தமிழரசுக்கட்சி தலைவராக மாவை தெரிவு
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக யாழ் மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக இன்று (6.9) தெரிவுசெய்யப்பட்டார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கட்சியின் பொதுசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைராஜசிங்கமும் இணை பொருளாளர்களாக அன்ரனி ஜெகநாதன் மற்றும் இரட்ணசபாபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட துணைத் தலைவராக பொன். செல்வராஜா மற்றும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான எஸ்.பரஞ்சோதி, ஏ.எம்.இமாம் ஆகியோரும்;. கட்சியின் துணைச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்னர்.
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர்களாக அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார் ஆகியோர் தெரிவாகினர். நிர்வாகச் செயலாளராக சி. குலநாயகம் தெரிவு செய்யப்பட்டார். சட்டத்துறை செயலாளராக சி. தவராசா நியமிக்கப்பட்டார்.
அரசியல் செயற்குழுத் தலைவராக இரா.சம்பந்தனும் இளைஞர் அணி செயலாளராக சி. சிவகரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
கொள்கை பரப்பு செயலாளராக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவு செய்யப்பட்டபோதிலும் அவர் அதனை மறுத்து அப்பதவியை கிளிநொச்சியைச் சேர்ந்த எஸ்.வேளமாலிகிலனை பிரேரித்திருந்தார்.
இன்று தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விபரங்கள் நாளை இடம்பெறவுள்ள தேசிய மாநாட்டில் உத்தியொகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.