“வீரப் புயலே நீடு வாழ்க..”
வைரவிழாக் காணும்
வல்லை மண் ஈன்றெடுத்த
வரலாற்றின் நாயகனே
எல்லைகளில் எதிரிகளை
எரித்தொழித்த காவலனே
என் குடும்பம் என் உறவு
என் சுற்றம் என்றிராது
எம்மினத்தின் விடிலுக்காய்
எரிமலையாய் வெடித்தவன் நீ….!
வல்லை மண் ஈன்றெடுத்த
வரலாற்றின் நாயகனே
எல்லைகளில் எதிரிகளை
எரித்தொழித்த காவலனே
என் குடும்பம் என் உறவு
என் சுற்றம் என்றிராது
எம்மினத்தின் விடிலுக்காய்
எரிமலையாய் வெடித்தவன் நீ….!
விடுதலைக்காய் போர் தொடுத்த
வீரத் தமிழ் மறவா..
காலச் சக்கரத்துள் நீ
கலந்தழிந்து போகாமல்
எம்மினத்தை வேரறுக்க
வந்த கொடும் பகைவர்களை
வென்று வாகை சூடிய எம்
பெருந்தலைவன் நீயல்லவா?!
வீரத் தமிழ் மறவா..
காலச் சக்கரத்துள் நீ
கலந்தழிந்து போகாமல்
எம்மினத்தை வேரறுக்க
வந்த கொடும் பகைவர்களை
வென்று வாகை சூடிய எம்
பெருந்தலைவன் நீயல்லவா?!
உன் விரல் சுட்டும் திசை நோக்கி
விருப்போடு களமாட
ஆயிரமாயிரமாய் உன் பின்
அணி திரள்வர் எம் வீரர்
சங்கமமைத்து வளர்த்த
எம் தமிழ் மானம்
தலைவா உன் திறத்தாலே
தளைத்தோங்கி நின்றதிங்கே!
விருப்போடு களமாட
ஆயிரமாயிரமாய் உன் பின்
அணி திரள்வர் எம் வீரர்
சங்கமமைத்து வளர்த்த
எம் தமிழ் மானம்
தலைவா உன் திறத்தாலே
தளைத்தோங்கி நின்றதிங்கே!
வலியாக மாறியதெம்
வாழ்க்கைப் போராட்டம்
வரமாக வந்தாய் எம்
உரிமைக்காய் போர் செய்தாய்
தமிழ் வீரம் இதுவென்று
உலகிற்கு போதித்தாய்
தமிழ் வீரம் இது வென்று
உலகிற்கு போதித்தாய்
ஆகாயம் நிலம், நீர், காற்று
தீயையும் ஆண்டாய் நீ…!
வாழ்க்கைப் போராட்டம்
வரமாக வந்தாய் எம்
உரிமைக்காய் போர் செய்தாய்
தமிழ் வீரம் இதுவென்று
உலகிற்கு போதித்தாய்
தமிழ் வீரம் இது வென்று
உலகிற்கு போதித்தாய்
ஆகாயம் நிலம், நீர், காற்று
தீயையும் ஆண்டாய் நீ…!
புறத்தாலே எதிரிக்கு
விலைபோன வீணர்களால்
சதி தின்று போனதுவோ
எம் புனிதப் போரதனை
ஏதிலிகள் ஆகிவிட்டோம்
ஏளனங்கள் தாங்குகின்றோம்
எம் தலைவர் அருகின்றி
ஏதுமற்று வாழ்கிறோம்…!
விலைபோன வீணர்களால்
சதி தின்று போனதுவோ
எம் புனிதப் போரதனை
ஏதிலிகள் ஆகிவிட்டோம்
ஏளனங்கள் தாங்குகின்றோம்
எம் தலைவர் அருகின்றி
ஏதுமற்று வாழ்கிறோம்…!
உறவுகள் பல தொலைத்திங்கு
உருக்குலைந்து போகுது மனம்
தலைவா நீ அருகின்றி
தறிகெட்டுப்போகுது இனம்
சாசனங்கள் வரைகின்றனர்
சந்திப்புக்கள் செய்கின்றனர்
சத்தியமாய் எங்களுக்கென்று
சாதகமாய் ஏதுமில்லை..!
உருக்குலைந்து போகுது மனம்
தலைவா நீ அருகின்றி
தறிகெட்டுப்போகுது இனம்
சாசனங்கள் வரைகின்றனர்
சந்திப்புக்கள் செய்கின்றனர்
சத்தியமாய் எங்களுக்கென்று
சாதகமாய் ஏதுமில்லை..!
தலைவா நீ வாராயோ
தமிழர் தலை நிமிர வழி செய்யாயோ?
எம் உரிமைக்காய்ப் போராட
உலகத்திடம் பேரம்பேச
உனையன்றி யாருமில்லை
உணர்ந்தவரும் எவருமில்லை
வீரப்புயலே விரைந்துவா.. – எம்
விழி நீர் துடைக்க நிமிர்ந்துவா..
உன் விரல் சுட்டும் திசை வெல்லும் தமிழரணி..!
தமிழர் தலை நிமிர வழி செய்யாயோ?
எம் உரிமைக்காய்ப் போராட
உலகத்திடம் பேரம்பேச
உனையன்றி யாருமில்லை
உணர்ந்தவரும் எவருமில்லை
வீரப்புயலே விரைந்துவா.. – எம்
விழி நீர் துடைக்க நிமிர்ந்துவா..
உன் விரல் சுட்டும் திசை வெல்லும் தமிழரணி..!
நன்றி-தமிழ்லீடர்