­தி­யப்­ப­டாமல் போன ஒரு முயற்சி என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பிற்­கா­லத்தில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளாக நேரிட்­டாலும் கூட, புலி­களின் பிளவின் பின்னர் ஏற்­பட்ட கள­நி­லை­மை­களை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு ஏதோ ஒரு­வி­த­மான வறட்டு தைரி­யத்தில் அல்­லது எகத்­தா­ளத்தில் படை ­ந­ட­வ­டிக்­கையை மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் முன்­கொண்டு சென்­றி­ருக்­கா­விட்டால் புலி­களை தோற்­க­டிப்­பது அப்­போது சாத்­தி­ய­மாகி இருக்­காது. 

யுத்த களத்­திற்கு பொறுப்­பான முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியை விடவும் புலி­களை தோற்­க­டிப்­பதில் பாது­காப்பு அமைச்­ச­ரான மஹிந்த ராஜ­பக் ஷவின் பங்­க­ளிப்பே முக்­கி­ய­மா­னது என்று மக்கள் கரு­தி­னார்கள் என்­ப­தற்கு பொன்­சே­காவின் தோல்­வியும் ஒரு அத்­தாட்சி. 2010 இல் மஹிந்த இரண்­டா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றது யுத்­த­மற்ற ஒரு தேசத்­தி­லாகும். அதற்குப் பின்னர் நாட்டில் பல முக்­கிய பணிகள் செய்து முடிக்­கப்­பட வேண்­டி­யி­ருந்­தன. 

குறிப்­பாக இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கமும் நாட்டின் பௌதீக அபி­வி­ருத்­தியும் அதில் குறிப்­பி­டத்­தக்­கவை. அந்த வகையில் கடந்த 4 வரு­டங்­களில் நாட்டில் சிறப்­பான அபி­வி­ருத்தி ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வ­ளவு கால­கெ­தியில் இத்­தனை அபி­வி­ருத்தி திட்­டங்­களை செய்து முடித்­தமை பாராட்­டப்­பட வேண்­டி­யதே. 

ஆனால், இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் பெரிதாக முன்­னேற்றம் காண­வில்லை என்­பதே பொது­வான அபிப்­பி­ராயமாகும். இதற்கு முக்­கிய காரணம் இன­வாத சக்­திகளின் கைகள் மேலோங்­கி­ய­மை­யாகும். கடந்த மூன்று வரு­டங்­க­ளாக பொது பல­சேனா போன்ற அமைப்­புக்கள் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­களை பர­வ­லாக பிர­யோ­கித்து வரு­கின்­றன. 

இந்­நாட்டின் முத­லா­வது சிறு­பான்மை இன­மான தமி­ழர்­க­ளு­ட­னான நல்­லு­றவை முன்­னி­லைப்­ப­டுத்தும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சுகள் அப்­ப­டியே கிடப்பில் கிடக்க, மறு­பு­றத்தில் இரண்­டா­வது சிறு­பான்மை இன­மான முஸ்­லிம்கள் மீது இன­வாதம் சொல்­லொண்ணா வன்­மு­றைகளை கட்­ட­விழ்த்து விட்­டது கண்­கூடு. இவ்­வா­றான சக்­திகள் பெரும்­பான்மை சமூ­கத்­திற்கும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் இடையில் குழப்­பத்தை உண்­டு­பண்ணி குளிர்­காய முற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

இருப்­பினும் அர­சாங்கம் இந்த சக்­தி­க­ளுக்கு எதி­ராக சிறு­பான்மை மக்கள் திருப்­திப்­படும் அள­வுக்கு சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இந்த இலட்­ச­ணத்தில் போருக்குப் பின்­ன­ரான இன நல்­லி­ணக்கம் என்­பது எவ்­வா­றி­ருக்கும் என்­பதை தனி­யாகச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. இதற்குப் புறம்­பாக பொது­வாக சிங்­கள மக்­க­ளாலும் பெரும்­பான்மை கட்­சி­க­ளாலும் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்ற விடயம் குடும்ப ஆட்­சி­யாகும். 

எதிர்க்­கட்­சி­க­ளுக்கு இது நல்­ல­தொரு பேசு­பொ­ரு­ளாக இருக்­கின்­றது. நிறை­வேற்று அதி­கா­ரத்­தையே ஒழிக்க வேண்­டு­மென குரல்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் குடும்ப அர­சி­யலின் கையும் மேலோங்கிக் காணப்­ப­டு­வதை பல­ராலும் பொறுத்துக் கொள்ள முடி­ய­வில்லை. இந்­தி­யா­வுக்கு தலை­யையும் சீனா­வுக்கு வாலையும் காட்டிக் கொண்­டி­ருக்­கின்ற இலங்கை அர­சாங்கம், மேற்­கு­லக நாடு­க­ளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பான கோரிக்­கை­க­ளையும் பெரிதாக கணக்கில் எடுக்­க­வில்லை என்றே கூற வேண்டும். 

இதனால் மேற்­கு­லக நாடு­களும் சிறிய நாடுகள் வளர்ச்­சி­ய­டையக் கூடாது என நினைக்கும் நாடு­களும் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஒன்­றினை அவாவி நிற்­கின்­றன என்­பது உல­க­றிந்த ரக­சியம். எதிர்க்­கட்­சியின் வங்­கு­ரோத்து ஆனால் உள்­நாட்டு அர­சி­யலில் கடந்த 9 வரு­டங்­க­ளாக ஆட்சி மாற்றம் ஒன்­றுக்கு ஏது­வான கள­நி­லை­மைகள் ஏற்­ப­ட­வில்லை. இதற்கு முக்­கிய காரணம் பிர­தான எதிர்க்­கட்­சியின் வங்­கு­ரோத்து நிலை­யாகும். 

இந்த நாட்டை 27 வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக ஆட்சி செய்த ஐக்­கிய தேசியக் கட்சி கடந்த ஏழெட்டு வரு­டங்­க­ளாக கடு­மை­யான சரிவை சந்­தித்­தி­ருக்­கின்­றது. அக்­கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளாக இருந்த 15 இற்கும் மேற்­பட்டோர் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புக்கு கட்சி தாவி பத­வி­களை பெற்று விட்­டனர். இந்த கட்­சி­தாவல் கூட்­ட­மைப்பை எந்­த­ள­வுக்கு பலப்­ப­டுத்­தியதோ அதை­விடவும் பல­மான வீழ்ச்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஏற்­ப­டுத்­தி­யது. 

பல­மி­ழந்து போன ஒரு கட்­சி­யையும் கட்­டுக்­கு­லைந்து போன உறுப்­பி­னர்­க­ளையும் வைத்துக் கொண்டு கட்­சியை முன்­கொண்டு செல்ல வேண்­டிய நிலையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருந்தார். ஜென்­டில்மேன் அர­சி­யல்­வா­திதான் என்­றாலும் மஹிந்­தவில் காணப்­பட்ட எதுவோ ஒரு ஆளுமை ரணி­லிடம் இருக்­க­வில்லை என்­பதால் கட்சி காலத்தை கடத்த வேண்­டி­யு­மி­ருந்­தது. ஆளும் கட்­சியை சரி­யாக வழி­ந­டத்­து­வதில் 50 வீத­மான பங்கு எதிர்க்­கட்­சிக்கு இருக்­கின்­றது. 

ஆனால், அக்­கட்சி உள்­ள­க­மாக பல­மற்றுப் போன­மையால் இப்­ப­ணியை சரி­யாக செய்­ய­வில்லை. நல்­ல­தொரு எதிர்க்­கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்சி தம்மை பலப்­ப­டுத்­தி­யி­ருக்­கு­மானால் எந்­த­வித ஆர­வா­ரங்­களும் இன்றி ஆட்­சி­மாற்றம் ஒன்றை கொண்டு வரு­வ­தற்­கான சாதக நிலை­மை­களும் அதி­க­ரித்­தி­ருக்கும். குறைந்த பட்சம் ஒரு பொது வேட்­பா­ள­ரை­யேனும் கட்­சிக்குள் இருந்து முன்­மொ­ழிந்­தி­ருக்­கலாம். 

ஆனால் 9 வரு­டங்கள் ஆட்சி புரிந்த ஒரு ஜனா­தி­ப­தியை மூன்­றா­வது தட­வை­யேனும் தோற்­க­டிப்­ப­தற்கு ஆள் தேடிப் பிடிக்க வேண்­டிய நிலை­யில்தான் பிர­தான எதிர்க்­கட்சி இருந்­தது. ஆக மொத்­தத்தில் இன்று இலங்­கையில் மாற்­றத்தை வேண்­டி­நிற்கும் அர­சியல் கலா­சாரம் ஒன்று இருக்­கின்­றது என்று கரு­தினால், அதற்கு கணி­ச­மான பொறுப்பை ஐக்­கிய தேசிய கட்­சியே ஏற்க வேண்­டி­யி­ருக்கும். 

இலங்­கையில் ஜனா­தி­பதித் தேர்தல் பற்­றிய பேச்­சுக்கள் பல மாதங்­க­ளுக்கு முன்­னரே ஆரம்­பித்­து­விட்­டன. இருப்­பினும் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்கு சகுனம் சரி­யில்லை என்­பதால் தேர்தல் ஒன்­றிற்­கான அறி­விப்பு வெளியா­காது என்றே பலரும் கரு­தி­யி­ருந்­தனர். அவ்­வாறு தேர்தல் ஒன்று இடம்­பெற்­றாலும் அது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தலா­கவே இருக்கும் என்றும் சிலர் அபிப்­பி­ரா­யப்­பட்­டனர். 

கள­நி­லை­மைகள் சரி­யில்­லாத ஒரு சூழலில், கடந்த முறை போன்று தமது ஆட்­சிக்­கா­லத்தை ஜனா­தி­பதி மஹிந்த முன்­கூட்­டியே முடி­வுக்கு கொண்­டு­வர விரும்­ப­மாட்டார் என்­பதே மேலோட்­ட­மாக நோக்கும் அவ­தா­னி­களின் கணிப்­பாக இருந்­தது. ஆனால் அந்தக் கணிப்பு பிழை­யாகிப் போனது. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை அறி­மு­கப்­ப­டுத்­திய ஜே.ஆர். ஜெய­வர்த்­தன அதன் பலா­ப­லன்­களை அனு­ப­வித்­து­விட்டே கதி­ரையை விட்டு இறங்­கினார் என்­பது வர­லாறு. 

அது­போல மூன்று முறை ஜனா­தி­ப­தி­யாக போட்­டி­யிட முடியும் என்ற திருத்­தத்தை இவ்­வ­ளவு பாடு­பட்டு கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷவும் அதன் பலா­ப­லன்­களை சுகிக்க விரும்­பி­யதில் ஆச்­ச­ரி­ய­மேதும் இல்லை. இன்னும் காலம் சென்றால் நிலை­மைகள் இதை­விட மோச­மா­கி­விடும் என்ற எண்ணம் உட்­பட அதற்கு அப்­பா­லான வேறு கார­ணங்­களும் இருந்­தி­ருக்­கலாம். 

எனவே, ஆணை கிடைத்தால் 2016 வரை கோலோச்­சு­வது அல்­லது இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னமே கதி­ரையை விட்டு இறங்­கு­வது என்ற முடி­வி­லேயே மஹிந்த ராஜ பக் ஷ தேர்தலுக்­கான அழைப்பை விடுத்­துள்ளார். தேர்தலுக்­கான அழைப்பு மஹிந்த ராஜ­பக்ஷ மூன்­றா­வது தட­வையும் போட்­டி­யி­டு­வ­தற்கு சட்­டத்தில் தடைகள் இல்லை என்று உயர்­நீ­தி­மன்றம் வியாக்­கி­யானம் வழங்­கி­யது. 

இதனால் எதிர்க்­கட்­சிகள் சற்று தடு­மா­றித்தான் போயின. அதன் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றை நடத்­வ­தற்­கான உத்­தி­யோ­க­பூர்வ பிர­க­ட­னத்தில் ஜனா­தி­பதி மஹிந்த இம்­மாதம் 20ஆம் திகதி பிற்­பகல் 1.18இற்கு கைச்­சாத்­திட்டார். தொலை­நகல் மூலம் இதனைப் பெற்றுக் கொண்ட தேர்தல்கள் ஆணை­யாளர் நாயகம் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி வாக்­க­ளிப்பு இடம்­பெறும் எனவும் டிசம்பர் 8ஆம் திக­தி­வரை வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்றும் அறி­வித்­தி­ருக்­கின்றார். 

எதிர்க்­கட்­சிகள் பல ஒன்­றி­ணைந்து பொது வேட்­பா­ளரை நிறுத்­து­வது தொடர்பில் நீண்ட நாட்­க­ளாக மந்­தி­ரா­லோ­ச­னை­களை நடத்தி வரு­கின்­றன. ஆனாலும் யாரை பொது வேட்­பா­ள­ராக தெரிவு செய்­வது என்­பதில் கடைசித் தருணம் வரைக்கும் இழு­ப­றி­யா­கவே இருந்­தது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொது வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டால் கூட அவர் வெற்றி பெறு­வ­தற்­கான நிகழ்­த­க­வுகள் மிகக் குறை­வா­கவே காணப்­பட்­டன. 

எவ்­வா­றி­ருப்­பினும் பொது­வேட்­பாளர் பட்­டி­யலில் ரணிலின் பெயரும் பரி­சீ­ல­னையில் இருந்­தது. முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் கடந்த முறை தோற்­க­டிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான சரத் பொன்­சே­கா­வுக்கு தேர்தலில் போட்­டி­யி­டு­வதில் சட்­டப்­பி­ரச்­சினை காணப்­பட்­டது. அதே­வேளை மஹிந்­தவை எதிர்த்து நிற்­ப­தற்கு சஜித் பிரேமதாச, மங்­கள சம­ர­வீர போன்­றோர் சரிப்­பட்டு வர­மாட்­டார்கள் என்­பது எதிர்க்­கட்சித் தலை­வர்­க­ளுக்கு தெட்­டத்தெளி­வாக புல­னா­கி­யது. 

எனவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஐ.தே.க. தலை­மைத்­துவ சபையின் தவி­சாளர் கரு ஜய­சூ­ரிய மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆகி­யோரே பொது வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. இம் மூவ­ரிலும் மஹிந்­தவை எதிர்ப்­ப­தற்­கான மிகச் சிறந்த தெரிவாக சந்­தி­ரிகா இருந்தார் என்றால் பொய்­யில்லை. குறிப்­பாக முஸ்­லிம்கள் சந்­தி­ரி­காவின் ஆட்­சிக்­காலம் பற்றி நல்­ல­தொரு மனப்­ப­திவை கொண்­டி­ருக்­கின்­றனர். 

எனவே சந்­தி­ரிகா போட்­டி­யிட்டால் கணி­ச­மான முஸ்­லிம்­களும் ஆத­ர­வ­ளித்­தி­ருப்­பார்கள். மஹிந்த ராஜ­பக் ஷ வுக்கு சவா­லாக அமையக் கூடிய ஒரு தெரிவா­கவும் சந்­தி­ரிகா இருந்­தி­ருப்பார். இவ்­வாறு சந்­தி­ரிகா வெற்­றி­பெற்­றி­ருந்தால், மஹிந்த கொண்­டு­வந்த 3ஆவது தடவை போட்­டி­யிடும் வரப்­பி­ர­சா­தத்தை அம்­மை­யாரே முதலில் அனு­ப­வித்­தி­ருப்பார். ஆனால் அதில் சிக்­கல்­களும் இருந்­தன. அதா­கப்­பட்­டது - உயர் நீதி­மன்றம் வழங்­கிய வியாக்­கி­யான ஆவ­ணத்தை ஆளும் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கவோ அல்­லது பகி­ரங்­கப்­ப­டுத்­தவோ இல்லை. 

இது பல்­வேறு சந்­தே­கங்­க­ளுக்கும் ஊகங்­க­ளுக்கும் வழி­கோ­லி­யது. சந்­தி­ரிகா போட்­டி­யிட இந்த வியாக்­கி­யா­னத்தில் மறை­முக தடைகள் இருக்­குமோ என எதிர்க்­கட்­சிகள் சந்­தே­கித்­தன. இளைப்­பா­றிய ஜனா­தி­பதி 3ஆவது தடவை போட்­டி­யிட முடி­யாது என்று அல்­லது 18ஆவது திருத்­தத்­திற்குப் பின்னர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற நபரே 3ஆவது முறை போட்­டி­யிடும் தகு­தியை பெறுவார் என்று ஏதேனும் வாசகம் உள்­ள­டங்கி இருக்­கலாம் என்றும் அத­னா­லேயே ஆளும் கட்சி அதனை மறைத்து வைத்­தி­ருக்­கின்­றது என்றும் ஊகங்கள் வெளியா­கின. 

பொது வேட்­பாளர் யார் என்­பது இழு­ப­றி­யாக இருந்­து­கொண்­டி­ருந்த பின்­பு­லத்தில், தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்­னரே வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார் என்று ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்ந்து சொல்லிக் கொண்­டி­ருந்­தது. பிர­தான எதிர்க்­கட்­சிக்குள் இருந்தோ, பல எதிர்க் கட்­சி­களின் கூட்­ட­ணிக்குள் இருந்தோ ஒரு வேட்­ப­ளரை தெரிவு செய்ய முடி­யா­த­வர்கள் எப்­படி வெற்றி பெறப் போகின்­றார்கள்? என்று அர­சாங்கம் எள்ளி நகை­யாடிக் கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே அது நடந்­தது. 

ஜனா­தி­பதி தேர்தல் நடத்­து­வ­தற்­கான அழைப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெளிப்­ப­டுத்திய மறுநாள் அதா­வது கடந்த 21ஆம் திகதி இந்தக் கதைக்குள் மைத்­தி­ரி­பால சிறி­சேன நுழைந்தார். அது­மட்­டு­மன்றி, அவரே பொது வேட்­பாளர் என்றும் எதிர்க்­கட்­சிகள் ஏக­ம­ன­தாக அறி­விப்புச் செய்­தன. இந்த நகர்வை ஆளும் கட்சி கொஞ்­சமும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. இந்த அறி­விப்பு அர­சாங்­கத்தின் கீழ்­மட்டம் தொடக்கம் மேலிடம் வரைக்கும் அனை­வ­ரையும் தூக்கி வாரிப் போட்­டது. 

47 வரு­டங்­க­ளாக சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­தி­ருக்­கின்ற கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­சரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரு­மான ஒருவர் மேற்­சொன்ன எல்லா பத­வி­க­ளோடும் சென்று எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக தம்மை பிர­க­டனம் செய்து கொள்­வது என்­பது லேசு­பட்ட விட­ய­மல்ல. பொது வேட்­பாளர் என்­கின்ற கதைக்குள் ஒரு வாரத்­திற்கு முன்­னரே மைத்­தி­ரியின் பெயர் உலா­வந்­தது. ஆளும் கட்­சியின் முக்­கிய தூண் என்­பதால் யாரும் அதனை நம்­ப­வில்லை. 

தேர்தல் அறி­விப்பு வெளியா­வ­தற்கு இரு தினங்­க­ளுக்கு முன்னர் நீங்கள் கட்சி தாவு­கின்­றீர்­களா? என்று சிறி­சே­ன­விடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வின­விய போது சிரித்து மழுப்­பி­ய­தாக பத்­தி­ரி­கைகள் செய்தி வெளியிட்­டன. மறுநாள் ஜனா­தி­பதி அழைத்து முக்­கிய பொறுப்பை அவ­ருக்கு வழங்­கினார். இருப்­பினும் தேர்தல் அறி­விப்பு வெளியான பிறகு பத்­த­ர­முல்­லையில் வைத்து மைத்­தி­ரி­பால தெரிவித்த கருத்­துக்கள் புல­னாய்வுப் பிரி­வினர் ஊடாக ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு சொல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும். 

அடுத்த ஒரு மணி­நே­ரத்தில் மைத்­தி­ரியை அழைத்துப் பேசினார் ஜனா­தி­பதி. உள்ளே என்ன நடந்­ததோ தெரியாது, வெளியே வந்த மைத்­திரி தனது குழு­வி­ன­ருடன் சேர்ந்து அதிர்ச்சி வைத்­தியம் ஒன்றை செய்தார். அதி­ரடி நட­வ­டிக்கை கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் 21ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணிக்கு இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேனா பொது வேட்­பா­ள­ராக தான் போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்தார். 

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா மற்றும் ராஜித சேனா­ரட்ண, துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட அமைச்­சர்கள் பலரும் சிறி­சே­ன­வுடன் கைகோர்த்­துள்­ளனர். பத­வி­யேற்று 100 நாட்­க­ளுக்குள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழித்தல், 18ஆவது திருத்­தத்தை நீக்­கு­வ­துடன் 17ஆவது திருத்­தத்தை மீள நடை­மு­றைப்­ப­டுத்தல், ரணிலை பிர­த­ம­ராக்கல் உள்­ளிட்ட பல்­வேறு வாக்­கு­று­தி­களை பொது வேட்­பாளர் இங்கு வழங்­கினார். 

சிறி­சே­னவைப் போலவே சந்­தி­ரிகா, ராஜித சேனா­ரட்ண ஆகி­யோ­ரி­னதும் உரை­களும் மிகவும் காத்­தி­ர­மான கருத்­துக்­களை உள்­ள­டக்­கி­ய­தாக காணப்­பட்­டன. மைத்­தி­ரி­பா­லவை வைத்து மஹிந்த ராஜ­பக் ஷ நடத்­து­கின்ற நாட­கமோ என்ற சந்­தேகம் எழும் அள­வுக்கு எல்லாம் திடு­தி­டுப்­பென நடந்­தன. ஆயினும், மைத்­தி­ரி­யுடன் சேர்ந்திருப்­ப­வர்­களை வைத்துப் பார்க்­கின்­ற­போது இதுவும் ஒரு­வித அர­சி­யலே என்­ற­போதும் நாட­க­மாக இருக்க முடி­யா­தென தோன்­று­கின்­றது. 

ஆளும் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக இருந்து கொண்டு எதிர்க்­கட்­சி­களின் கூட்­டணி சார்­பான பொது வேட்­பா­ள­ராக முன்­வ­ரு­வ­தற்கு ஒரு தில் இருக்க வேண்டும். மறு­பு­றத்தில் ஆளும்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒரு­வரை நம்பி அவ­ருக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொது வேட்­பாளர் அந்­தஸ்தை விட்டுக் கொடுத்­துள்ளார். ஆளும் கட்­சிக்குள் இருந்து ஒரு­வரை வெளியில் எடுத்து பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தினால் இன்னும் பலரை அங்­கி­ருந்து இழுத்­தெ­டுக்க முடியும் என்ற வியூகம் இங்கு கையா­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அத்­து­ர­லிய ரத்ன தேரர், சம்­பிக்க ரண­வக்க, உதய கம்­மன்­பில போன்­றோர் முன்­னமே அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுத்­து­விட்­டனர். உண்­மையில் இவர்­க­ளது தீர்­மா­னங்கள் கூட அர­சாங்­கத்தில் அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்­நி­லையில் வளர்த்த கடாவும் மார்பில் பாய்­வது அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் வெந்­த­புண்ணில் வேல் பாய்ச்­சு­வது போன்­றது. 

இதனை சமா­ளிக்க கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை ஆளும் கட்சி தற்­போது எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. சந்­தி­ரிகா அம்­மையார் பொது வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருந்தால் இதைப் போன்ற அல்­லது இதை­விட பல­மான சவாலை ஆளும்­கட்சி சந்­தித்­தி­ருக்­கலாம். ஆனால் ஆரம்­பத்தில் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்ட வேறெந்த அர­சி­யல்­வா­தியும் பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்தால் மந்­திர தந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்தி மஹிந்த ராஜ­பக் ஷ வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்­களே அதிகம் இருந்­தி­ருக்கும். 

இன்னும் ஒரு விதத்தில் சொன்னால் எதிர்க்­கட்­சி­களின் வெற்­றி­யி­லக்கு இன்னும் தூரத்தில் இருந்­தி­ருக்கும். ஆனால், மைத்­தி­ரி­பால திடீ­ரென உள்ளே வந்­ததால் ஆடு­களம் சூடு­பி­டித்­தி­ருக்­கின்­றது. மைத்­தி­ரியின் பக்கம் அலை­ய­டிப்­பதை பார்க்கும் போது, அர­சாங்கம் எதிர்­பார்த்­ததை காட்­டிலும் இப்­போது சவால் அதி­க­மா­கி­யுள்­ள­தாக தெரிகின்­றது. இன்னும் 20 இற்கு மேற்­பட்ட எம்.பி.க்கள் ஆளும் கட்­சியில் இருந்து பொது எதி­ர­ணியின் பக்கம் தாவ இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

இது தவிர சில சிறு கட்­சிகள் தமது ஆத­ரவை ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டன. ஆளும் கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்த மக்கள் பிர­தி­நி­திகள் சிலரும் பொது எதி­ர­ணியை ஆத­ரிப்­ப­தில்லை என்று முடி­வெ­டுத்த சிலரும் தமது முடி­வு­களை இப்­போது மீள் பரி­சீ­லனை செய்து கொண்­டி­ருப்­ப­தாக அறிய முடி­கின்­றது. சிறு­பான்மை கட்­சி­களின் நிலை சிறு­பான்மை கட்­சி­களின் நிலைப்­பாடு இதில் முக்­கி­ய­மா­னது. முஸ்லிம் கட்­சி­களைப் பொறுத்­த­மட்டில் முஸ்லிம் காங்­கி­ரஸோ, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸோ இக்­கட்­டுரை எழு­தப்­படும் வரைக்கும் எந்த முடி­வையும் எடுக்­க­வில்லை. 

ஆளும் கட்­சியில் அமைச்­சர்­க­ளாக இருந்து கொண்டு ரவுப் ஹக்­கீமும், றிசாட் பதி­யு­தீனும் அக்­கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க இன்னும் முடி­வெ­டுக்­க­வில்லை என்­பது பல உள்­ளர்த்­தங்­களைக் கொண்­டது. தேசிய காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் அதா­வுல்லா மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை ஏற்­க­னவே அறி­வித்­து­விட்டார். 

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் நேர­டி­யாக சங்­க­மித்­தி­ருக்­கின்ற ஏனைய முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தனிப்­பட்ட அர­சியல் அடை­யா­ளமோ சமூக வேட்­கையோ இல்லை என்­பதால் காற்­ற­டிக்­கின்ற பக்கம் போய் தூற்றிக் கொள்­ளவே பெரிதும் விரும்­புவர். இது இவ்­வா­றி­ருக்க, தமிழ் கட்­சி­களின் நிலைப்­பாடும் இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. 

குறிப்­பாக அதிக வாக்குப்பலமுள்ள தனித் தமிழ் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து அவதானமாக இருக்கின்றது. ஒருவேளை ரணில் போட்டியிட்டிருந்தால் - போர் நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வந்தவர் என்ற நன்றிக் கடனுக்காகவும், புலிகளின் பேச்சைக் கேட்டு முன்னைய தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது விட்டமைக்கு பிராயச்சித்தம் செய்யும் வகையிலும் ரணிலை ஆதரிக்கும் முடிவை த.தே.கூட்டமைப்பு எடுத்திருக்கலாம். 

ஆனால் ரணிலின் ஆதரவை பெற்ற வேட்பாளர் என்பதற்காகவும் மஹிந்தவை எதிர்க்க வேண்டும் என்ற தோரணையிலும் எடுத்த எடுப்பில் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்ற முடிவுக்கு வரும் என கூற முடியாது. ஏனென்றால் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அநியாயம் இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ராஜித சேனாரட்ண, வாசுதேவ நாணயக்கார போன்றோர் குரல் கொடுத்த போதும் மைத்திரிபால அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு வாயை திறக்காத ஒருவராவார். 

பொது வேட்பாளரின் பக்கம் முன்னரை விட எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பதற்காக மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுவிடுவார் என்ற முடிவுக்கு வரமுடியாது. உண்மையில் அரசாங்கம் எதிர்பார்த்ததை விட சவால் அதிகரித்திருக்கின்றது என்பதே உண்மை. எனவே எப்பாடுபட்டாவது, என்ன தில்லுமுல்லுகளை பண்ணியாவது வெற்றிபெறுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கும். 

கொள்கைக்காகவும் அரசாங்கத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவும் மைத்திரிபால வெற்றி பெறுவார் என்பதற்காகவும் ஆளும் தரப்பில் இருந்து பலர் பொது எதிரணிப்பக்கம் வருவார்கள். அதற்கு பதிலாக பதவி ஆசை காட்டியும், செல்வங்களை வழங்கியும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தம்பக்கம் இழுத்தெடுக்கும் வேலைத்திட்டத்தை ஆளும் கட்சி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. 

நீதியானதும் நேர்மையானதுமான (?) ஒரு தேர்தல் ஒன்றுக்கு முன்னர் இதுவெல்லாம் சகஜமப்பா !