Breaking News

ஐ.நா வில் மகிந்த உரையாற்ற அனுமதிக்ககூடாது திரண்டது தமிழகம்


ஈழத்தமிழர் நலன்கருதி தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்,
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை உரையாற்ற அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ம.தி.மு.க. தலைவர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் தலைமைக் கழகம் தாயகத்தில் கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் – சிங்கள இராணுவத்தை ஏவி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இனக்கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார்.
2009 போரின் இறுதிக் கட்டத்தில் எண்ணிலடங்காத தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தபோதிலும், அந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஆணவத்தோடு அறிவித்து, ஐ.நா.மன்றத்தின் மதிப்புக்கே பங்கம் விளைவித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷவை ஐ.நா.மன்றத்தின் பொதுச்சபையில் செப்ரெம்பர் 25 ஆம் திகதி உரையாற்ற அழைப்பு விடுத்திருப்பது ஐ.நா.வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதால் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை, ராஜபக்‌ஷவுக்கு விடுத்த அழைப்பை ஐ.நா. சபை திரும்பப் பெறவேண்டும்.
ஐ.நா. அறிவித்த விசாரணைக் குழுவினரை இந்தியாவுக்கு வர அனுமதித்து, தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் இலங்கை அரசின் இனக்கொலையால் தமிழகத்திற்கு தஞ்சமென வந்த ஈழத் தமிழ் அகதிகள் விசாரணைக் குழுவிடம் அச்சமின்றி வாக்குமூலம் வழங்க உத்தரவாதம் தருகிற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதனைச் செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவமும், காவல்துறையும் முற்றாக வெளியேற்றப்பட்டு, ஈழத் தமிழர் தாயகத்தில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்றி, சிறை முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.


arapporaddam 685415554

arapporaddam 685415555

arapporaddam 685415556

arapporaddam 685415557
arapporaddam 685415559