கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-7 (காணொளி)
வரலாற்றுப் பழியை நீக்குவதற்காக அந்த மண்ணின் மைந்தர்கள் செலுத்திய விலை, அவர்கள் புரிந்த தியாகங்கள்- அனைத்துமே, அன்றைக்கு மாத்திரமல்ல, என்றைக்கும் அந்த மண் வீரம் விளை நிலம்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது.
கிழக்கு மக்களை முன்நிலைப்படுத்தி கருணா மேற்கொண்ட பிரதேசவாதச் சதியை, தலைவரின் வழி நடத்தலில் கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது, பலராலும் அறியப்படாத ஒரு முக்கியமான வரலாறு.
கருணாவை சமாளித்து, இந்தப் பிளவினைச் சரி செய்யும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு சமாதானத் தூதுக் குழவை அனுப்பும் முயற்சியில் இறங்கி; இருந்தது.
ஆனால், அந்த நேரத்தில் கருணா மேற்கொண்ட ஒரு மோசமான நடவடிக்கை, கருணாவுன் இனிப் பேசுவதில் பயனில்லை என்ற முடிவை விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது.
கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து நிரந்தரமாகவே நீக்கி, கருணாவுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை ஒன்றை புலிகள் அமைப்பு எடுப்பதற்கும்,
கருணாவின் அந்த நடவடிக்கை காரணமாக அமைந்திருந்தது.
கருணா என்ற தளபதி மீது கிழக்கின் போராளிகளுக்கும், மக்களுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த அந்த சம்பவம் பற்றிப் பார்க்கின்றது இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி
அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.