Breaking News

நவநீதம்பிள்ளையின் பாதையிலேயே பயணம் புதிய ஆணையர் அதிரடி


முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்
பாதையில் தொடர்ந்து பயணிக்க போவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தனது கன்னி உரையினை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

புகலிட கோரிக்கையாளர்களின் உரிமையை அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக மீறிவருகின்றது ,அடைக்கலம் கோருவோரை கடலில் வைத்து விசாரிப்பதையும் கப்பல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதையும் கடுமையாக அவர் கண்டித்துள்ளார்.

எதேச்சாதிகாரமாக தடுத்துவைத்தல் சித்திரவதைக்கு உட்படும் சாத்தியம் ஆகிய மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொள்கை வழிவகுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் 27 ஆவது அமர்வு இன்று ஆரம்பமான போது தனது ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில், இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும் அரங்கேறி வருவதை தான் கண்டிப்பதாகவும் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார். .

இலங்கையிலிருந்து படகில் செல்வோர்கள் உட்பட கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் தஞ்சக் கோரிக்கையாளர்களை வெளிநாடுகளில் வைத்து அவுஸ்திரேலியா பரிசீலிப்பதையும் படகுகளை வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்புவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விமர்சித்துள்ளார்.

இப்படியான காரியங்களால் யதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்படுதல், சொந்த நாடுகளில் சித்திரவதைக்கு ஆளாக நேர்தல் போன்ற பல மனித உரிமை மீறல்கள் வரிசையாக நடக்கக்கூடிய ஆபத்து உள்ளது என அவர் எச்சரித்துள்ளார். மேலும் இலங்கை தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை ஒன்றை நடத்தும் என்று அந்த தீர்மானத்தில் பணிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசாங்கம் மறுத்துவரும் நிலையில் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

ஆனாலும் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் இந்த விசாரணை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கு ஆணையாளர் வாய்மொழியாக விவரம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.