விமானம் அருகே ஓடிச் சென்ற மகிந்த! இலங்கை வரைபடத்தை மாற்றியமைக்கும் சீன அதிபர்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ, விமானத்திற்கு அருகில் சென்று சீன அரச தலைவரை வரவேற்று சீனாவுடனான நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விஜயத்தின் போது சீனா - இலங்கை இடையே 23 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
சீன அரச தலைவரின் இலங்கை பயணம் இலங்கைத் தீவின் வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக கொழும்பு பத்திரிகைகள் வர்ணித்துள்ளன.
இதற்குக் காரணம், கொழும்பு துறைமுகத்தை மையப்படுத்தி சுமார் 200 ஏக்கர் பரப்பில் கடல் நிலத்தை ஆக்கிரமித்து புதிய நிர்மாணத் திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.