லண்டனில் எழுச்சி பூர்வமாக நடை பெற்ற மாவீரர் நாள் 2014
லண்டனில் எக்சல் மண்டபத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் உணர்வு பூர்வமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. லண்டனில் வாழும் பல்லாயிரக் கணக்கான புலம் பெயர் தமிழ் மக்களும் மாவீரர்களின் பெற்றோர்களும், மாவீரர்களின் சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரர்களை தம் நெஞ்சிலே நிறுத்தி தீபங்களை ஏற்றி தம் கண்ணீர் அஞ்சலிகளையும் செலுத்தினர்.லண்டனில் மட்டுமல்லாது உலகில் ஒவ்வொரு பகுதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களும் மாவீரர் நாளை எழுச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.