Breaking News

2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் I



2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 512 பில்லியன்
ரூபாய் துண்டு விழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1,689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2,210 பில்லியன் ரூபாவாகும். இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பான சுருக்கமான விளக்கங்களை முதலிலும் இதன் கீழே வரவு செலவுத்திட்டம் 2015 இன்முழுமையான விபரங்களையும் இணைத்துள்ளோம்.

தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களின் மாதாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

விமான நிலையப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திகளுக்காக 2015 - 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் முக்கியமான சில

பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் மற்றும் நீதிச்சேவை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படுகிறது.

வேலை வழங்குவோரினால் வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

அக்ரஹார காப்புறுதிக் கொடுப்பனவு ரூ. 500,000.அதிகரித்துள்ளது.

அரச ஊழியர்களுக்காக ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2,200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் காவல்துறை சேவையில் பிள்ளைகள் உள்ள பெற்றோருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாய் எதிர்வரும் 2015 இலிருந்து வழங்கப்படுகிறது.

ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதத்தால் குறைப்படுகிறது.

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படும்

முதியோர்களுக்கான கொடுப்பனவு 1,000 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வோருக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுயதொழிலாளர்கள் மற்றும் வீதியோர வியபாரிகளுக்கு கடன்வசதி வழங்கப்படும்.

பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக புதிய முறையிலான பாடசாலை மட்ட ஆசிரியர் நியமனத்திட்டம் முன்வைக்கப்படும்.

குழந்தைகளுக்கான பால்மா இறக்குமதி மீதான வரி நீக்கப்படுகிறது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் பிரிவு நிறுவப்படுகிறது.

ஊடகவியலாளருக்கு கடன் திட்டம் விரிவாக்கப்படவுள்ளதுடன், சமூர்த்தி பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

- குறைந்த வருமானமுள்ள குடும்பங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு 50,000 புலமைப்பரிசில்கள். ஒவ்வொருவருக்கும் 3,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கு 9,500 ரூபாய் மாதாந்தப்படி வழங்கப்படவுள்ளது.

மஹாபொல, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் 4000 ரூபாவினாலும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 1500 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பசும்பால் லீற்றருக்கான உத்தரவாத விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன் யோகட் ஆகியவற்றின் விலை குறைக்கப்படுகிறது.

முழுமையான விபரம்.

01. அறி­முகம்

1.1. மஹிந்த சிந்­தனை அபி­வி­ருத்­திக்­கான தேசிய தூர­நோக்கு வினால் வழி­ந­டத்­தப்­படும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பத்­தா­வது வரவு செலவுத் திட்­டத்­தினை இந்த பாரா­ளு­மன்­றத்­திற்கு இன்று சமர்ப்­பிப்­ப­த­னை­யிட்டு நான் பெரு­ம­கிழ்ச்சி அடை­கின்றேன்.

1.2. 2005 இல் எமது அர­சாங்­கத்­திற்கு கிடைத்­தது யுத்­தத்­தினால் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்ட சுனா­மி­யினால் அழி­வுற்ற பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட ஒரு நாடே. உட்­கட்­ட­மைப்­புகள் நாச­மாக்­கப்­பட்­ட­தனால் வளர்ந்து வரும் உலகப் பொரு­ளா­தார சூழ்­நி­லையில் தனித்து விடப்­பட்ட பொரு­ளா­தா­ரத்­தினைக் கொண்ட நாடொன்­றாக அது காணப்­பட்­டது. புதிய சந்­ததி ஒன்­றினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான ஆற்­றல்­களை வழங்­கு­வ­தற்கு முடி­யு­மான கல்வி காணப்­ப­ட­வில்லை.

சிறந்த வாழ்க்­கை­யினை நாடி உயர் தொழில் புரி­நர்கள் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­ற­தனால் மூளை­சா­லி­களின் வெளி­யேற்­றத்­தினை நாம் அவ­தா­னித்தோம். பல வரு­டங்­க­ளாக 50,000 இற்கு அதி­க­மான பட்­ட­தா­ரிகள் வேலை­வாய்ப்­பினை எதிர்­பார்த்­த­வர்­க­ளாக காத்­தி­ருந்­தனர். அர­சாங்க ஊழி­யர்கள் இழந்த ஓய்­வூ­திய உரி­மை­க­ளையும் சிறந்த சம்­ப­ளங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக எதிர்­பார்த்­தி­ருந்­தனர்.

1.3. உள்­நாட்டு உற்­பத்­திகள் காணப்­ப­டா­த­துடன் உணவு வழங்கல் முழு­மை­யாக வெளி­நாட்டில் தங்­கி­யி­ருந்­தது. நெற்­கா­ணிகள் நிரப்­பப்­பட்­டன. சிறிய தேயிலை தொழிற்­சா­லைகள் மற்றும் அரிசி ஆலை உரி­மை­யா­ளர்கள் முகாமை செய்து கொள்ள முடி­யா­த­ளவு கடனில் சிக்­கி­ய­தனால் அவற்­றினை இயற்­கை­யா­கவே மூடு­கின்ற நிலை ஏற்­பட்­டது.

1.4. 1985 இலி­ருந்து தொடர்ந்து வந்த அர­சாங்­கங்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த தனியார் மயப்­ப­டுத்தல் கொள்­கை­களின் கார­ண­மாக பெருந்­தோட்டக் கைத்­தொ­ழில்கள், உராய்வு நீக்கி எண்ணெய், வாயு, உருக்கு, மட்­பாண்­டங்கள், ரயர், சீமெந்து, தொலைத்­தொ­டர்பு, காப்­பு­றுதி, விமானச் சேவைகள் உள்­ள­டங்­க­லான பெரும் எண்­ணிக்­கை­யி­லான அர­சாங்க நிறு­வ­னங்கள் மற்றும் பெறு­மதி மிக்க அர­சாங்க ஆத­னங்கள் இக்­காலப் பகு­தியில் விற்­பனை செய்­யப்­பட்­டன.

வள­மிக்க புடவைத் தொழிற்­சா­லைகள் மூடப்­பட்­ட­துடன் சீனித் தொழிற்­சா­லைகள் செய­லி­ழந்த போது நாடு முழு­மை­யாக வெளி­நாட்டு வழங்­கல்­களில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. மக்கள் மயப்­ப­டுத்தல் என்ற பெயரில் பல்­வேறு கம்­ப­னிகள் உரு­வாக்­கப்­பட்ட போதிலும் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை மிக மோச­மாக செய­லி­ழந்து காணப்­பட்­டது. உள்­நாட்டு நிர்­மா­ணத்­துறை என்­று­மில்­லா­த­வாறு வீழ்ச்சி அடைந்­தது.

1.5. 1963 இலி­ருந்து காணப்­பட்ட வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு காணி­களை விற்­பனை செய்­வ­தனை மட்­டுப்­ப­டுத்தும் காணிச் சட்­டங்கள் 2002 –- 2004 காலப் பகு­தியில் ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்­தினால் நீக்­கப்­பட்­ட­துடன் முறை­யான வரி­யெ­துவும் செலுத்­தப்­ப­டாமல் வெளி­நாட்­ட­வர்கள் காணி­களை சொந்­த­மாக்­கு­வது அனு­ம­திக்­கப்­பட்­டது.

நாட்­டுக்கு அறி­முகம் இல்­லாத தாவர வர்க்­கங்­களை அறி­முகம் செய்­த­மை­யினால் இயற்கை சூழ­லிலும் கால­நி­லை­யிலும் மோச­மான தாக்கம் ஏற்­பட்­டது. முறை­யான வன சீவ­ரா­சிகள் பாது­காப்பு நிகழ்ச்சித் திட்­டங்கள் காணப்­ப­டா­மை­யினால் யானை –மனித பிணக்­குகள் ஏற்­பட்­டன. வர­லாற்று புகழ் மிக்க சமய மற்றும் கலா­சார தலங்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன. பிரி­வேனா கல்வி, சுதேச மருத்­துவம் மற்றும் விளை­யாட்­டுக்கள் என்­பன அர­சாங்­கத்தின் போதிய கவ­னத்­தினை ஈர்த்­தி­ருக்­க­வில்லை.

1.6. 1977 இலி­ருந்து வரவு செலவுத் திட்டப் பற்­றாக்­கு­றை­யா­னது வரு­ட­மொன்­றிற்கு ஏறக்­கு­றைய 10 சத­வீ­த­மாகக் காணப்­பட்­டது. இதனால் 2004 இல் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் படு­கடன் அதி­க­ரிப்பு 102 சத­வீ­த­மாக வளர்ந்து இருந்­தது. அர­சாங்க வங்­கிகள், புகை­யி­ரத சேவை, சுங்க திணைக்­களம் மற்றும் உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம் என்­ப­னவும் தனியார் மயப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தன.

அக்­கா­லத்தில் அந்­நியச் செலா­வணி விகிதம் வரு­ட­மொன்­றிற்கு 10 சத­வீ­தத்­தினால் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தமை பொது­வான விட­ய­மாக காணப்­பட்­டது. 2005 ஆம் ஆண்­ட­ளவில் 2 பில்­லியன் ஐக்­கிய அமெ­ரிக்க டொலர்­க­ளாக காணப்­பட்ட சர்­வ­தேச ஒதுக்­கா­னது நாட்டின் உணவு சக்தி மற்றும் தேசியப் பாது­காப்பு தேவைப்­பா­டு­க­ளினை நிவர்த்தி செய்­வ­தற்கு போதி­ய­தாக காணப்­ப­ட­வில்லை. இந்த நலி­வுற்ற பொரு­ளா­தார சூழலில் அக்­கா­லத்தில் இருந்த பிர­த­ம­ரினால் செய்து கொள்­ளப்­பட்ட சமா­தான உடன்­ப­டிக்கை கூட தொடர்ந்தும் மீறப்­பட்­ட­துடன் எல்.ரீ.ரீ.ஈ. யினர் நாட்­டினை மென்­மேலும் அழி­வுற்ற தேச­மாக மாற்­றி­யமை ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல.

1.7. இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக அர­சாங்க சேவை­களில் ஆட்­சேர்ப்பு செய்­யப்­ப­டா­தி­ருந்­த­தனால் கல்வி, சுகா­தாரம், விவ­சாய மற்றும் நீர்ப்­பா­சன அத்­துடன் ஏனைய சேவைகள் முழு­மை­யாக செய­லி­ழந்து காணப்­பட்­டன. கிரா­மியப் பாட­சாலைகள் ஆசி­ரி­யர்கள் இல்­லாது காணப்­பட்­ட­துடன் பெரும்­பா­லான பாட­சா­லைகள் மூடப்­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. வைத்­தி­ய­சா­லை­களில் மருத்­து­வர்கள், தாதிமார் மற்றும் ஏனைய அலு­வ­லர்கள் காணப்­ப­டா­மை­யினால் நோயா­ளிகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர்.

 அர­சாங்க ஊழி­யர்­களின் ஓய்­வூ­திய உரி­மைகள் பறிக்­கப்­பட்­டமை அர­சாங்க சேவை­களை நெறி பிரளச் செய்­தது. நெற் சந்­தைப்­ப­டுத்தல் சபை, கூட்­டு­றவு மொத்த விற்­பனை நிலையம், சந்­தைப்­ப­டுத்தல் திணைக்­களம் என்­பன மூடப்­பட்­ட­துடன் அத்­தி­யா­வ­சிய அர­சாங்க சேவை­களின் பொருள் வழங்கல் முகா­மைத்­து­வத்தின் தொழிற்­பா­டுகள் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டன.

1.8. இவற்­றினால் கிரா­மிய மக்­களும் குறை வரு­மானம் பெறு­நர்­களும் பெரும் துய­ரத்­தினை அனு­ப­வித்­தனர். சிறுவர் அபி­வி­ருத்­திக்­கான முன் பள்ளி மற்றும் சிறுவர் நட்பு பாட­சா­லைகள் காணப்­ப­ட­வில்லை. மாடி வீட்டுத் தொகு­திகள் புன­ர­மைக்­கப்­ப­டா­த­தனால் அவை உடைந்து விழும் நிலையில் காணப்­பட்­டன. பெரும்­பா­லா­ன­வர்­களின் வீட­மைப்பு மற்றும் துப்பு­ர­வேற்­பாட்டு தேவைகள் மிகவும் கீழ் மட்­டத்தில் காணப்­பட்­டன.

கொழும்பு நகரில் சில இடங்கள் கொலன்­னாவை, ஆட்­டுப்­பட்­டித்­தெரு, பெல்­லன்­வில போன்ற பிர­தே­சங்கள் குப்பை கொட்­டு­கின்ற இடங்­க­ளாக மாறின. கொழும்பு நகரம் அடிக்­கடி வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டது. கிராமப் புறங்­களில் மின்­சாரம் காணப்­ப­ட­வில்லை. நகர சேரிப் புறங்­களில் வாழ்­ப­வர்கள் மற்றும் பெருந்­தோட்ட ஊழி­யர்­களில் 50000 இற்கு அதி­க­மான குடும்­பங்கள் சிறந்த வீட்டு வச­தி­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

எல்.ரீ.ரீ.ஈ. பயங்­க­ர­வாதம் எமக்கு மிக அரு­கா­மையில் இருந்­த­தனை எம்மால் உணர முடிந்­தது. வடக்­கி­லுள்ள பலர் இடம் பெயர்ந்து அவ­லங்­க­ளுக்­குள்­ளான நிலையில் அகதி முகாம்­களில் வாழ்ந்து வந்­தனர். அப்­பி­ர­தே­சங்­களைச் சேர்ந்த பிள்­ளைகள் சிறுவர் போரா­ளி­க­ளாக மாறினர். பெருந்­தோட்ட மற்றும் கிரா­மிய சனத்­தொ­கையில் வறுமை நிலை 20 சத­வீ­தத்­திற்கு அதி­க­மாகக் காணப்­பட்­ட­துடன் சிறு­வர்கள் மிக மோச­மான போஷாக்கு குறை­பாட்­டினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

1.9. 2014 யூன் மாதத்தில் மொன­ரா­க­லையில் இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்­திற்கு முன்­ன­ரான மதி­யுரை கூட்­டத்தில் அமைச்சர் விஜித முனி சொய்சா மறைந்த பிர­பல கவிஞர் சாகர பலன்­சூ­ரியவின் பின்­வரும் கவி­தை­யினை வாசித்து காட்டி எமது கிரா­மிய மக்கள் எதிர்­நோக்கும் அவல நிலை­யினை சுட்­டிக்­காட்­டினார்.

1.10. மறைந்த டி.எம். ராஜபக் ஷவை அடி­யொட்டி வந்த எமது மறைந்த தந்தை டி.ஏ. ராஜபக் ஷ அரச பேர­வையில் இருந்த காலத்­தி­லி­ருந்து கிரா­மிய விவ­சாய சமூ­கத்­திற்­காக குரல் கொடுத்­த­துடன் விவ­சாய மற்றும் நீர்ப்­பா­சன செயற்­பா­டு­க­ளுக்கு நீங்­களும் முக்­கி­யத்­துவம் வழங்கி வரு­கின்­றீர்கள் என்ற வகையில் இந்த கவி­தை­களின் பின்­ன­ணியில் பொதிந்­தி­ருக்­கின்ற ஆழ­மான அர்த்­தத்­தினை நீங்கள் புரிந்து கொள்­வீர்கள் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

எமது பெறு­மதி மிக்க தலை­வர்­க­ளான மறைந்த கலா­நிதி எஸ்.ஏ. விக்­கி­ர­ம­சிங்க மறைந்த பிலிப் குண­வர்த்­தன, மறைந்த என்.எம். பெரேரா, மறைந்த கொல்வின் ஆர்.டி. சில்வா, மறைந்த சேர் வைத்­தி­ய­லிங்கம் துரை­சாமி, மறைந்த சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான், மறைந்த ரி.பி. ஜாயா, மறைந்த கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் அதே­போன்று எமது முதல் பிர­தமர் மறைந்த டி.எஸ். சேனா­நா­யக்க போன்ற தலை­வர்கள் கூட கிரா­மிய சமூ­கத்­தினை வலுப்­ப­டுத்தும் விவ­சாயப் பொரு­ளா­தா­ரத்­தினை ஊக்­கு­வித்­துள்ளனர்.

1.11. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த பிர­தமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கவின் கொள்­கை­யா­னது பஞ்ச மகா சக்­திகள் என்ற சமயத் தலை­வர்கள், ஆசி­ரி­யர்கள், மருத்­து­வர்கள், விவ­சா­யிகள் மற்றும் ஊழி­யர்கள் ஆகி­யோ­ரினை வலு­வூட்­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

உல­கத்தில் முத­லா­வது பெண் பிர­த­ம­ரான சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அம்­மையார் பாரிய கைத்­தொழில் மயப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­த­துடன் முன்­னேற்­ற­க­ர­மான காணி மறு­சீ­ர­மைப்­புக்­களை முன்­னெ­டுத்து அணி சேரா கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மூன்றாம் உலக நாடு­களின் குர­லாக செயற்­பட்­ட­துடன் மாத்­தி­ர­மல்­லாமல் பெண் சமத்­துவம் தொடர்­பாக காணப்­படும் மேலைத்­தேய எண்ணக் கரு­வினை விட நாம் முன்­ன­ணியில் நிற்­கின்றோம் என்­ப­தனை நிரூ­பித்துக் காட்­டினார்.

1982 இல் ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு மக்கள் மறைந்த ஹெக்டர் கொப்­பே­க­டுவவுக்கு ஆத­ரவு வழங்­கி­யதன் மூலம் உள்­நாட்டுப் பொரு­ளா­தாரம் தொடர்­பான சுதந்­திரக் கட்­சியின் கொள்கை நிலைப்­பாட்­டிற்கு அங்­கீ­காரம் வழங்­கினர். அத்தகைய பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட எமது சிறுவர்­களுக்கான நவீன பொருளாதாரம் ஒன்றினை கட்டியெழுப்புவது எமது பொறுப்பாக காணப்படுகின்றது.

1.12. 2005 இல் எமது அர­சாங்­கத்தின் மீது மக்கள் வைத்­தி­ருந்த எதிர்­பார்க்­கை­யா­னது பயங்­க­ர­வா­தத்­தினை வெற்றி கொள்­வதும் ஜன­நா­ய­கத்தை மீள பெறு­வ­து­மாக காணப்­பட்­டது. இரண்­டா­வது எமது மக்­களின் சுபீட்­சத்­தினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நவீன உட்­கட்­ட­மைப்பு வச­தி­களில் அபி­வி­ருத்­தி­யினை பிர­யோ­கிப்­ப­தற்­கான சரி­யான இட­மொன்­றினை பெற்றுக் கொள்­வ­தாக காணப்­பட்­டது. உயர்ந்த பொரு­ளா­தா­ர­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கும் மனித வளங்­களை திருப்­தி­க­ர­மான முறையில் எமது சிறு­வர்­களின் நீண்ட கால எதிர்­பார்க்­கை­களை நிறை­வேற்­று­வ­தா­கவும் காணப்­பட்­டது.

1.13. அது தான் மஹிந்த சிந்­தனை. புதி­ய­தொரு இலங்­கைக்­கான தூர நோக்கு என்­ப­தாகும். அது நகர வச­தி­களை கிரா­மங்­க­ளுக்கு எடுத்துச் செல்லும் அதே­வேளை கிர­ாமியப் பெறு­மா­னங்­களை நகர வாழ்க்­கைக்கு எடுத்துச் செல்­வ­த­னையும் இலக்காகக் கொண்டுள்ளது. பல்வேறுபட்ட அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றினை நாம் எதிர்கொண்டது உயர்ந்த குறிக்­கோள்­க­ளு­ட­னாகும். எமக்கு முடி­யு­மா­ன­வற்­றி­லி­ருந்து நாம் அதனை ஆரம்­பிக்­கும்­போது அது ஒரு­போதும் தோல்­வி­ய­டைய மாட்­டாது என நம்­பினோம்.

1.14 அதனால் தான் கொடூர எல்­.ரீ­.ரீ.ஈ. பயங்­க­ர­வா­தத்­தினை எம்மால் வெற்றி கொள்ள முடிந்­தது. அதனால் தான் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி முன்­னெ­டுப்­பு­களை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்கும் இய­லு­மாக இருந்­தது. அதன் அடிப்­ப­டையில் எமது சிறு­வர்­க­ளுக்கு புதிய நம்­பிக்­கை­யினை உரு­வாக்கும் வகை­யிலும் எமது மக்­க­ளுக்­கான வாழ்­வா­தார அபி­வி­ருத்­தி­யினை விரி­வாக்­கு­வ­தற்கும் எமது பொரு­ளா­தா­ரத்­தினை பிராந்­தி­யத்தில் முன்­ன­ணியில் திகழும் நாடாக மாற்­று­வ­தற்கும் முடி­யு­மாக இருந்­தது.

02. முன்­னேற்ற மீளாய்வு: 2006 – 2014 

2.1. எமது பத்து வருட பய­ண­மா­னது உண்­மையில் ஒரு முன்­னேற்­ற­க­ர­மான பய­ண­மாகும். பயங்­க­ர­வா­தத்தின் பிடியில் சிக்­கி­யி­ருந்த பிர­தே­சங்கள் தற்­பொ­ழுது தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளினால் சன­நா­ய­கத்­தி­னையும் சுதந்­தி­ரத்­தி­னையும் அனு­ப­விக்­கின்­றன.

சிறு­வர்கள் பாட­சா­லை­க­ளுக்குச் சென்று வீடு திரும்­பு­கின்ற பொழுது எல்­.ரீ­.ரீ.ஈ. பயங்­க­ர­வா­தி­களின் கைகளில் அகப்­பட்டு இறு­தியில் சிறுவர் போரா­ளி­க­ளாக மாறி விடு­வார்­களா என்ற பயம் இல்­லாது போயுள்­ளது. இப்­பி­ர­தே­சங்­களில் தாய், சேய் இறப்பு வீதங்கள் பாரி­ய­ளவு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன. கண்ணி வெடிகள், புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலங்கள் செழிப்பு மிக்க பசுந்­த­ரை­க­ளாக மாறி­யுள்­ள­துடன் மக்­க­ளுக்­கான வரு­மான வாய்ப்­பி­னையும் வழங்­கு­கின்­றது. ஏறக்­கு­றைய 30 வரு­டங்­க­ளாக மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 5.5 சத­வீ­த­மாக காணப்­பட்ட பாது­காப்புச் செல­வினம் தற்­பொ­ழுது 3 சத­வீ­த­மாகக் குறை­வ­டைந்­துள்­ள­துடன் அபி­வி­ருத்தி மற்றும் அர­சாங்க சேவை­க­ளுக்கு செல­வி­டு­வ­தற்­கான வாய்ப்­பி­னையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது.

2.2 இந்த மாற்­றத்­தினை நாம் அடைந்து கொண்­டது அனைத்து தரப்­பி­னரும் பங்­கு­பற்­றிய அபி­வி­ருத்­தியின் மூல­மாகும். அக்­கா­லத்தில் நகரப் புறங்­க­ளுக்கு மாத்­திரம் கிடைக்­கக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்த மின்­சா­ரத்­தினை தற்­பொ­ழுது ஒவ்­வொரு குடும்­பமும் அனு­ப­விக்­கின்­றது. போக்­கு­வ­ரத்து துறை­யா­னது பாட­சா­லைகள் வைத்­தி­ய­சா­லைகள் சந்­தைகள் மற்றும் வேலைத்­த­ளங்கள் என்­ப­வற்­றினை இல­கு­வாக அடைந்து கொள்ளும் வகையில் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. முழு சனத்­தொ­கையும் தொலைத்­தொ­டர்பு வச­தி­களை அனு­ப­விக்­கின்­றது. நாடு முழு­வ­தி­லு­முள்ள பாட­சா­லைகள் மற்றும் வைத்­தி­ய­சா­லைகள் சிறந்த கல்வி மற்றும் சுகா­தார நலன்­பு­ரி­யினை வழங்கும் வகையில் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளன.

புதிய தோற்­றத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும் வாராந்தச் சந்­தைகள் வியா­பாரச் சந்தை வச­தி­யினை விருத்தி செய்­துள்­ளன. 2017 அளவில் தர­மான குடி­நீ­ரினை ஒவ்­வொரு வீட்­டு­ரி­மை­யா­ளரும் பெற்­றுக்­கொள்­வ­தனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் துரி­தப்­ப­டுத்­தப்­பட்ட குழாய் நீர் வச­திகள் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளன. திவி­நெ­கும, கம­நெ­கும மற்றும் மகளிர் தொழில் முயற்சி அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்­டங்­க­ளி­னூ­டாக கிரா­மிய அபி­வி­ருத்தி உபா­யங்­க­ளுக்கு பெறு­மதி சேர்க்­கப்­படும் வகையில் அரசாங்கம் இவற்­றினை மேற்­கொள்­கின்­றது.

2.3 இந்த வரவு செல­வுத்­திட்­ட­மா­னது ஜப்­பா­னியப் பிர­தமர் மற்றும் மக்கள் சீனக்­கு­டி­ய­ரசின் ஜனா­தி­பதி ஆகிய இரு­வரும் எமது நாட்­டிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்­டதன் பின்­ன­ராகும். பெரும்­பா­லான நாடு­களின் வெளி­நாட்டு அமைச்­சர்கள், நிதி அமைச்­சர்கள், சிரேஷ்ட தலை­வர்கள் மற்றும் அர­சாங்க அதி­கா­ரி­களும் எமது நாட்­டிற்கு இவ்­வ­ரு­டத்­திற்குள் விஜயம் செய்­துள்­ளனர். இலங்­கை­யுடன் மேற்­கொள்ளும் அபி­வி­ருத்தி பங்­க­ளிப்­புக்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் தலை­வரும் எமது நாட்­டிற்கு விஜயம் செய்தார்.

இவ்­வ­ரு­டத்தின் செப்­டெம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் ஆசி­யாவின் அர­சியல் கட்­சி­களின் சர்­வ­தேச மாநாட்­டினை நாம் நடத்­தினோம். கடந்த வருடம் பல்­வேறு நாடு­களின் தலை­வர்கள் பங்கு பற்­றிய பொது­ந­ல­வாய அர­சாங்கத் தலை­வர்­களின் மாநாட்­டி­னையும் நாம் நடத்­தினோம். சர்­வ­தேச உற­வு­களை உயர்ந்த மட்­டத்தில் பேணு­கின்­ற­ளவு எமது அர­சாங்­கத்தின் வெளி­நாட்டுக் கொள்கை வெற்­றி­ய­ளித்­துள்­ளமை இதன் மூலம் தெளி­வா­கின்­றது. ஜெனி­வாவில் உள்ள மனித உரி­மைகள் பேர­வை­யினை பயன்­ப­டுத்தி ஒரு சிலரின் ஒத்­து­ழைப்­புடன் மறை­மு­க­மான பின்­ன­ணி­க­ளுடன் இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச சமூ­கத்­தினை மாற்­று­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட பொய்ப்­பி­ர­சா­ரங்கள் மற்றும் தவ­றான வழி­ந­டத்­தல்கள் எந்­த­ள­விற்கு பிழை­யா­னவை என்­ப­தனை எடுத்துக் காட்­டு­வ­தற்கு இது உத­வி­யது.

2.4 எல்­.ரீ­.ரீ.ஈ. இனரின் பிடி­யி­லி­ருந்து எமது மக்­களை மீட்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கையின் போது நாம் இன ரீதி­யான எந்­த­வொரு இரா­ணுவ செயற்­பாட்­டி­னையும் மேற்­கொள்­ள­வில்லை. அனை­வ­ருக்கும் சமா­தா­னமும் பாது­காப்பும் கிடைக்கப் பெற்­றுள்­ளது. இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளது வாழ்­வா­தா­ரங்­களை விருத்தி செய்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

வர­வு­செ­ல­வுத்­திட்ட வளங்­களைக் கொண்டு முன்னாள் எல்­.ரீ­.ரீ.ஈ. போரா­ளி­க­ளுக்கு புனர் வாழ்­வ­ளிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளது குடும்­பங்­க­ளுடன் சேர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 3000 இற்கு அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு பாது­காப்பு மற்றும் பொலிஸ் சேவையில் வேலை­வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. மிகவும் கடின போராட்­டத்­திற்கு மத்­தியில் பெற்­றெ­டுக்­கப்­பட்ட சமா­தா­னத்­தினை வளர்த்­தெ­டுப்­ப­தற்­கான நல்­லி­ணக்க செயன்­மு­றை­க­ளினை நாம் ஆரம்­பித்­துள்ளோம்.

2.5 எமது நாடு பல வரு­டங்­க­ளாக அவசர கால ஒழுங்கு விதி­களின் கீழ் எவ்­வாறு ஆளப்­பட்­டது என்­ப­தனை நாம் அனை­வரும் நன்­க­றிவோம். அவ­சர கால நிலை­மைகள் நீக்­கப்­பட்­ட­துடன் நாடு முழு­வ­திலும் அர­சாங்க சேவைகள் மீள அமுல்­ப­டுத்­தப்­பட்டு வட மாகாண சபை தேர்­தல்கள் உள்­ள­டங்­க­லாக கிர­ம­மான தேர்­தல்கள் நடத்­தப்­பட்­ட­துடன் ஊடக சுதந்­தி­ரமும் ஊக்­கு­விக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி சூழலில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 1987இல் மாகாண சபைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து முதல் தட­வை­யாக தற்­பொ­ழுது 9 மாகாண சபை­களும் செயற்­பட்டு வரு­கின்­றன.

2.6 எமது உள்­நாட்டு பிரச்­சி­னை­களை விளங்கிக் கொண்ட நிலையில் சர்­வ­தேச சமு­தாயம் வழங்­கிய கூட்டு ஒத்­து­ழைப்­பினை பாராட்டும் அதே­வேளை தேசி­யப்­பா­து­காப்பு சமா­தானம் மற்றும் அபி­விருத்­தியில் சர்­வ­தேச தலை­யீ­டுகள் எதுவும் இருக்­கக்­கூ­டாது என்­ப­தனை இந்த பாரா­ளு­மன்­றத்­திற்கும் சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் நாம் அடிக்­கடி விளக்­கி­யுள்ளோம்.

ஜன­நா­யக வழி­மு­றையில் எமது நாட்டில் பன்­மு­கத்­தன்­மை­யினை வெற்­றி­க­ர­மாக பேணி வரு­வ­தனை உலகம் பாராட்­டுதல் வேண்டும். தேர்­தல்கள் மூலம் ஏற்­க­னவே மாகாண சபைகள் தொழிற்­பட்டு வரு­கின்­றன என்ற வகையில் இலங்­கையின் பின்­பு­லத்தில் பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்­தர தீர்­வு­களை காண்­பதில் தமிழ் அர­சியல் கட்­சிகள் மற்றும் சம்­பந்­தப்­பட்ட குழுக்கள் பாரா­ளுன்ற தெரிவுக் குழு­வுடன் இணைந்து செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

2.7 தனி­யான 9 மாகாண சபை­க­ளுக்கும் காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் தொடர்­பான அதி­காரப் பர­வ­லாக்­க­லுக்­கான நியா­யப்­ப­டுத்­த­லினை என்னால் அவ­தா­னிக்க முடி­யா­துள்­ள­துடன் இது சட்டம் மற்றும் ஒழுங்கு தேசி­யப்­பொ­ரு­ளா­தாரம் என்­ப­வற்றின் சிறந்த நல­னுக்கு எவ்­வாறு ஒத்­து­ழைக்­கி­றது என்­ப­தனை என்னால் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

தரத்­தினை உறு­திப்­ப­டுத்தும் வகையில் கல்வி, சுகா­தாரம், வறுமை தணிப்பு மற்றும் சமூக சேவைகள் என்­ப­வற்­றிற்­கான தேசிய தரா­த­ரங்­களை நாம் உரு­வாக்க வேண்­டி­யுள்­ளது. இதற்­காக பிர­தேச சபைகள், மாகாண சபை­களில் மக்கள் சபை­களை நாம் எவ்­வாறு வடி­வமைப்­பது என்­ப­த­னையும் அர்த்­த­முள்ள செலவு குறைந்த அர­சாங்க வேலைச்­சட்­ட­க­மொன்றின் ஊடாக அர­சாங்­கத்­துடன் ஒருங்­கி­ணைப்­பினை ஏற்­ப­டுத்­து­வது எவ்­வாறு என்­ப­த­னையும் நாம் ஆராய வேண்­டி­யுள்­ளது.

எனவே மாகாண சபை­களை எமது மக்கள் அனை­வ­ரி­னதும் அபி­வி­ருத்­திக்கு இன்னும் அர்த்­த­முள்­ள­தாக மாற்­று­வ­தற்கு யதார்த்த பூர்­வ­மாக அர­சியல் முன்­மொ­ழி­வு­களை கண்­ட­றி­வ­தற்­கான அனைத்து வித­மான சிந்­தனை ரீதி­யான தடை­களை விட்டும் அர­சாங்­கத்­துடன் இணைந்து பணி­யாற்­று­மாறு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு நான் அழைப்பு விடுக்­கின்றேன். மிகவும் கடி­ன­மாகப் பெறப்­பட்ட சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்­தி­லி­ருந்து நாம் நல்ல பல பயன்­க­ளையே பெற்­றுக்­கொள்ளும் அதே­வேளை சமு­தாய அர­சியல் எண்­ணக்­க­ருக்­களை முன் நிறுத்­து­வ­தற்குப் பதி­லாக பிராந்­தி­யத்தில் உறு­தி­யான பொரு­ளா­தா­ரத்­துடன் கூடிய இணைந்த சமு­தாயம் ஒன்­றினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நாம் அனை­வரும் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

2.8 அர­சாங்கம் உலக உணவு நிகழ்ச்­சித்­திட்­டத்­திற்­காக அரி­சி­யினை அன்­ப­ளிப்புச் செய்­த­துடன் உலக சுகா­தார நிறு­வ­னத்­தி­னூ­டாக ஆபி­ரிக்­காவில் எபோலா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளுக்கு மருத்­துவ கையு­றை­க­ளையும் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட பிலிப்பைன்ஸ் மக்­க­ளுக்­காக மருத்­துவ உதவி சூடானில் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களில் எமது பாது­காப்புப் படை­யி­னரை ஈடு­ப­டுத்­தி­யமை பலஸ்தீன் மக்­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட 1 மில்­லியன் ஐ.அ. டொலர் பெறு­ம­தி­யான மனி­தா­பி­மான உத­விகள் என்­ப­வற்­றி­னையும் அர­சாங்கம் வழங்­கி­யுள்­ளது.

 இந்த வகையில் எமது நாடு மனி­தா­பி­மான உத­வி­களைப் பெறும் நாடு என்ற நிலை­மை­யி­லி­ருந்து மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­கு­கின்ற நாடு­களின் அந்­தஸ்­திற்கு மாறி­யுள்­ளது என்ற வகையில் இது பெரு­மைப்­ப­டக்­கூ­டிய விட­ய­மொன்­றாகும். இவை உல­கத்தில் மனி­தா­பி­மா­னத்­தினை ஊக்­கு­விப்­ப­தற்கும் சமா­தா­னத்­தினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் நாம் எடுத்த முயற்­சிகள் என்­ப­துடன் உலக சமா­தா­னத்­தினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான எமது விருப்­ப­மு­மாகும்.

2.9 எமது பாது­காப்புப் படை­யினர் எமது விவ­சா­யிகள் எமது ஊழி­யப்­படை, வெளி­நாட்டில் பணி­யாற்­று­கின்ற எமது பெண்கள் மற்றும் சிறு­தொழில் முயற்­சி­யா­ளர்கள் நாடு முழு­வ­தி­லு­முள்ள எமது ஆசி­ரி­யர்கள் எமது சுகா­தாரப் பணி­யா­ளர்கள் எமது கிரா­மிய மட்ட அர­சாங்க ஊழி­யர்கள் எமது சமயத் தலை­வர்கள் எமது கலை­ஞர்கள் வளர்ந்து வரும் பொரு­ளா­தார சமு­தாயம் மற்றும் சிறிய, நடுத்­தர தொழில்­முயற்­சிகள் உலக நிதி நிறு­வ­னங்கள் மற்றும் தொழில் முயற்­சி­யா­ளர்கள் அனை­வரும் அபி­வி­ருத்­திக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­றினால் மாத்­தி­ரமே இவை அனைத்­தி­னையும் எம்மால் மேற்­கொள்ள முடியும்.

மேலே குறிப்­பிட்ட எமது அனைத்து மக்­களும் உல­கத்­தி­லுள்ள முன்­னேற்­ற­ம­டைந்த எந்­த­வொரு சன­நா­யக நாட்­டிலும் காணப்­ப­டு­கின்ற நல்­லாட்­சியின் ஜன­நா­யக நிறு­வன ஏற்­பாட்­டிற்கு பெறு­மதி சேர்க்­கக்­கூ­டிய சமா­தா­ன­மான தேர்தல் ஒன்றில் பங்­கு­பற்­று­வதன் மூலம் சன­நா­ய­கத்தில் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யினை அதி­க­ரித்தல் வேண்டும். சமா­தானம் தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் பயங்­க­ர­வாத யுத்தம் நிறை­வ­டைந்­த­தி­லி­ருந்து நாம் பெற்­றுக்­கொண்ட ஜன­நா­யக வழி­மு­றையில் தொடர்ந்து அடை­யப்­பெற்ற பொரு­ளா­தார முன்­னேற்றம் என்­ப­வற்­றினை ஊக்­கு­விப்­ப­தற்கு எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மற்ற வகையில் அவர்கள் வழங்­கிய பங்­க­ளிப்­புக்கு எமது மனப்­பூர்­வ­மான பாராட்­டு­தல்­களை தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

2.10 நாட்­டி­லுள்ள மொத்த பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்­களில் 47 சத­வீ­தத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற மூன்று மாகா­ணங்­களில் இவ்­வ­ரு­டத்தில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் 54 சத­வீ­த­மா­னவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளிக்­கப்­பட்­டதாகும். எமது சிறு­வர்­களின் எதிர்­கா­லத்­திற்­கா­கவும் நாடு முழு­வ­திலும் சமா­தானம் நல்­லி­ணக்கம் மற்றும் அபி­வி­ருத்தி என்­ப­வற்றை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட மஹிந்த சிந்­தனை எதிர்­கா­லத்­திற்­கான தேசிய தூர நோக்கு இல் பெரும்­பா­லான மக்கள் தமது நம்­பிக்­கை­யினை வைத்­தி­ருக்­கின்­றனர் என்ற விடயம் எமது அர­சாங்­கத்­தினை பெரிதும் ஊக்­கு­விக்க கூடி­ய­தா­க­வி­ருக்­கின்­றது.

2.11 இந்த வரவு செல­வுத்­திட்­டத்­தினை நான் சமர்ப்­பிக்­கின்ற 2015 ஆம் ஆண்டின் தலா வரு­மானம் 4000 ஐக்­கிய அமெ­ரிக்க டொலர்­க­ளாகக் காணப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. இது 2005 இல் காணப்­பட்ட நிலை­யி­னை­விட 4 மடங்கு அதிகமானதென்பதுடன் எமது எதிர்பார்க்கைகள் ஒரு வருடம் முந்தியதாக காணப்படுகின்றது. பொருளாதாரமானது ஏறக்குறைய 8 சதவீதத்தால் வளர்ச்சி­யடைந்துள்ளது. ஏற்றுமதிகள் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு ஊழியர் பெறுகை­களிலிருந்து வருமானம் மக்களின் வருமான மூலங்களை அதிகரித்துள்ளதுடன் வியாபார சமுதாயத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இவை மொ.உ. உற்பத்தியில் ஏறக்குறைய 3 சத­வீத பற்­றாக்­கு­றை­யு­டைய குறைந்த வரு­மான கணக்­கொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு எமது வெளி­நாட்டு கொடுக்கல் வாங்­கல்­களை ஸ்திரப்­ப­டுத்­தி­யுள்­ளன. சமா­தானம் மற்றும் பாது­காப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் உள்­நாட்டு உற்­பத்­தி­யினை நாம் அதி­க­ரித்­துள்ளோம் என்ற வகையில் வெளி­நாட்டு ஒதுக்­குகள் 10 பில்­லியன் ஐக்­கிய அமெ­ரிக்க டொலர்­களை அண்­மித்துக் காணப்­ப­டு­கின்­றன. 2005 இல் காணப்­பட்­டதை விட வரவு செல­வுத்­திட்­டப்­பற்­றாக்­கு­றை­யா­னது அரை­வா­சி­யினால் குறை­வ­டைந்­துள்ள அதே­வேளை 2005 உடன் ஒப்­பி­டு­கையில் பொதுப்­ப­டு­கடன் மொ.உ. உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு குறைவாகக் காணப்படுகின்றது.

2.12 வர்த்தகம் மற்றும் சுற்றுலாக்களை கவரும் வகையிலும் இட அமைவின் விசேட தன்மையின் மூலம் கிடைக்கப் பெற்ற நன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சர்வதேச துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் எமது அரசாங்கம் அபிவிருத்தி செய்துள்ளது. அனைத்து பிரதான நகரங்கள் மற்றும் அபிவிருத்தி மையங்களை கைத்தொழில் விவசாய மற்றும் சுற்றுலா மையங்களுடனும் தகவல் தொழில்நுட்ப மற்றும் பல்கலைக்கழக நகரங்களுடனும் இணைக்கும் வகையில் அதிவேக பாதை வலையமைப்பினை மிகத்துரிதமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வடக்கிற்­கான அதிவேகப் பாதை மற்றும் றுவன்­புர அதி­வேக பாதை அத்­துடன் இரத்­தி­ன­பு­ரிக்­கான சமாந்­தர புதிய புகை­யி­ரதப் பாதை என்­பன 2017 இல் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் தேசியப் பெருந்­தெ­ருக்கள் பெரும்­பா­லா­னவை அடுத்த தசாப்­தத்­திற்கு தேவை­யான போக்­கு­வ­ரத்து வச­தி­களை வழங்­கு­வ­தற்கு முடி­யு­மான வகையில் புதிய கொள்­ள­ள­வுடன் முழு­மை­யாக நவீன மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தலை­மன்னார் மற்றும் யாழ்ப்­பா­ணத்தை இணைக்­கின்ற வடக்கு புகை­யி­ரதப் பாதை மீண்டும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு -மாத்­தறை புகை­யி­ர­தப்­பாதை தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளது. மாத்­தறை, - கதிர்­காமம் புதிய புகை­யி­ரதப் பாதை நிர்­மா­ணப்­ப­ணிகள் இடம்­பெற்று வரு­வ­துடன் பெலி­யத்தை பிரிவு 2015 இன் இறு­தியில் நிறைவு செய்­யப்­ப­ட­வுள்­ளது.

2.13 2005 மற்றும் 2015 ஆண்­டு­க­ளுக்­கி­டையில் மின் உற்­பத்தி ஏறக்­கு­றைய 5000 மெகா­வோட்­டாக இரட்­டிப்­பாக அதி­க­ரித்­துள்­ள­துடன் உற்­பத்தி செய்­யப்­பட்ட மின்­சா­ரத்தில் ஏறக்­கு­றைய 300 மெகா­வோட்­டினை சேமிப்­பதன் மூலம் மின் ஊடு­க­டத்தல் நட்­டங்கள் 9 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளன. மாற்று புதுப்­பிக்­கக்­கூ­டிய சக்தி மூலங்­களும் நாட்டில் ஏறக்­கு­றைய 300 மெகாவோட் மின்­சா­ரத்­தினை உற்­பத்தி செய்­கின்­றன. குறைந்த செல­வி­னத்தில் மின்­சா­ரத்­தினை உற்­பத்தி செய்­வதை நோக்கி எம்மால் படிப்­ப­டி­யாக பின்­பற்­றப்­படும் உபா­யங்­களின் மூலம் எமது 4.5 மில்­லியன் வீட்­டுப்­பா­வ­னை­யா­ளர்கள் அனை­வரும் நன்­மை­ய­டையும் வகையில் கடந்த செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து மின்­சார செல­வினை 25 சத­வீ­தத்­தினால் குறைப்­ப­தற்கு அர­சாங்­கத்­தினால் முடி­யு­மாக இருந்­தது.

2.14 மொற­க­ஹ­கந்தை, உமா ஓயா, தெதுறு ஓயா மற்றும் யான் ஓயா திசை திருப்பல் திட்­டங்கள் வடக்கு, வட­மேற்கு மற்றும் தென் மாகா­ணங்­க­ளி­லுள்ள வரண்ட வல­யங்­க­ளுக்கு 2016ஆம் ஆண்­ட­ளவில் நீர்ப்­பா­சனம் செய்­வ­தற்கு முடி­யு­மாக இருக்கும். வெஹெ­ர­கல, றம்­புக்கன் ஓயா நீர்த்­தேக்கம் போன்ற பல்­வேறு புதிய திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய பாது­காப்புத் தரா­த­ரங்­க­ளுடன் கூடிய பராக்­கி­ரம சமுத்­திரம், மின்­னே­ரியா, கிரித்­தலே, றிதி­ய­கம, தப்­போவ, இங்­கி­னி­மிட்­டிய போன்ற அனைத்து பிர­தான நீர்த்­தேக்­கங்­களும் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளன. வரட்­சி­யினை பயன்­ப­டுத்தி சிறிய மற்றும் நடுத்­தர நீர்ப்­பா­சனத் திட்­டங்கள் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளன. விவ­சாயம், மீன்­பிடி, கால்­நடை, மின் உற்­பத்தி, உயி­ரியல் பல்­வ­கைத்­தன்மை என்­ப­வற்றின் உற்­பத்­தி­யினை அதி­க­ரிப்­ப­தற்கு 2005 இலி­ருந்து இத்­து­றையில் செய்­யப்­பட்­டுள்ள முத­லீ­டா­னது மிகவும் அதி­க­மா­ன­தாகும்.

2.15 தற்­பொ­ழுது காணப்­படும் மீன்­பிடி துறை­மு­கங்­களின் வச­தி­களை புன­ர­மைத்தல், சிலா­பத்­துறை, குரு­நகர், கந்­தறை, கள­மெட்­டிய புதிய மீன்­பி­டித்­து­றை­மு­கங்­களின் புன­ர­மைப்பு நிறை­வ­டைந்­துள்­ள­துடன் வென்­னப்­புவ, கப்­ப­றத்­தொட்ட, தொடந்­துவ, ஹிக்­க­டுவ மற்றும் நீர்­கொ­ழும்பு வாவி என்­ப­வற்றில் மீன்­பிடி துறை­முகம் மற்றும் நங்­கூரத் தளங்­களின் அபி­வி­ருத்தி இந்­நாட்டில் அடிப்­ப­டை­யான மீன்­பிடி வளங்­களை விருத்தி செய்யும் நோக்­கத்­துடன் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 4,374 பந்நாள் பட­குகள் 24,364 தின­சரி பட­குகள் மற்றும் 20863 சாதா­ரண பட­குகள் உள்­ள­டங்­க­ளான மீன் பட­குகள் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இத்­தொ­ழிற்­று­றையில் ஈடு­பட்­டுள்ள 186,939 மீன­வர்கள் பல்­வே­று­பட்ட அபி­வி­ருத்தி உத­வித்­திட்­டங்­களின் மூலம் உத­வி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர்.

2.16 அர­சாங்க முத­லீட்டு உபா­யத்தின் அடிப்­ப­டையில் காலி, கொழும்பு, பொல­ன­றுவை, திரு­கோ­ண­மலை போன்ற நக­ரங்­களில் அர­சாங்கம் நீர் வழங்கல் முறை­மை­களை நிறைவு செய்­துள்­ள­துடன் கம்­பஹா, குரு­நாகல், புத்­தளம், மாத்­தளை, அநு­ரா­த­புரம், ஹம்­பாந்­தோட்டை, கண்டி, அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி மாவட்­டங்­களில் பிர­தான நீர் வழங்கல் திட்­டங்கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சமு­தாய நீர் வழங்கல் திட்­டங்கள் சிறிய நக­ரங்கள் மற்றும் கிரா­மிய பிர­தே­சங்­களில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட சமு­தாய நீர் வழங்கல் திணைக்­க­ளத்தின் கீழ் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

2.17 எமது அர­சாங்கம் மனித வளங்கள் அபி­வி­ருத்­திக்­காக விசேட முக்­கி­யத்­து­வத்­தினை வழங்­கி­யுள்­ளது. உயர் கற்­கை­க­ளுக்­காக புதிய பாடங்­களை வழங்­கு­வதன் மூலம் ஒவ்­வொரு பல்­க­லைக்­க­ழ­கமும் விரி­வாக்­க­லுக்­கான புதிய வச­தி­களை விருத்தி செய்­துள்ள வகையில் பல்­க­லைக்­க­ழக நக­ர­மாக்கல் முன்­னெ­டுப்­பா­னது முன்­னேற்­ற­க­ர­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் தங்­கு­மிட பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு 25,000 இற்கு அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு விடுதி வசதி நிர்­மா­ணப்­ப­ணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்­க­ளுக்­கான சம்­ப­ளங்கள் மற்றும் ஆராய்ச்சி ஊக்­கு­விப்பு தொகைகள் இரண்டு மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

2.18 இளை­ஞர்­களை இலக்­காகக் கொண்ட திறன் விருத்­திக்­கான முன்­னெ­டுப்­புக்கள் கடந்த காலங்­களில் முன்­னேற்­ற­க­ர­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரும் தொழில்­ப­யிற்சி கல்­வியில் பிர­தான விட­ய­மாகும். புதிய வியா­பார முகா­மைத்­துவ பாட­சாலை ஒன்றின் நிர்­மா­ணப்­பணி மற்றும் மால­பையில் அமைந்­துள்ள தொழில்­நுட்ப நிர்­வாகம், முல்­லைத்­தீவில் உயர் தொழில்­நுட்ப நிறு­வகம், தகவல் தொழில்­நுட்ப பாட­சா­லை­களின் விரி­வாக்கம், மால­பையில் அமை­யப்­பெறும் ஆசி­ரியர் பயிற்­சிக்­கல்­லூரி அத்­துடன் தொழில்­நுட்ப கல்­வி­யினை முன்­னேற்­று­வ­தற்­கான பல்­வே­று­பட்ட உயர் பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரி­களின் நிர்­மா­ணப்­ப­ணிகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. மீன்­பிடி மற்றும் சமுத்­திர வளங்கள் முகா­மைத்­துவம் தொடர்­பான கேள்­வி­யு­டைய ஆற்றல் விருத்தி கல்­வி­யினை முன்­னெ­டுப்­ப­தற்­காக சமுத்­தி­ர­வியல் பல்­க­லைக்­க­ழ­க­மொன்­றினை தாபிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் சட்ட ரீதி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

2.19 ஒவ்­வொரு வரு­டமும் பாட­சா­லை­க­ளுக்கு அனு­மதி பெறும் ஏறக்­கு­றைய 350,000 சிறு­வர்­களை உள்­வாங்கும் வகை­யி­லான சிறுவர் நட்பு பாட­சாலை அபி­வி­ருத்தி முன்­னெ­டுப்­பொன்­றினை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது. 6,500 இரண்டாம் நிலைப் பாட­சா­லை­களின் வச­திகள் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ள­துடன் ஏனைய அனைத்து ஆரம்ப பாட­சா­லை­களும் சிறுவர் நட்பு பாட­சாலை, சூழல் துப்­பு­ர­வேற்­பாட்டு வச­திகள் மற்றும் ஆசி­ரியர் வச­திகள் உள்­ள­டங்­க­லாக முன்­னேற்­ற­ம­டையச் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

அனைத்து பாட­சாலை செல்லும் சிறு­வர்­க­ளது ஆங்­கிலம், கணிதம், தக­வல்­தொழில் நுட்பம் மற்றும் விஞ்­ஞானம் ஆகிய பாடங்­களை ஊக்­கு­விக்கும் வகையில் நாடு முழு­வ­தி­லு­முள்ள 1000 பாட­சா­லை­களில் புதிய மஹிந்­தோ­தய ஆய்­வுக்­கூ­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன தூரப் பாட­சா­லை­களில் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு குறிப்­பீடு செய்­யப்­பட்ட பாட­சாலை ஆட்­சேர்ப்பு முறைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆசி­ரியர் பயிற்சி நிகழ்ச்­சித்­திட்­டங்கள், கற்­பித்தல் சாத­னங்கள், பரீட்­சை­களின் தரா­தரம் மற்றும் வெளிக்­கள செயற்­பா­டுகள் என்­பன சிறு­வர்­களின் நன்­மைக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

2.20 இந்த முன்­னெ­டுப்­புக்­களின் கார­ண­மாக ஹம்­பாந்­தோட்டை, கிளி­நொச்சி, மட்­டக்­க­ளப்பு, பொலன்­ன­றுவை, பதுளை போன்ற தூர பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள பாட­சாலை மாண­வர்­களின் சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைதல் விகிதம் 2005 இல் காணப்­பட்ட 46.6 சத­வீ­தத்­தி­லி­ருந்து தற்­பொ­ழுது 62.4சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் இடம்­பெற்ற ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் முதல் 10 சிறந்த புள்­ளி­களைப் பெற்ற மாண­வர்­களில் 9 பேர் இந்­நாட்­டி­லுள்ள பின்­தங்­கிய பிர­தே­சங்­களில் காணப்­படும் ஆரம்ப பாட­சா­லை­களை சேர்ந்­த­வர்கள் என்­பது எம் அனை­வ­ருக்கும் பெருமை தரும் விட­ய­மாக இருப்­ப­தா­னது கிராம பிர­தே­சங்­களில் கல்­வித்­துறை மறு­ம­லர்ச்சி ஏற்­பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது. அற­நெறிக் கல்­வி­யினை பெறு­கின்ற மாண­வர்­களின் எண்­ணிக்­கை­யினை அதி­க­ரிப்­ப­தற்கு கடந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் பிரி­வெனா கல்வி மற்றும் அற­நெறிப் பாட­சாலைக் கல்வி என்­ப­வற்­றிற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டது.

2.21 கிரா­மியப் பிர­தே­சங்­களில் 900 நன­செல நிலை­யங்­க­ளையும் பெருந்­தோட்டப் பிர­தே­சங்­களில் 26 பிர­ஜா­சக்தி தொழில்­நுட்ப நிலை­யங்­க­ளையும் உரு­வாக்­கி­யதன் மூலம் கிரா­மிய மட்­டத்தில் தகவல் தொழில்­நுட்ப கல்­வி­யினை ஊக்­கு­விப்­ப­தற்­காக சர்­வ­தேச ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அளவு மிகவும் ஊக்­கத்­தினை நாம் பெற்­றுள்ளோம். இது 2005 இல் கவ­னிப்­பா­ரற்று இருந்த தகவல் தொழில்­நுட்ப அறிவு விகிதம் தற்­பொ­ழுது 45 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கு­ம­ளவு பங்­க­ளிப்பு செய்­தது. இலத்­தி­ர­னியல் நூலக நன­செல முன்­னெ­டுப்பு வெற்­றி­ய­ளித்­துள்­ளதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் 140 இற்கும் அதி­க­மான உல­க­ளா­விய விண்­ணப்­பங்­களில் உலகில் மிகவும் பிர­பல்­ய­மான மிலிந்த மற்றும் பில்கேட்ஸ் நிறு­வன விருது இலங்­கைக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

2.22 உணவு, தொழில்­நுட்பம், தொற்றா நோய்கள், குறைந்த செல­வின நிர்­மாண தொழில்­நுட்பம், புதுப்­பிக்­கக்­கூ­டிய சக்தி, சுதேச மருத்­து­வத்­துறை போன்ற துறை­களில் எமது விஞ்­ஞா­னி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆராய்ச்­சிகள் ஊக்­கு­விக்­கத்­தக்­க­ளவு காணப்­ப­டு­கின்­றன. நனோ தொழில்­நுட்ப முன்­னெ­டுப்­புக்­களில் தனியார் - அர­சாங்க பங்­கு­ட­மை­யா­னது உயர்­தர விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

2.23 இல­வச சுகா­தார பரா­ம­ரிப்பு முறை­யொன்­றினை பேணிப்­பா­து­காத்தல் மஹிந்த சிந்­தனை வேலைச்­சட்­ட­கத்தில் மிகவும் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்ட விட­ய­மொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. தேவை­யான விசேட நிபு­ணர்கள், மருத்­து­வர்கள், தாதி­மார்கள் மற்றும் உப மருத்­துவ பத­வி­யினர் போன்­ற­வர்­களை புதி­தாக ஆட்­சேர்ப்பு செய்­த­துடன் அவர்­க­ளது சம்­ப­ளங்கள் மற்றும் ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­ன­வு­களை திருத்­தி­யுள்­ளது. வைத்­தி­ய­சாலை வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு மருந்துப் பொருட்கள், அன்­பி­யூலன்ஸ் மற்றும் மருத்­துவ உப­க­ர­ணங்­க­ளுக்­கான செலவு அதி­க­ரித்­துள்­ளது.

மருத்­து­வத்­து­றைக்­கான புதிய ஆட்­சேர்ப்­புக்கள் மாத்­திரம் ஏறக்­கு­றைய 50,000 ஆகும். அர­சாங்கம் உள்ளூர் மருந்துப் பொருட்கள் தயா­ரிப்­பா­ளர்­களின் உற்­பத்தி ஆற்­ற­லினை அதி­க­ரிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு ஊக்­கு­விப்­ப­தற்கு மேல­தி­க­மாக அத்­தி­யா­வ­சிய மருந்­துப்­பொ­ருட்கள் தயா­ரிப்­ப­தற்­கான ஆற்­ற­லி­னையும் விரி­வாக்­கி­யுள்­ளது. இதனால் இல­வச மருத்­துவ வச­தி­யினை வழங்­கு­வ­தற்­காக இது­வரை அர­சாங்கம் வரு­ட­மொன்­றிற்கு ரூபா 150 பில்­லி­யனை செல­விட்­டுள்­ளது.

2.24 பொது­வான சிறுவர் மற்றும் இளைஞர் அபி­வி­ருத்தி உபா­யத்தில் விளை­யாட்டு மற்­று­மொரு முன்­னு­ரிமை அளிக்­கக்­கூ­டிய விட­ய­மாகும். அனைத்து பாட­சா­லை­க­ளிலும் விளை­யாட்டு ஆசி­ரி­யர்­க­ளுடன் கூடிய மைதா­ன­மொன்று இருப்­பது அவ­சி­ய­மாகும். அவர் மாண­வர்­க­ளுக்கு மத்­தியில் ஆரோக்­கிய மற்றும் விளை­யாட்டு வாழ்க்கை முறைமை விருத்­தி­யினை ஊக்­கு­விப்பார்.

விளை­யாட்டு தற்­பொ­ழுது கல்­வியின் ஒருங்­கி­ணைந்த பகு­தி­யென்­ப­துடன் பாட­சாலை செல்லும் மாண­வர்­க­ளுக்­கென வெளிக்­களச் செயற்­பா­டொன்­றாகும். அர­சாங்கம் பல்­வேறு மாவட்­டங்­களில் சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்­கு­க­ளையும் நவீன விளை­யாட்டு வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஒரு காலத்தில் நாட்டில் ஒரு சில நக­ரங்­களில் மாத்­திரம் விளை­யாட்டு வச­திகள் காணப்­பட்­டன.

2.25 எமது நாடு மிகவும் வள­மிக்க கிரா­மிய மர­பு­ரி­மை­களை கொண்­டுள்­ளது. எமது மக்­களின் பெரும்­பா­லானோர் கிரா­மிய வாழ்க்கை முறையில் வாழ்­கின்­றனர். எமது கிரா­மிய வாழ்க்­கையில் தேசியப் பெறு­மா­னங்­க­ளையும் உறு­தி­யான கலா­சார ஒருங்­கி­ணைப்­பி­னையும் மதிப்­ப­ளிக்கும் வகையில் எமது அபி­வி­ருத்தி கொள்­கைகள் கம­நெ­கும உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்டம் மற்றும் திவி­நெ­கும வாழ்­வா­தார அபி­வி­ருத்தி நிகழ்ச்சி திட்டம் என்­ப­வற்றின் மூலம் கிரா­மங்­களை வலு­வூட்­டு­வ­தனை எமது அபி­வி­ருத்தி கொள்­கைகள் மையப்­ப­டுத்­தி­யுள்­ளன.

முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் கிரா­மிய மின் வழங்கல் நிகழ்ச்­சித்­திட்டம், மக நெகும கிரா­மிய பாதை அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்டம் என்­ப­வற்றின் செயற்­பா­டு­க­ளினை துரி­தப்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை நாடு முழு­வ­திலும் பர­வி­யுள்ள அனைத்து கிராம சேவை அலு­வலர் பிரி­வு­க­ளுக்கும் தொலைத்­தொ­டர்பு வச­தி­களை விரி­வாக்­கு­வ­த­னையும் நாம் துரி­தப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

சிறிய நீர்ப்­பா­சன வச­திகள், தாய் மற்றும் சேய் பரா­ம­ரிப்பு நிலை­யங்கள், ஆரம்ப பாட­சா­லைகள் என்பவற்றினை கிராமிய மட்டத்தில் நாம் விரிவுபடுத்தியுள்ளோம். குறை வருமானம் பெறும் குடும்­பங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்­வா­தார முன்­னெ­டுப்­புக்­களை விருத்தி செய்­வ­தற்கு 2.5 மில்­லியன் குடும்­பங்­களை உள்­ள­டக்கும் வகையில் மனைப்­பொ­ரு­ளா­தா­ரங்­களை ஊக்­கு­விப்­ப­தற்கு 6 சுற்­றுக்­களில் திவி­நெ­கும உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2.26 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்று வரை நெற்­செய்­கைக்­கான உரப்­ப­சளை 50 கி.கிராம் பொதி­யொன்­றினை ரூபா 350 இற்கும் சோளம், வெங்­காயம், உரு­ளைக்­கி­ழங்கு, பாசிப்­ப­யறு, மரக்­கறி மற்றும் பழங்­களின் பயிர்­செய்­கை­யினை பிர­சித்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏனைய பயிர்­க­ளுக்­கான உரப்­ப­சளை 50 கி. கிராம் பொதி­யொன்று ரூபா 1,200 இற்கும் வழங்­கப்­பட்­ட­துடன் அதே போன்று குறை வரு­மானம் பெறும் மக்­களின் வாழ்­வா­தார வாய்ப்­புக்­களை விரி­வாக்கும் வகையில் கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கரு­வாடு போன்ற சிறிய கைத்­தொழில் முயற்­சி­க­ளுக்கு உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

திவி­நெ­கும சமு­தாய வங்கி தொழிற்­சங்­கங்கள் மற்றும் விவ­சாய வங்­கி­க­ளி­னூ­டாக சிறிய நிதி­ய­ளிப்பு வச­திகள் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளன. திவி நெகும மற்றும் சமுர்த்தி பயன் பெறு­நர்­க­ளுக்கு மாதாந்தம் வழங்­கப்­படும் கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கிரா­மிய மட்­டத்தில் அர­சாங்க சேவைக்கு புதிய அங்­கீ­கா­ரத்­தினை வழங்கும் வகையில் கிரா­மங்­க­ளி­லுள்ள வெளிக்­கள ஊழி­யர்­க­ளுக்கு 100,000 இற்கு அதி­க­மான மோட்டார் சைக்­கிள்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. விவ­சாய ஓய்­வூ­தி­யத்­திட்டம் மீள அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் தானிய காப்புறுதி மற்றும் வனவிலங்கு தொடர்பான அழிவுகளுக்கான நட்ட ஈடும் விரிவாக்கப்பட்டுள்ளன.

2.27 கடந்த 8 வரு­டங்­க­ளின்­போது மோச­மான நிலையில் காணப்­பட்ட வீடுகள் புன­ர­மைக்­கப்­பட்­ட­துடன் குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களை இலக்­காகக் கொண்டு புதிய நிர்­மாணப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யி­னாலும் குறை வரு­மானம் பெறு­நர்­க­ளுக்­கான வீட­மைப்பு ஏறக்­கு­றைய 750,000 ஆக அதி­க­ரித்­தது. மேலும் அர­சாங்கம் பழைய வீட­மைப்பு தொகு­தி­களை முன்­னேற்­ற­க­ர­மான பொது வச­தி­க­ளுடன் புன­ர­மைப்­பினை மேற்­கொள்­வ­தற்கு ஆரம்­பித்­துள்­ளது. மாளி­கா­வத்தை, ஆட்­டுப்­பட்­டித்­தெரு, குண­சிங்­க­புர வீட­மைப்பு திட்­டங்கள் 22 வீட­மைப்பு திட்­டங்கள் ஏற்­க­னவே முழு­மை­யாக நவீன மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சொய்­சா­புர என்­டர்சன் உள்­ள­டங்­க­லாக இன்னும் 23 வீட­மைப்பு திட்­டங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

2.28 பாது­காப்பு மற்றும் வாழ்­வா­தார அபி­வி­ருத்­தி­யுடன் கூடிய கிரா­மிய மற்றும் நக­ரங்­களில் புதிய வச­திகள், மோட்டார் சைக்­கிள்கள், முச்­சக்­கர வண்­டிகள், கை ட்ரக்­டர்கள், சிறிய கார்கள், நீர் பம்­பிகள், மீன்­பிடி பட­குகள் என்­ப­வற்­றினை கொள்­வ­னவு செய்­வதன் மூலம் அவர்­க­ளது வாழ்க்கைத் தரத்­தினை உயர்த்­து­வ­தற்கு பல்­வே­று­பட்ட குறை வரு­மானம் பெறும் குடும்­பங்­க­ளுக்கு உத­வி­யாக அமைந்­தது. பெரும்­பா­லான குறை வரு­மானம் பெறு­நர்கள் கைய­டக்கத் தொலை­பே­சி­களைக் கொண்­டுள்­ளனர். குறை வரு­மானம் பெறு­நர்­க­ளுக்கு மத்­தியில் வரு­மான வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரங்கள் என்­பன வறுமை கோட்­டிற்கு கீழ் உள்­ள­வர்­க­ளி­டத்தில் வீழ்ச்­சி­யினை காட்­டு­கின்­றது.

2.29 தேசிய வறு­மைக்­கோட்­டிற்கு கீழ் வாழ்­கின்ற மக்­களின் எண்­ணிக்கை 2012/13 இல் 8.7 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2006/7 இல் 15.7 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்­தது. கிரா­மிய வறுமை 15.7 சத­வீ­தத்­தி­லி­ருந்து 7.6 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்த அதே­வேளை பெருந்­தோட்டத் துறையில் வறுமை 32 சத­வீ­தத்­தி­லி­ருந்து 10.9 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்­தது. நாளொன்­றுக்கு 2 டொல­ருக்கு குறை­வான வரு­மானம் பெறும் மக்கள் 28.3 சத­வீ­தத்­தி­லி­ருந்து 18.9 சத­வீ­த­மாகக் குறை­வ­டைந்­தது. 2013இல் தாய் இறப்பு விகிதம் ஒரு இலட்சம் உயிர்ப் பிறப்­பு­க­ளுக்கு 12.1 இலி­ருந்து 7.2 ஆக குறை­வ­டைந்­தது.