2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் IV
அடுத்த வருடத்திலிருந்து விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டத்தினை ஒத்ததாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
33.2 வதிவிட விசாவினை கொண்டில்லாத வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் எமது தாய் நாட்டிற்கு சேவை செய்வதற்கு இயலுமான வகையில் இரட்டை பிரசாவுரிமையினை அல்லது 5 வருட தொழில் விசாவினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற உயர் வருமானம் பெறும் இலங்கையர்கள் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அதன் பெறுமதியில் 60 சதவீத வெளிநாட்டு செலாவணியை இலங்கை வங்கிகளில் வைப்பிலிடுவதன் மூலம் அரசாங்க ஊழியர்களைப் போன்று சலுகை தீர்வு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
34. பெண் தொழில் முயற்சியாளர்கள்
34.1. இவ்வருடத்தில் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் 25 மகளிர் தொழில் முயற்சியாளர்களுக்கு எவ்வித பிணைப் பொறுப்புமின்றி ரூபா 250,000 வரை மூலதன கடன்களாக வழங்குவதற்கு பெண் தொழில் முயற்சி அபிவிருத்தியில் ஈடுபடுகின்ற பிராந்திய வங்கியின் மூலம் மகளிர் தொழில் முயற்சி கடன் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. திவி நெகும முன்னெடுப்புகளின் மூலம் தமது வியாபாரத்தினை வெற்றிகரமாக அபிவிருத்தி செய்யும் மகளிர் தொழில் முயற்சிகள் அல்லது இத் திட்டத்தின் கீழ் தமது சொந்த முயற்சியினால் ஈடுபடுபவர்கள் உதவியளிக்கப்பட்டு 2015 - 17 காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் 25 மகளிர் தொழில் முயற்சிகளுக்கு மேலும் வசதியளிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அவர்களது அபிவிருத்திக்காக தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகளை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையும் வழங்கும்.
35. சிறியளவு துறைகளுக்கான
காணி உடமை
35.1. அரச காணிகளில் குறுகிய காலத்திற்கு வதிபவர்கள் மாதம் ரூபா 25,000 அல்லது வருடத்திற்கு ரூபா ரூபா 300,000 இற்கு குறைவான வருமானம் பெறுவார்களாயின் காலத்திற்குக் காலம் நகரப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்படும் இடங்களில் நிவாரணம் வழங்குவதற்காக காணி குத்தகை வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். ஒவ்வொரு 300,000 ரூபாவினை விஞ்சிய 100,000 ரூபா வருமானத்திற்கும் 0.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரையான மட்டத்தில் ஏனையவர்களுக்கு குத்தகை வரி விதிக்கப்படும் 4 சதவீத கட்டமைப்பு வருடமொன்றிற்கு 600,000 ரூபாவிற்கு அதிக வருமானம் பெறுநர்களுக்கு விதிக்கப்படும்.
35.2. அரச காணிகள் கட்டளைச் சட்டத்திற்கமைவாக பராதீனப்படுத்தப்பட்ட அத்தகைய காணிகளின் ஆதனப் பெறுமதி பராதீனப்படுத்தப்பட்ட திகதியில் உள்ளவாறு அபிவிருத்தி செய்யப்படாத பெறுமதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எவ்வித நிலுவைக் கட்டணமும் விதிக்கப்படாததுடன் வதிவிட பயன்பாடு தவிர்ந்த சிறியளவிலான வியாபார செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் காணிகளுக்கு இந்த குத்தகை கட்டண ஒழுங்கு பிரயோகிக்கப்படும். இது அரச காணிகளின் உரித்துரிமை தொடர்பாக தீர்க்கப்படாதிருக்கும் 100,000 இற்கும் அதிகமான வழக்குகளுக்கான நிவாரணமாக அமையும். மேற்குறித்த முன்னெடுப்புக்களை செயற்படுத்துவதனை துரிதப்படுத்துவதற்கும் உரித்து நிலையினை உறுதிப்படுத்தும் வகையில் முறையான உரித்துப் பதிவினை மேற்கொள்வதற்காக காணி நில அளவையினை மேற்கொள்வதற்காகவும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சிற்காக ரூபா 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
36. சிறு வியாபாரங்கள்
36.1. சிறிய சிற்றுண்டிச்சாலைகள், கடைகள், தையற்கடைகள், சிகை அலங்கார நிலையங்கள், மளிகைக் கடைகள், பாதை வியாபாரிகள், வாராந்த சந்தைகள் என்பன ஆகக் குறைந்த செலவினத்தில் எமது பொருளாதாரத்தில் பெருமளவிலான சுய வேலைவாய்ப்பினை வழங்குகின்றன. இந்த அதிகளவான சேவை வழங்குனர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோர் நன்மையடைகின்றனர். 50,000 ரூபாவிற்கு குறைந்த மாதாந்த புரள்வினைக் கொண்ட சிறு வியாபாரிகள் அனைவருக்கும் உள்ளூராட்சி மன்றங்களினால் விதிக்கப்படும் அனைத்துவிதமான வரிகளிலிருந்தும் நான் விலக்களிப்பதற்கு முன்மொழிகின்றேன்.
அவர்களுக்கு வரிகள் மற்றும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட சூழலொன்று ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மாநகரப் பிரதேசங்களில் புதிய பாதைகளிலும் வாராந்த சந்தைகளிலும் நடமாடும் வியாபாரங்களில் ஈடுபடுகின்ற பாதையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு பொருத்தமான இட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய தையற் கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்களுக்கு தமது சேவைகளை நவீனமயப்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் மற்றும் சிகையலங்கார உபகரணங்களின் மூலம் அறிமுகம் செய்வதற்கு 6 சதவீத வட்டியில் ரூபா 50,000 வரை கடன் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் படகு நகரமானது 83 சிறிய நடைபாதை வியாபாரிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிறிய வியாபாரிகளின் வாழ்வாதார மற்றும் வியாபார சூழ்நிலையினை மேம்படுத்துவதற்காக அடுத்த வருடத்தில் கொழும்பு கோட்டையிலுள்ள ஏறக்குறைய 1,500 சிறிய வியாபாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக புறக்கோட்டையிலுள்ள ஷாமர்ஸ் கனரி 9 ஏக்கர் காணியில் தரிப்பிட மற்றும் ஏனைய சமுதாய வசதிகளையும் கொண்ட மிகப்பெரும் சந்தைத் தொகுதியொன்றினை நிர்மாணிப்பதற்கு ரூபா 1,200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
37. மரத் தளபாடங்கள் மற்றும்
வீட்டு அலங்காரம்
37.1 மரத்தளபாட கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறிப்பாக மொறட்டுவை போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களிலுள்ள எமது மக்களின் கைவினைத்திறனை கருத்திற்கொண்டு ஏற்றுமதிகளுக்கான பாரம்பரிய தளபாட தயாரிப்புக் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வதில் இலங்கை முக்கிய வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. ஏற்றுமதிகளுக்காக இக்கைத்தொழிலுக்கு உதவும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களுக்கு வெளியார் சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் தேசிய மரக்கூட்டுத்தாபனத்திடமிருந்தும் பிரபலமான உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெருமளவிலான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கான உற்பத்திகளுக்கு வசதியளிக்கும் வகையில் பலகை உயர்தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதி மேற்கொள்ளப்படும்.
37.2 தனித்துவமான அரும் பொருட்கள், வீட்டு அலங்காரம், ஆடை அலங்காரம், நூல் அலங்கார வேலை, பெறுமதி வாய்ந்த உலோகப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உற்பத்திகள், மட்பாண்ட பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறிய கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டங்களை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வீட்டுத்தளபாடப் பொருட்கள் மற்றும் அலுவலக தளபாடங்களின் இறக்குமதி மீதான மட்டுப்பாடு, உள்நாட்டு தளபாடக் கைத்தொழிலினை ஊக்குவிக்கும் வகையில் கடுமையாக பின்பற்றப்படும் ஹோட்டல் மற்றும் ஆதன அபிவிருத்தியாளர்கள் அவர்களது முதலீட்டிற்கான அங்கீகாரம் வழங்குவதற்கான நிபந்தனையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளபாடங்களை முடியுமானளவு அதிகமாக பயன்படுத்துமாறு வேண்டப்படுவர்.
38. இரத்தினக்கல் மற்றும்
ஆபரணக்கைத்தொழில்
38.1 ஆபரண ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக 50 சதவீத தீர்வை விலக்களிப்பாக ஏற்றுமதி நோக்கத்திற்காக வெளிநாட்டு செலாவணியினை பயன்படுத்தி ஏற்றுமதியாளர்களால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான தீர்வையினை 3.5 சதவீதமாக குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தினை ஏற்றுமதி பெறுமதியில் 0.25 சதவீதமாக குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இக்கைத்தொழிலுக்கு புதிய பரிமாணமொன்றினை வழங்கும் வகையில் மாகம்புர றுஹுணு அபிவிருத்திக்கு சர்வதேச கவர்ச்சியினை வழங்கும் வகையில் இரத்தினக்கல் ஆபரண தயாரிப்பு வலயமொன்றினையும் இரத்தினபுரியில் இரத்தினக்கல் விற்பனை நிலையமொன்றினையும் உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
39. கைத்தொழில் மயமாக்கலின்
புதிய அலை
39.1 ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போட்டிக் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் 300 தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். 3 வருட காலப்பகுதிக்கு அரைவாசி வரி விடுமுறை மற்றும் பங்கிலாப வரியிலிருந்து விலக்களிப்பு என்பவற்றிற்கு மேலதிகமாக பொறித்தொகுதி மற்றும் இயந்திர இறக்குமதிக்கான தேய்வு பெறுமானத்தினை மொத்தமாக கொடுப்பனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். கைத்தறி தொழில்துறை உலக சந்தைக்கான வழங்கலினை மேற்கொள்ளும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தறி தொழிலாளர்களுக்கு நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ரூபா 500 மில்லியனுக்கு அதிகமான புதிய முதலீடுகளில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு 7 வருடங்களுக்கு அரைவாசி வரி விடுமுறை வழங்கப்படுவதுடன் அத்தகைய முதலீடுகள் 2015 முடிவடைவதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
40. முன்னோடி தொழில் முயற்சிகளுக்
கான அங்கீகாரம்
40.1 1977இல் திறந்த பொருளாதாரத்திற்கு முன்னர் இலங்கையில் கைத்தொழில்களை ஆரம்பித்த தொழில் முயற்சியாளர்கள் இறக்குமதிப் போட்டியுடன் அவர்களது ஆற்றல்களை நிலையாக பேணியதுடன் ஏற்றுமதிச் சந்தைகளிலும் சிறந்த செயலாற்றுகையினைக் காட்டியுள்ளனர். எனவே அத்தகைய தொழில் முயற்சிகள் செலுத்த வேண்டிய வருமான வரியில் 10 சதவீத கழிப்பனவு வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
41. பாரிய கொழும்பு பிரதேசத்தில் சுற்
றாடல் மற்றும் கழிவு முகாமைத்துவம்
41.1 பாரிய கொழும்பு பிரதேசத்தில் உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் சுற்றாடல் அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான வேரஸ் கங்கை, களுஓயா, பேரவாவி மற்றும் ஹமில்டன் கால்வாய் என்பவற்றின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்காக காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 1,500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். பாரிய கொழும்பு பிரதேசத்தின் திண்ம கழிவு முகாமைத்துவமும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயம் என்பதனால் துப்புரவேற்பாடு மற்றும் சுகாதார வாழ்க்கைச்சூழலினை உறுதிப்படுத்தும் வகையில் ஏனைய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களினுடன் சம்பந்தப்பட்ட ஏனைய அமுல்படுத்துகை நிறுவனங்களுக்கும் 2015 – 17காலப்பகுதியில் ரூபா 10,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
42. நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
42.1 கண்டி, பதுளை, குருநாகல், காலி, இரத்தினபுரி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகர அபிவிருத்திகளுடன் இணைக்கும் வகையில் நகர அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி சார்ந்த சமுதாய வசதிகள் மற்றும் நவீன நகர வாராந்த சந்தைகளின் அபிவிருத்தி என்பவற்றிற்காக ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
42.2 2014 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு முறையான வீட்டு வசதியற்ற மற்றும் சுகாதார சீர்கேடான சூழலில் வாழ்கின்ற கொழும்பு நகரத்திலுள்ள ஏறக்குறைய 50,000 குடும்பங்களுக்கான வீடமைப்பு அபிவிருத்தி முன்னெடுப்பானது ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வீடமைப்பு திட்டங்கள் 2015இல் நிறைவு செய்யப்படுவதுடன் சேரிப்புறங்களில் வசிப்பவர்களுக்கு வாழ்வதற்கான வசதிகளுடன் கூடிய சிறந்த வீடுகள் வழங்கப்படும்.
சொய்சாபுர, எல்விட்டிகல, என்டர்ஸ்சன் வீடமைப்பு தொகுதிகள், ஜயவட்டனகம, மத்தேகொட, அந்தராவத்தை உள்ளடங்கலான வீடமைப்பு திட்டங்களின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்காகவும் 2012 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு ஏனைய 34 வீடமைப்பு திட்டங்களையும் தற்பொழுதிருக்கும் வீடமைப்பு திட்டங்களை நவீனமயப்படுத்துவதற்காகவும் ஒதுக்கீட்டினை ரூபா 750 மில்லியனாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். குறை வருமானம் பெறுநர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை இரட்டிப்பாக்கும் வகையில் மேலும் ரூபா 750 மில்லியனை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
43. பெருந்தோட்ட சமுதாய வீடமைப்பு
மற்றும் துப்புரவேற்பாடு
43.1 அடுத்த மூன்று வருடங்களில் பெருந்தோட்டத் துறையில் தற்பொழுது காணப்படும் தரம் குறைந்த வீடுகளுக்கு மாற்றீடாக 50,000 வீட்டு தொகுதிகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது காணப்படும் வீடுகளை துப்புரவேற்பாடு மற்றும் மலசலகூட வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்திற்கு ரூபா 2,000 மில்லியனை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வீட்டு உரிமையாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு மேலும் ரூபா 750 மில்லியனை வீடமைப்பு கடன் திட்டத்திற்காக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
44. சமூகப் பாதுகாப்பு
44.1 2015 ஜனவரியிலிருந்து முதியோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவினை ரூபா 1,000 இலிருந்து ரூபா 2,000 ஆக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். முதியோர் தமது காலத்தினை தினசரி நிலையங்களில் தொலைக்காட்சி, வாசிப்பு மற்றும் ஏனைய வசதிகளுடன் களிப்பதற்கான சூழலினை உருவாக்குவதற்காக அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் முதியோர் கழகங்கள் உருவாக்கப்படும். இந்நிலையங்களில் மருத்துவ சிகிச்சைகள் ஏற்பாடு செய்யப்படும். முதியோருக்கான ஆரம்ப சுகாதார பராமரிப்பு அதேபோன்று கண் பராமரிப்பு என்பவற்றிற்கான துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். எமது சமூகத்தில் முதியோர் பராமரிப்பினை ஊக்குவிக்கக்கூடிய சிறந்த சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகின்றேன்.
சாலியபுர, கதிர்காமம், மீரிகம மற்றும் யாழ்ப்பாணம் முதியோர் இல்லங்களை புனரமைப்பதற்காக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். முதியோர் தொடர்பான பாரம்பரிய குடும்ப ஒழுக்க பெறுமானமிக்க கதைகளை வெளிக்கொணர்வதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ரூபா 100 மில்லியனை நிதி உதவியாக வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
44.2 மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 3,000 ரூபாவினையும், பாடசாலைகளுக்குச் செல்லும் அங்கவீனமுற்ற சிறுவர்களுக்காக மாதாந்த போக்குவரத்து கொடுப்பனவாக 750 ரூபாவினையும் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். நாடு முழுவதிலுமுள்ள தொழிற்பயிற்சி கல்லூரிகளை அத்தகைய வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகின்றேன். இந்த பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு புகையிரத ஆணைச்சீட்டுக்கள், பண்டிகை முற்பணங்கள், அக்ரஹார காப்புறுதி நன்மைகள் ஆகியவற்றினையும் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
45. சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு
45.1 இலங்கை மகளிர் பணியகம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினால் சிறுவர் துஷ்பிரயோகமும் பெண்களுக்கெதிரான வன்முறையும் நியாயமானளவு குறைந்துள்ளது. பெற்றார் –ஆசிரியர் சங்கங்கள், திவி நெகும சமுதாய அடிப்படை நிறுவனங்கள் மற்றும் இளைப்பாறிய அரசாங்க ஊழியர்களை குடும்ப ஆலோசனை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை விரிவாக்குவதற்கும் பிரதேச செயலகங்களிலுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களை வலுப்படுத்துவதற்கும் ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
46. விளையாட்டுத் துறை
46.1 எமது நாடு பல்தரப்பட்ட விளையாட்டுக்களைக் கொண்ட சர்வதேச நிகழ்வொன்றான மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டினை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளது. இந்த சர்வதேச நிகழ்வுக்காக இலங்கையின் அனைத்து மூலைமுடுக்குகளிலிருந்தும் குறிப்பாக கிராமிய பாடசாலைகளிலிருந்து எமது இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.
எனவே, எமது இளைஞர்களை பல்தரப்பட்ட ஆற்றலுடையவர்களாக விருத்தி செய்வதுடன் அடுத்த வருடத்திலிருந்து பாடசாலை மட்டத்தில் பல்தரப்பட்ட விளையாட்டுக்களையும் அறிமுகப்படுத்துவதற்கு இது சிறந்ததொரு பின்புலமாக அமையும். எனவே, அடுத்த வருடத்திலிருந்து விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் இல்லாத சகல பாடசாலைகளுக்கும் விளையாட்டு திணைக்களத்திலிருந்து பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக ரூபா 750 மில்லியனை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்.
எமது பாடசாலை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் நாட்டில் ஏற்கனவே காணப்படுகின்ற விளையாட்டு தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தும் வகையில் அவற்றினை தயார்படுத்துவதற்கும் சுகததாச மற்றும் கெத்தாராமை விளையாட்டரங்குகளை புனரமைத்தல், கொழும்பில் இது தொடர்பான ஏனைய வசதிகளை அதிகரித்தல் என்பவற்றிற்கு நிதி உதவி வழங்குவதற்காக ரூபா 2,250 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். எமது நாடு விளையாட்டுத் துறையில் மிக சிறந்து விளங்குகின்றது என்ற வகையில் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான பயிற்சி வழங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு கல்வி நிறுவகமொன்றினை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
47. பிரதேச சபைகளை வலுவூட்டல்
47.1 துப்புரவேற்பாடு, கழிவு முகாமைத்துவம், வடிகாலமைப்பு, பராமரிப்பு, பாதைகள், சிறுவர் பூங்காக்கள் போன்ற சமுதாய அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு பெரும்பாலான பிரதேச சபைகளுக்கு போதிய வளங்கள் காணப்படுவதில்லை என்பதனை உணர்ந்து 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் அவற்றினது பராமரிப்பு அலகுகளை வலுப்படுத்தும் வகையில் சிறிய நிர்மாண உபகரணம் மற்றும் இயந்திரங்கள், ட்ரக்டர்களை அரசாங்கம் வழங்கியது. அத்தகைய சமுதாய அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான வருமானம் குறைந்த பிரதேச சபைகளுக்கு 2015இல் மாதமொன்றுக்கு ரூபா 2 மில்லியனாக மானிய உதவிகளை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அவற்றினது பராமரிப்பு, துப்புரவேற்பாட்டு அலகுகளை இயக்குவதற்கான பதவியணி தேவை என்ற வகையில் ஒப்பந்த வேலைகளுக்கு -பரமாக அத்தகைய பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு கள உத்தியோகத்தர்கள் 1500 பேரினை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மேலதிகமாக ரூபா 600 மில்லியனை நான் ஏற்பாடு செய்கின்றேன்.
48. மாகாண சபைகளின் அபிவிருத்தி
செலவினம்
48.1 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக மாகாணங்களுடன் நிதியமைச்சு தொடர்புபடுவதுடன் ௨௦௧௫ -- ௧௭ நடுத்தர கால வரவு செலவுத் திட்ட வேலைச் சட்டகத்திற்கேற்ப முன்னுரிமைகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட செலவின நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுவதனையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
48.2. இப்பின்னணியில் மாகாணப் பாடசாலைகளை துப்பரவேற்பாடு, ஆசிரியர் வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளடங்கலாக சிறுவர் நட்பு சூழலொன்றாக மாற்றுதல், மாகாண வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களை வலுவூட்டல், விவசாயம், கால்நடை, மீன்பிடி மற்றும் சிறு கைத்தொழில்கள் தொடர்பான மாகாண சேவைகளை உறுதிப்படுத்தல், பயணிகள் போக்குவரத்து வசதி, பாதை, சந்தை வசதிகள் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. எனவே, இச் செயற்பாடுகளினை நடுத்தர கால வரவு செலவுத் திட்ட வேலைச் சட்டகத்திற்குள் விரிவாக்குவதற்காக மாகாண சபைகளுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒதுக்கீடுகளை ரூபா 1,௦௦௦ மில்லியனாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
பகுதியளவு நகர மற்றும் கிராமியப் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு 50,௦௦௦ ரூபா சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
௪௯. தனியார் போக்குவரத்து
௪௯.௧ பயணிகள் போக்குவரத்தில் ௬௦ சதவீதமான பேரூந்து சேவைகளை வழங்கும் இத்துறையின் தரத்தினை மேம்படுத்துவதற்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பயிற்சி வழங்கல் வசதிகளை விரிவாக்குவதற்கு போக்குவரத்து பயிற்சி நிறுவகமொன்றினை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். முற்கொடுப்பனவு அட்டைத் திட்டம் வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும்.
ஆகக் குறைந்தது 5 வருடங்கள் சேவையில் ஈடுபட்ட ஒவ்வொரு பேரூந்துகளுக்கும் வரிச் சலுகை அடிப்படையில் புதிய பேரூந்து இயந்திரங்கள் மற்றும் கியர் பெட்டிகளை இறக்குமதி செய்வதனை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். ஆகக் குறைந்தது ௫ வருடங்கள் சேவையிலீடுபட்ட பேரூந்து உரிமையாளர்களினால் புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு ௬ சதவீத வட்டி அடிப்படையில் கடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். தனியார் பேரூந்து உரிமையாளர்களினால் பயன்படுத்தப்பட்ட பேரூந்துகளின் விற்பனையிலிருந்து வருமான வரி விலக்களிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
48.3 பாடசாலை சிறுவர்கள், சுற்றுலா பயணிகள், சிறிய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொருள் போக்குவரத்துக்கான தேவைகளுக்கு வசதியளிக்கும் வகையில் வேன்கள், சிறிய பேரூந்துகள் மற்றும் ட்ரக்குகளின் இறக்குமதி மீதான வரிகள் குறைக்கப்படும். தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் மாற்றுக் காப்புறுதி ஒன்று மேற்கொள்ளப்படும் வகையில் சுய தொழில் புரிவோருக்கு திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் சமூகப் பாதுகாப்பு பிரிவினூடாக புதிய காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
5௦. மின்சாரக் கட்டணம்
5௦. மின் உற்பத்தி மற்றும் பகிர்வு ஆதனங்களின் அடிப்படை முகாமைத்துவத்தில் வினைத்திறன் காணப்பட்டதனால் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் வீட்டுப் பாவனையாளர்களின் மின்சாரச் செலவினத்தினை ௩௫ சதவீதத்தினால் குறைப்பதற்கு முடியுமாக இருந்தது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், உணவுச் சாலைகள் மற்றும் சிறிய கடைகளின் பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக மாதமொன்றுக்கு ௩௦௦ அலகுகளை விட குறைவாக பயன்படுத்தும் கைத்தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தையும் ௨௫ சதவீதத்தினால் குறைப்பதற்காக தனியான கட்டண முறையொன்றினை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். ௨௦௧௪ நவம்பர் மாதத்திலிருந்து ஏனைய அனைத்து கைத்தொழில்களுக்கும் ௧௫ சதவீத மின் கட்டண கழிப்பனவினை மேலும் முன்மொழிகின்றேன்.
௫௦.௨ எரிபொருள் இறக்குமதிகளை குறைப்பதற்கும் சுற்றாடல் நட்பு வாழ்க்கை முறையினை ஊக்குவிப்பதற்குமாக மின்சார கார்கள் அனைத்துமான சுங்க அடிப்படை வரிகளை ௨௫ சதவீதத்தினால் குறைப்பதற்கும் முன்மொழிகின்றேன்.
50. ரணவிரு பெற்றோர் நன்றி பாராட்டல்
51.1 எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்திலிருந்து எமது தாய் நாட்டிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த எமது இராணுவப் படையில் தமது பிள்ளைகளை சேர்த்த பெற்றோரினை பாராட்டி வாழ்த்தும் வகையில் எமது படை வீரர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் 50௦ ரூபாவினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவினை மாதத்திற்கு 1,௦௦௦ ரூபாவாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும் 2015 ஜனவரியிலிருந்து இக்கொடுப்பனவினை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு சேவை படையினரின் பெற்றோருக்கும் விரிவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
௫௨. ஜூலை வேலை நிறுத்தக்காரர்களுக்
கான நிவாரணம்
௫௨.௧ ௨௦௧௩ வரவு செலவுத் திட்டத்தில் ௧௯௮௦ ஜூலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் மற்றும் அரசாங்கத் துறையினைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இதற்கு முன்னர் நட்ட ஈடு எதனையும் பெற்றிராத ௬௫ வயதைக் கடந்த ஒவ்வொருவருக்கும் ரூபா ௫,௦௦௦ இனை மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவாக நான் வழங்கினேன். இக்கொடுப்பனவினை ௨௦௧௫ ஜனவரியிலிருந்து ரூபா ௬,௦௦௦ ஆக அதிகரிப்பதற்கும் வயது எல்லையினை ௬௩ ஆக குறைப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். இதனை அத்தகைய வேலை நிறுத்தக்காரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் விரிவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
52. இலங்கை பொலிஸ் சேவை
52.1 இலங்கை பொலிஸ் சேவையானது அதி கூடிய வாகன நெருக்கடி, குற்றச் செயல்கள், வரி மற்றும் நிதி மோசடிகள், சட்ட ரீதியற்ற மதுபானம், போதைப் பொருள் வியாபாரம் மற்றும் விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களில் சிவில் பாதுகாப்பு பொறுப்புக்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களை முன்னேற்றகரமாக மேற்கொண்டு வருகின்றது. இப்பின்னணியில் புதிய ஆட்சேர்ப்பு, பயிற்சி, பதவியுயர்வு மற்றும் அவர்களது சேவைக் கொடுப்பனவுகள் என்பன திருத்தப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து பொலிஸ் சேவையினை மிகவும் வினைத்திறன் மிக்கதாக தரமுயர்த்துவதற்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் கல்வி நிறுவகத்தினை உயர் தொழில் திறமைகளை விருத்தி செய்யும் வகையில் சகல வசதிகளுடன் விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் பணியாற்றுகின்ற பொலிஸ் அலுவலகர்களின் வீடமைப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாரிய கொழும்பு பிரதேசத்தில் ௩ புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
53.2 போதிய வதிவிட வசதிகள் இல்லாமல் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் தங்குமிட வசதிக் குறைபாட்டினை நீக்குவதற்கு தமது வதிவிட மாவட்டங்களுக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர்களுக்கான வதிவிட வாழ்க்கைச் செலவு கொடுப்பனவினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். ஒவ்வொரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட்மாருக்கு 50,0000 ரூபா சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். பொலிஸ் சேவை நிர்வாகத்தினை உறுதிப்படுத்துவதற்கும் சேவையினை அடிப்படையாகக் கொண்டு சம்பள கட்டமைப்பினை உருவாக்குவதற்கும் தனியான சேவைப் பிரமாண குறிப்பொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
54. முப்படையினரினதும் ஆற்றல் விருத்
தியினை உறுதிப்படுத்தல்
54.1 இலங்கை முப்படையினரும் தேசியப் பாதுகாப்பினை வழங்குவதில் சிறந்த செயலாற்றுகையினை வழங்கியுள்ளதுடன் அவர்களது நடத்தையில் சிறந்த தரத்தினையும் பேணி வருகின்றனர். பயங்கரவாதத்தினை முறியடிப்பதில் ஏறக்குறைய 30 வருடங்களாக அர்ப்பணிக்கப்பட்ட மனிதவள மற்றும் நிதி வளங்கள் நவீன சூழலில் சமாதானத்தின் போதான பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கு தேவையான அத்துறையின் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய தேவையான வளங்களை அபிவிருத்தி செய்ய முடியாதாக்கியது.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு கடல், வான் மற்றும் தரை பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் முப்படையினரினதும் ஆற்றல் விருத்தி செய்யப்படுவது அவசியமானதாகும். எனவே எமது நாட்டினை 2020இல் உயர் நடுத்தர வருமானப் பொருளாதாரமொன்றாக மாற்றும் அதேவேளை முப்படையினருக்கும் தேவையான உட்கட்டமைப்பு சேவை வழங்கல் மற்றும் உயர் தொழில் திறமை என்பவற்றினை அபிவிருத்தி செய்வதற்காக 2015- 16 இல் மூலதனச் செலவினமாக ரூபா 10 பில்லியனை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். முப்படையினருக்கும் வெளிநாட்டு பயிற்சி வசதிகளை அதிகரிப்பதற்கும் 2015 ஜனவரியிலிருந்து புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
முப்படையினைச் சேர்ந்தவர்களினது குடும்ப சூழலினை முன்னேற்றுவதற்கு அவர்களது மூன்றாவது குழந்தை பிறப்பிற்காக வழங்கப்பட்ட மானியமான ரூபா 100,000இனை மேலும் 3 வருடங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்மொழிகின்றேன். இந்த மானியம் பொலிஸ் சேவையில் கடமையாற்றுபவர்களுக்கும் விரிவாக்கப்படும்.
55. முதியோர் வட்டி வருமானத்தினை ஸ்திரப்படுத்தல்.
55.1 அரசாங்க வங்கிகளில் தமது வைப்புக்களை பேணுகின்ற இளைப்பாறிய மற்றும் முதியோர் வருடாந்த வட்டி வீதத்தினை 12 சதவீதமாக வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். அத்தகைய வைப்புக்களுக்கு இந்த வட்டி விகிதத்தினை அரசாங்க வங்கிகள் வழங்கும் வகையில் வயோதிபர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்துவதற்காக அடுத்த வருடத்தில் அரசாங்க கடன் நிகழ்ச்சித் திட்டத்தில் ரூபா 30 பில்லியனை 12 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
அனைத்து வர்த்தக வங்கிகளிலும் வயோதிபர்களினால் பேணப்படுகின்ற தனிப்பட்ட வைப்புகளுக்கான நியதிச்சட்ட ஒதுக்கு தேவைப்பாட்டிற்கு மத்திய வங்கி விலக்களிப்பு வழங்கும். நிதிக் கம்பனிகளுக்கும் அவர்களது வைப்பு மீதான வட்டியினை 11 சதவீதமாக வழங்குவதற்கும் மத்திய வங்கி அனுமதித்துள்ளது. முதியோர் கணக்குகளில் இடப்பட்ட வைப்புகளுக்கான வட்டி வருமானத்தினை வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிப்பதற்கும் அடுத்த வருடத்திலிருந்து வட்டி வருமானத்தினை 2.5 சதவீதமாக குறைப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
56. சந்தைப்படுத்தல் வலையமைப்பு
56.1 நெற் சந்தைப்படுத்தல் சபையின் விருத்தி மற்றும் லங்கா சதொச ஒசுசல மீன்பிடிக் கூட்டுத்தாபனம் மில்கோ மற்றும் லக்சல போன்ற சந்தைப்படுத்தல் நிலையங்கள் நுகர்வோருக்கும் அதேபோன்று உற்பத்தியாளருக்கும் உதவும் வகையில் தளம்பலற்ற விலையினை வழங்க முடிந்தது. எனவே சிறுவர் பால்மா மருந்துப் பொருட்கள் பாலுணவு கோழி இறைச்சி மற்றும் முட்டை மீன் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஒரே கூரையின் கீழ் நியாயமான சந்தை விலையில் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் அனைத்தினதும் சந்தைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் களஞ்சிய வசதிகளை விரிவாக்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
இந்த சுப்பர் மார்க்கட்டுகளில் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான விசேட வசதிகள் அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படும். போட்டிச் சந்தையினை ஊக்குவிப்பதற்கு நகரப் பிரதேசங்களில் வாராந்த சந்தை வசதிகள் மற்றும் விசேட பொருளாதார நிலையங்களும் துரிதமாக விரிவாக்கப்படும். இம்முன்னெடுப்புகளுக்காக ரூபா 3000 மில்லியன் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
56.2 தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்ட சுப்பர் மார்க்கட்டுகள் மற்றும் பாரியளவிலான சில்லறை வர்த்தகர்கள் அவர்களது சொந்த உற்பத்திகளை அதிகளவு இலாபத்தில் விற்பனை செய்வதுடன் உள்நாட்டு சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குனர்கள் நியாயமற்ற முறையில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அத்தகைய சுப்பர் மார்க்கட்டுகள் அனைத்து வழங்குனர்களையும் தமது வியாபார நிலையங்களில் சமமாக நடத்துவதனை உறுதிப்படுத்தும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தினை திருத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். உள்நாட்டில் வழங்கப்பட்ட உற்பத்திகளினால் ஆகக் கூடிய சில்லறை விலையினை 25 சதவீதத்தினை அதிகரிக்காத வகையில் கட்டணங்களை விதிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். பெறுமதி சேர் வரி 1 சதவீதத்தினாலும் மின்சாரம் 15இலிருந்து 25 சதவீதமாகவும் வங்கிகளின் கடன் பெறல் விகிதம் குறிப்பிடத்தக்களவாக குறைக்கப்பட்டமையினால் அத்தியாவசிய பொருட்களினது விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு சுப்பர் மார்க்கட்டுகள் மற்றும் ஏனைய வியாபார சமூகங்கள் அனைத்தினையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
57. அரசாங்க ஊழியர்களுக்கான புதிய
சம்பள கட்டமைப்பு
57.1 கடந்த வருடம் என்னால் நியமிக்கப்பட்ட புதிய ஆணைக்குழு 2006இல் அறிமுகப்படுத்தபட்ட சம்பள கட்டமைப்புக்கான சில மாற்றங்களை பரிந்துரை செய்துள்ளது. எனவே 2015 ஜனவரியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் புதிய சம்பள கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்கமைவாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுகள் சம்பளக் கட்டமைப்புடன் சேர்த்துக் கொள்ளப்படுவதுடன் ஆகக் குறைந்த சம்பளம் மாதமொன்றுக்கு 15000 ரூபாவாக உயர்த்தப்படும்.
சம்பள விகிதத்தினை சிற்றூழியர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையில் 1இலிருந்து 4.25 ஆக பேணுவதற்கும் உயர்ந்த சம்பள படியேற்றங்களை வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன். அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவினை கொடுப்பனவினை 2015 ஜனவரியிலிருந்து மாதமொன்றுக்கு 2200 –10000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்கமைவாக அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்த மாதாந்த வருமானம் Rs. 25000 ரூபாவாக அதிகரிக்கும்.
57.2 பதவி உயர்வின்மை மாதாந்த சம்பள திருத்தங்களில் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான மாற்றங்கள் மற்றும் மேலதிக பணிகளுக்கான கொடுப்பனவுகளில் காணப்படும் முரண்பாடுகள் காரணமாக அரசாங்க சேவையிலுள்ள குறைந்த மட்ட வகுதியினைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மத்தியில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இம்முரண்பாடுகளை திருத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். பல்கலைக்கழகங்கள் கல்வி சுகாதாரம் நீதித்துறை பொலிஸ் புகையிரத சேவை மற்றும் தபால் சேவை போன்ற விசேட சேவைகளுக்கு புதிய சம்பள கட்டமைப்புக்கான அங்கீகாரம் வழங்கப்படுவதுடன் இதற்கமைவாக விசேட சேவை கொடுப்பனவுகளும் வழங்கப்படும். விசேட சேவை கொடுப்பனவானது அத்தகைய ஏற்புடையதான அரசாங்க சேவைகள் அனைத்திற்கும் பொருத்தமான வகையில் அதிகரிக்கப்படும்.
உயர் தொழில் முறை வகுதியினருக்கு வழங்கப்பட்ட தொழில் முறை கொடுப்பனவானது இலங்கை நிர்வாக சேவையின் வகுப்பு 1மற்றும் அதற்கு மேலுள்ள அலுவலர்களுக்கும் ஏனைய நாடளாவிய அனைத்து சேவைகளுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க உயர் தொழில் தகைமைகளைக் கொண்டுள்ளதுடன் 20 வருட சேவையைக் கொண்ட அரசாங்க ஊழியர்களுக்கும் விரிவாக்கப்படும். அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் 150 நாட்களுக்கு மேல் அமைய ஊழியர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களை உள்ளீர்ப்பதற்கு தேவையான பதவியணிகளை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
57.3 புதிய சம்பள கட்டமைப்பு மாற்றம் கொடுப்பனவு மற்றும் பிற சம்பளம் தொடர்பான நன்மைகள் 2015 ஜனவரியிலிருந்து மாதமொன்றிற்கு 3,500 – 15,000 ரூபாவாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதுடன் கீழ் நிலையிலுள்ள ஊழியர் ஒருவர் ஆகக் குறைந்த சம்பள வருமானமாக 30 000 ரூபாவினை பெற்றுக்கொள்வார். அனைத்து கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக மொத்த சம்பளத்திலிருந்து 40 சதவீதம் வரை அரசாங்க ஊழியர்கள் கடன் பெறுவதனை அனுமதிப்பதனை நான் முன்மொழிகின்றேன்.
அரசாங்க ஊழியர்களின் சிறுவர்களுக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொழிற்பயிற்சி மற்றும் உயர்கல்வி புலமைப்பரிசில்களும் கிடைக்கும் வகையில் விரிவாக்கப்படும் பண்டிகை முற்பணங்களை 10 தவணை கட்டணங்களில் செலுத்தும் வகையில் 10,000 ரூபா கடன் வரையறையினை கொண்ட வங்கி அட்டை ஒன்று அனைத்து அரசாங்க ஊழியர்களிற்கும் வழங்கப்படும். இக்கடன் வசதியானது தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் உத்தரவாதப்படுத்தப்படும். அக்ரஹார திட்டத்தின் கீழ் சத்திர சிகிச்சைகளுக்கான காப்புறுதியினை 350,000 – 500,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
57.4 கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற இடமாற்றல் சேவைகளைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் அவர்களது சேவைக் காலத்தில் பல்வேறு இடங்களில் சேவையாற்றி விட்டு இளைப்பாறியதுடன் இறுதியாகப் பெற்ற தனது சம்பளத்தில் 75 சதவீதத்தினை தமக்கு விருப்பமான வங்கி ஒன்றிலிருந்து பெறுவதனை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். ஊழியர் ஒருவர் ஓய்வூதிய நன்மையினை ஆகக் கூடியது 3 மாதத்திற்குள் பெற்றுக் கொள்வதற்கான செயன்முறைகளை துரிதப்படுத்துவதற்காக கோவைகள் அனைத்தும் உரிய பிரதேச செயலகங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஓய்வூதியத் திணைக்களம் மேற்கொள்ளும்.
58 ஓய்வூதியம் பெறுநர்கள்
58.1 அனைத்து ஓய்வூதியம் பெறுநர்களும் கேட்டுக்கொண்டவாறு ஓய்வூதியம் பெறுநருக்கான சம்பளத்தினை 2006 சம்பளக் கட்டமைப்பில் நான் சேர்த்துக்கொள்ளாது 2015 சம்பளக் கட்டமைப்பில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் திருத்தப்படுவதுடன் ஓய்வூதியம் பெறுநர்களது முரண்பாடுகள் அனைத்தும் திருத்தப்பட வேண்டுமென நான் முன்மொழிகின்றேன். அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிய ஆகக் குறைந்தது 100 000 பேருக்கு அடுத்த வருடத்திலிருந்து ஓய்வூதிய வருமானத்திற்கு மேலதிகமாக சுய தொழில் வருமானமொன்றினை பெற்றுக்கொள்ளும் வகையில் தமக்கான மனைப் பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொருவருக்கும் கடன் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். அத்தகைய கடன்களை எவ்வித பிணைப் பொறுப்புகளுமின்றி அவர்களது மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெறுகின்ற வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
58.2 இந்த சம்பள மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு திருத்தங்கள் அனைத்தும் இடம்பெறுவதற்கு காலமெடுப்பதனால் அனைத்து ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதமொன்றிற்கு ரூபா 50,000 இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கும் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக 100,000 ரூபாவினை 2014 நவம்பர் மாதத்திலிருந்து வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். தனிப்பட்ட சம்பளங்கள் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் திருத்தப்பட்டதுடன் முழுமையான சம்பளங்களும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் பதவிநிலையல்லாத வகுதியினைச் சேர்ந்த அனைவருக்கும் 2015 ஜூலை மாதத்திலும் பதவிநிலை வகுதியினைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் 2015 செப்டெம்பரிலும் நிலுவையாக வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
59. தனியார் துறைக்கான ஆகக்
குறைந்த சம்பளம்
59.1 ஆகக் குறைந்த சம்பளங்கள் சபையினால் வழிகாட்டப்பட்டவாறு தனியார் துறைக்கான ஆகக்குறைந்த சம்பளத்தினை தேசிய சம்பளங்கள் ஆணைக்குழு எனது கவனத்திற்கு கொண்டு வந்தது. தனியார் துறை ஊழியர்களுக்கான மொத்த ஊதியங்கள் திருப்திகரமாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தகைய அதிகரிப்பானது கொடுப்பனவுகளின் மூலமாக அதிகரிக்கப்பட்டதேயொழிய ஆகக் குறைந்த சம்பளமாக காணப்படவில்லை. எவ்வாறாயினும் பல்வேறு பொருளாதார செயற்பாடுகளினால் பொருளாதார வளர்ச்சி ஏறக்குறைய 8 சதவீதத்தினால் அதிகரித்து வேலையின்மைப் போக்கானது குறைவடைந்துள்ள சூழ்நிலையில் சிறந்த ஊதியத்தினை எமது ஊழியப் படைக்கு வழங்குவதற்காக எமது நாட்டில் ஆகக் குறைந்த சம்பளமொன்றினை நிர்ணயிப்பதற்கான காலம் ஏற்பட்டுள்ளது.
59.2 எனவே, 2015 ஜனவரியிலிருந்து ஆகக்குறைந்த சம்பளத்தினை மாதமொன்றுக்கு 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அனைத்து ஆகக்குறைந்த சம்பளங்களையும் மாதமொன்றிற்கு ஆகக்குறைந்தது 500 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த புதிய துறைகள் காணப்படுகின்றன என்ற வகையில் நியாயமான பொருளாதார வகைப்படுத்தல் ஏற்பாடொன்றிற்குள் அத்துறைகளுக்கும் ஆகக்குறைந்த சம்பளச் சபையினை விரிவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். ஒவ்வொரு ஊழியரும் அவரது சம்பளத்திலிருந்து 22 சதவீதத்தினை சேமிக்கும் வகையில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான தொழில் வழங்குனரின் பங்களிப்பினை 2 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்
60. அரசாங்க சேவையில் இளைஞர்
வேலைவாய்ப்பு
60.1 அரசாங்க சேவையிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இளைப்பாறுகின்ற பின்னணியில் மாகாண மற்றும் கிராமிய மைய சேவைகளில் அதிகளவான வெற்றிடங்கள் எற்பட்டுள்ளன. மாகாண தொழில்நுட்ப சேவைகளில் பயிலுனர்களாகவும் முகாமைத்துவம் மற்றும் கணக்கீட்டு உதவியாளர்களாகவும் கிராம பிரதேசங்களில் சேவையாற்றுவதற்கு க.பொ.த. உயர்தர தகைமை பெற்ற பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியாத 50,000 இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். தொழில் பயிற்சி தேவையுடைய தொழில்களை பொறுத்து 3 மாதத்திலிருந்து 1 வருடம் வரைக்குமான தெரிவு செய்யப்பட்ட தொழில்களுக்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி காலத்தின் போது கொடுப்பனவாக ரூபா 8000 வழங்கப்படுவதுடன் பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர் குறித்த தொழில்களுக்காக சாதாரண சம்பளங்களும் வழங்கப்படும். இம்முன்னெடுப்பானது கிராமிய மட்டத்தில் வெளிக்கள ஒத்துழைப்பு அலுவலர்களினதும் அரசாங்கத்துறையில் பகுதியளவான திறன் வகுதி ஊழியர்களினது பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும். எனவே இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக ரூபா 7000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்நிகழ்ச்சித்திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையினால் ஒருங்கிணைக்கப்படும்.
61. பாராளுமன்றம்
61.1 பாராளுமன்ற அலுவலகர்களின் சம்பள திருத்தத்திற்கான தேவையினை நீங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தீர்கள். பாராளுமன்ற ஊழியர்களது முக்கியமான பொறுப்புக்களை கருத்திற்கொண்டு இம்முன்மொழிவுக்கு சாதகமான கவனத்தினை நான் வழங்கியுள்ளேன். எனவே அரசாங்க சேவை சம்பளத்திருத்தத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவு உள்ளடங்கலாக பாராளுமன்ற ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தினை மாதமொன்றுக்கு 16,500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் சம்பளத்தினை அமைச்சுக்களின் செயலாளர்களது சம்பளத்தினை ஒத்ததாக திருத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
வரவுக்கான பாராளுமன்ற விசேட கொடுப்பனவு 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும். பாராளுமன்ற கட்டிடத்தினை புதுப்பிப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீட்டு வசதிகளை வழங்குவதற்கும் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
61.2 அரச தொழில் முயற்சிகளுக்கு விநியோகிக்கப்பட்ட முறிக்கணக்கு மற்றும் வெளிநாட்டு நிதி செலவிடலுக்கான கணக்கீடுகள் தொடர்பில் 2014 ஒதுக்கீட்டு சட்ட கடன் பெறும் வரையறைகளுக்கான திருத்தங்கள் அத்துடன் 2015 ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கான திருத்தப்பட்ட கடன் பெறல் வரையறை என்பன தொழில்நுட்ப குறிப்புக்களில் தரப்பட்டுள்ளன.
62. முடிவுரை
62.1 கடந்த ஐந்து வருடங்களாக பாதுகாப்பும் சமாதானமும் மீள நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் கடந்த 9 வருடங்களின் போது உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார செயற்பாடுகள் மக்களின் அடிப்படை தேவைகளை திருப்திகரமாக நிறைவேற்றும் வகையில் காணப்பட்டுள்ளன. எமது பொருளாதாரத்தினை அறிவு மற்றும் திறன்களினால் உருவாக்கப்பட்ட முன்னேற்றகரமான பொருளாதாரமாக மாற்றுவதற்கு கல்வி திறன் மற்றும் மனித வளங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எமது அடுத்த கட்ட செயற்பாடுகள் இரட்டிப்பாக்கப்படும்.
62.2 எமது சிறுவர்களுக்கு சிறந்த வாழ்க்கையினை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அவர்களது நலனுக்காக எமது முயற்சிகள் அனைத்தையும் நாம் அர்ப்பணிப்போம். 2015 - 17 வருடங்களுக்கான இந்த வரவு செலவுத்திட்டமானது மனித வள அபிவிருத்தியினை உறுதிப்படுத்துவதன் மூலம் 2020 அளவில் எமது மக்கள் 7500 அமெரிக்க டொலர் என்ற எல்லையினை தாண்டி செல்வதற்கான அடித்தளம் இடுகின்றது. எமது சிறுவர்கள் உயர் வருமான பொருளாதாரம் ஒன்றினை நோக்கிய இடைமாறல் நிலையினை அனுபவிப்பதற்கான பெறுமதியான சந்தர்ப்பம் இதுவாகும். இது எம் அனைவரினதும் முக்கிய பொறுப்பாகும்.
62.3 எமது இந்த வரவு - செலவுத்திட்டத்தின் நோக்கம் எஞ்சியுள்ள வறுமையினை இல்லாதொழிப்பதுடன் மக்களை தொற்றாத நோய்களிலிருந்து தடுப்பதுமாகும். மக்களுக்கு தரமான உணவு நுகர்வின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் அரசாங்க ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை அடிப்படையாக கொண்டு தாய் மற்றும் சிறுவர் பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீர்ப்பாதுகாப்பு, உயர் தொழில்நுட்பம் மற்றும் ஈர வலய ஆறுகளிலுள்ள நீரினை உயர் வலய நிலங்களுக்கு திசை திருப்புவதன் மூலம் மாத்திரமே வரண்ட வலய மாவட்டங்களில் ஏற்படும் வரட்சியின் தாக்கத்தினை குறைக்க முடியும்.
62.4 இந்த வரவு செலவுத்திட்டத்திற்காக நீங்கள் அளிக்கின்ற வாக்கு எமது நாட்டினை வறுமையிலிருந்து மீட்பதற்கான வாக்காகும் இது. மொழி மற்றும் சமய வேறுபாடுகளிலிருந்து விடுபட்டு உண்மையில் இணைந்து கொண்ட சமுதாயமொன்றினை வலுவூட்டுவதற்காக எமது மக்களுக்கான வாக்காகும். இலங்கையர் அனைவரையும் அவர்களது மனித வள அபிவிருத்திக்கான சமவாய்ப்பினை அனுபவிப்பதற்கும் பொருளாதார முன்னேற்றங்களினதும் சமவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கும் இயலச்செய்வோம். நாம் அவர்களது உண்மையான பிரதிநிதிகள் என்ற வகையில் எவ்வித சமரசத்தினையும் மேற்கொள்ள முடியாது. இலங்கையினை ஆசியாவின் வளர்ந்து வரும் அதிசயமாக மாற்றுவோம்.
மும்மணிகளுக்கும் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுக!