Breaking News

கூட்டமைப்பினர் மோடியுடன் என்ன பேசினார்கள்? - ரொபட் அன்டனி


''இந்­தியா'' என்­பதே கடந்த சில வாரங்­க­ளாக
இலங்­கையில் பேசப்­பட்ட, கலந்­து­ரை­யா­டப்­பட்ட மற்றும் அதி­க­மா­னோரால் உச்­ச­ரிக்­கப்­பட்ட வார்த்­தை­யாக இருந்­தது.

அந்­த­ள­வுக்கு திடீ­ரென இந்­தி­யா தொடர்பில் இலங்­கையில் அல­சப்­பட்­டது. பார­திய ஜனதாக் கட்­சியின் முக்­கி­யஸ்தர் சுப்­ர­ம­ணியம் சுவா­மியின் இலங்கை விஜயம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் என்­பன தற்­போ­தைய இந்த நிலை­மைக்கு அடித்­த­ளத்தை இட்­டன.

குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­ய­மா­னது நாட்டின் அர­சியல் சூழலில் பாரிய சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. ''தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்து இந்­திய பிர­தமர் மோடியை சந்­தித்து பேச்சு நடத்­தி­யது சாதா­ரண விடயம்.

அதனை ஏன் பாரிய விவ­கா­ர­மாக பார்க்­க­வேண்டும். பிர­தமர் மோடி பத­வி­யேற்­ற­வுடன் இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­தித்து இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­யி­ருந்தார். இந்­நி­லையில் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான இந்­திய தரப்பின் சந்­திப்பை மட்டும் ஏன் பெரி­து­படுத்­த­வேண்டும்'' இவ்­வாறு முக்­கிய தூத­ரக அதி­காரி ஒருவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களிடம் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­திய தரப்பை சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­மை­யா­னது சாதா­ரண விட­யம்தான். ஆனால் இது­வொரு சல­ச­லப்­பான விட­ய­மாக உரு­வெ­டுத்து முக்­கிய வெளி­நாட்டு தூத­ரக அதி­காரி ஒருவர் குறிப்­பிட்­டுக்­கூ­று­ம­ள­வுக்கு இந்த சந்­திப்பு தற்­போது முக்­கி­யத்­துவம் பெற்­று­விட்­டது என்­ப­தனை புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

அத்­துடன் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­யத்­துக்கு ஆளும் தரப்­பி­லி­ருந்து விச­னங்­களும் விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எங்கு சென்­றாலும் வேலை­யில்லை. எங்­க­ளிடம் வந்­தாலே தீர்வு கிடை க்கும் என்­பதே ஆளும் கூட்­ட­ணியின் கருத்­தா­க­வுள்­ளது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற வகை­யிலும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற வகை­யிலும் இந்­திய பிர­த­மரை சந்­தித்து எமது பிரச்­சி­னைகள் குறித்து எடுத்­து­ரைத்தோம் என்று கூட்­ட­மைப்பின் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­ய­மா­னது இவ்­வாரம் நாட்டின் அர­சியல் சூழலில் பாரிய தலைப்பு பொரு­ளாக மாறி­யி­ருந்­தது என்­பதே யதார்த்­த­மாகும். இந்­தி­யாவில் பார­திய ஜனதாக் கட்­சியின் ஆட்­சியில் பிர­தமர் மோடி பத­விக்கு வந்த பின்னர் இந்­திய மத்­திய அர­சாங்­க­மா­னது இலங்கை அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான போக்கை கடைப்­பி­டித்­தது.

குறிப்­பாக இலங்கை விவ­கா­ரத்தில் சர்­வ­தேச தலை­யீ­டுகள் இருக்­கக்­கூ­டாது என்றும் தீர்வு விட­யத்தில் இந்­தியா அழுத்­தங்­களை வழங்க முடி­யாது என்ற தொனி­யி­லுமே இந்­திய தரப்பில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டு­வந்­தன. இது நாட்டின் சில தரப்­புக்கள் மத்­தியில் இந்­தி­யாவின் நிலைப்­பாடு தொடர்பில் ஒரு­வித வியப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்­று­கூட கூறலாம்.

இந்­நி­லையில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட இந்­திய ஆளும் பார­திய ஜனதாக் கட்­சியின் முக்­கி­யஸ்தர் சுப்­ர­ம­ணியம் சுவாமி இந்­திய மத்­திய அர­சாங்­க­மா­னது இலங்கை அர­சாங்­கத்­துடன் முன்­னெப்­போதும் இல்­லாத நெருக்­க­மான போக்கை கடை­ப்பி­டிக்­கின்­றது என்ற எண்­ணத்தை உறு­தி­ப்படுத்­து­வது போன்று கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

உதா­ர­ண­மாக ஒரு கட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வுக்கு சென்று மோடியை சந்­திக்­க­வேண்­டு­மானால் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அறி­வித்­து­விட்டே செல்­ல­வேண்டும் என்று அவர் கூறி­ய­தாக ஊட­கங்­களில் அறிக்­கை­யி­டப்­பட்­டது. இலங்­கையில் நடை­பெற்ற பாது­காப்பு மாநாட்டில் உரை­யாற்­றிய சுவாமி உணர்ச்சி பூர்­வ­மாக செயற்­ப­டு­வதை விடவும் தந்­தி­ரோ­பா­ய­மாக செயற்­பட்டால் மட்­டுமே தமி­ழர்கள் அதி­காரப் பகிர்வை நோக்கி பய­ணிக்க முடியும்.

தேர்தல் வெற்­றியின் பங்­கு­தா­ரர்­க­ளாக தமிழ் மக்கள் செயற்­பட வேண்­டுமே தவிர தனி சமூ­க­மாக செயற்­படக் கூடாது என்றும் கூறி­யி­ருந்தார். அத்­துடன் இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னை­யொன்று இல்லை. யுத்தம் முடி­விற்கு வந்­த­வுடன் இலங்­கையில் பிரச்­சி­னை­க­ளுக்­கான வழிகள் மூடப்­பட்டு விட்­டன. இன்று இலங்­கையில் மொழி ரீதி­யான பிரச்­சி­னை­களே உள்­ளன. சிங்­கள, தமிழ் என தனித்­தனி­யாக செயற்­ப­டு­கின்­ற­மையே பிரச்­சி­னை­களை தோற்­று­விக்­கின்­றது.

அதே போல் இலங்­கையின் உள்­ளக விட­யங்­களில் இந்­தியா தலை­யி­ட­வி­ரும்­ப­வில்லை. அதற்­கான உரி­மை­களும் எமக்­கில்லை. எனினும் வெளிப்­ப­டை­யான விட­யங்­களில் இரு நாடு­களும் இணைந்து செயற்­பா­டு­களை மேற்­கொள்ளும் என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் தீர்­மானம் எடுப்­ப­வர்கள் மட்­டத்தில் இருக்கும் ஒரு­வரின் தோர­ணையில் சுப்­ர­ம­ணியம் சுவா­மியின் கருத்­துக்கள் அமைந்­தி­ருந்­தன என்­பதே பல­ரதும் கருத்­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­நி­லை­யில்தான் சுப்­ர­ம­ணியம் சுவாமி இலங்­கையில் வைத்­துக்­கூ­றிய கருத்­துக்­க­ளுக்கு முற்­றிலும் மாறு­பட்ட ரீதியில் அவர் இலங்­கையில் இருக்­கும்­போதே கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு இந்­தியா வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இந்த இடத்தில் இதன் பின்­னணி என்­ன­வாக இருக்கும் ஏன் இவ்­வாறு நடந்­தது என்­ப­தனை தற்­போது நாம் ஆராய்­வ­தை­விட சந்­திப்பின் தாக்­கங்கள் மற்றும் இந்­தி­யாவின் போக்கில் திடீ­ரென ஏற்­பட்ட மாற்றம் என்­பன குறித்தும் ஆரா­யவே விளை­கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முதலில் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜையே சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்­தனர். அதன் பின்னர் கடந்த சனிக்­கி­ழமை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து சுமார் ஒன்­றரை மணி­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

அதா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்பின் ஊடாக இலங்­கையின் தேசிய பிரச்­சி­னையின் அடிப்­ப­டைத்­தன்­மையை மோடி ஆழ­மாக அறிந்­து­கொள்ள முயற்­சித்­துள்ளார் என்­பது தெளி­வா­கின்­றது. இதன்­மூலம் மோடியின் பத­வி­யேற்­பி­லி­ருந்து குறிப்­பி­டத்­தக்க மாற்று அணு­கு­மு­றையை வெளி­யு­றவுத் துறையில் முன்­னெ­டுத்­து­வந்த மோடி அர­சாங்கம் திடீ­ரென சற்று மாறு­பட்­ட­போக்கை கடைப்­பி­டிக்­கின்ற தோற்­றப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த இந்­திய பிர­தமர் மோடி, இலங்­கையில் உள்ள சிறு­பான்மை தமிழ் மக்­களின் கௌரவம், சம உரிமை, சுய­ம­ரி­யாதை, நீதி என்­ப­ன­வற்றை இலங்கை அர­சாங்கம் உறுதி செய்­ய­வேண்டும். ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் இலங்­கையின் அனைத்து தரப்­புக்­களும் ஒன்­றி­ணைந்து விட்­டுக்­கொ­டுப்­புடன் அர­சியல் தீர்­வைக்­காண முன்­வ­ர­வேண்டும்.

இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யுடன் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார். அது மட்­டு­மன்றி 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளை­விட கூடு­த­லான அதி­கா­ரங்­களை தமிழ் மக்­க­ளுக்கு வழங்­க­வேண்டும் என இலங்கை அரசை இந்­திய அரசு வலி­யு­றுத்தும் என்றும் பிர­தமர் நரேந்­திர மோடி கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளிடம் உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இந்­திய பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­பை­ய­டுத்து நாடு திரும்­பி­யுள்ள கூட்­ட­மைப்­பினர் இந்­திய தரப்­புக்­க­ளு­ட­னான சந்­திப்பு திருப்­தி­க­ர­மாக அமைந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளனர். இதற்கு முன்­னரும் இந்­திய விஜ­யங்­களை மேற்­கொண்ட பின்னர் கூட்­ட­மைப்­பினர் இவ்­வாறு '' திருப்­தி­க­ர­மாக '' அமைந்­தது என்ற வார்த்­தையை பல தட­வைகள் பிர­யோ­கித்­துள்­ளனர்.

ஆனால் இம்­முறை அவர்­களின் கூற்றில் நம்­பிக்கை வெளிப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் திடீர் இந்­திய விஜ­ய­மா­னது அர­சாங்க தரப்பை விச­ன­ம­டையச் செய்­துள்­ளது என்றே குறிப்­பி­ட­வேண்­டி­யுள்­ளது. எவ்­வா­றெ­னினும் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது கூட்­ட­மைப்­பினர் இலங்­கைக்கு விசேட பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு கோரி­ய­தா­கவும் எனினும் அதனை மோடி ஏற்­றுக்­கொள்­ள­வில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் இலங்­கையின் நிலை­மையை ஆராய தூதுக்­குழு ஒன்றை அனுப்­பு­மாறு கூட்­ட­மைப்பு விடுத்த கோரிக்­கை­யையும் மோடி தரப்­பினர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த இரண்டு விட­யங்­களும் அர­சாங்­கத்தை மகிழ்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது என்று கூறலாம்.

எவ்­வா­றெ­னினும் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் ஆளும் கூட்­ட­ணியை விச­ன­ம­டைய வைத்­துள்­ளது என்­ப­தற்கு அமைச்­சர்கள் கூறி­வ­ரு­கின்ற விட­யங்­களே சான்று பகர்­கின்­றன. இது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட ஆளும் கட்­சியின் பிர­தம கொர­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பொய்­யான முறைப்­பா­டு­களை செய்­துள்­ளமை தொடர்பில் அர­சாங்கம் ஆச்­ச­ரி­ய­ம­டை­ய­வில்லை.

காரணம் வர­லாறு முழு­வதும் கூட்­ட­மைப்­பினர் இவ்­வாறே செயற்­பட்­டு­வந்­துள்­ளனர் என்று கடும் விச­னத்தை வெளி­யிட்­டி­ருந்தார். இலங்கையில் சட்­டங்­களை நிறை­வேற்­று­வது இலங்கை பாரா­ளு­மன்றம் என்­ப­தனை கூட்­ட­மைப்பு தெரிந்­து­கொள்­ள­வேண்டும். பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுடன் கூட்­ட­மைப்பு இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்­பதே இந்­தி­யா­வி­னதும் விருப்­ப­மாகும்.

எனினும் கூட்­ட­மைப்பு தெரி­வுக்­கு­ழு­வுக்கு இன்னும் வர­வில்லை. தற்­போது இந்­தி­யா­வுக்கு சென்று கூட்­ட­மைப்பு இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­துள்­ளது என்றும் அவர் கூறி­யி­ருந்தார். அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன மட்­டு­மன்றி பல அமைச்­சர்­களும் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் குறித்து விசனம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

அதா­வது, கூட்­ட­மைப்­பினர் எங்கு சென்­றாலும் தீர்வு தேவை­யாயின் எம்­மி­டமே வர­வேண்டும் என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது. காரணம் அந்­த­ள­வுக்கு இம்­முறை கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் முக்­கி­யத்­துவம் பெற்­ற­தாக அமைந்­து­விட்­டது. கூட்­ட­மைப்­பி­ன­ருடன் இந்­தியா சென்று நாடு திரும்­பிய இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் வை. கே. சின்ஹா கொழும்பில் வைபவம் ஒன்றில் உரை­யாற்­றும்­போது சில முக்­கி­ய­மான விட­யங்­களை முன்­வைத்தார்.

அதா­வது, அர­சாங்கம் யுத்­தத்தை வென்­றுள்­ளது. இந்­நி­லையில் யுத்­தத்தின் பின்­ன­ரான நிலையில் சமா­தா­னத்தை அர­சாங்கம் வெற்­றி­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. இது முக்­கி­ய­மா­ன­தாகும். அனைத்து தரப்­புக்­களும் ஒன்­றி­ணைந்து ஆக்­க­பூர்­வ­மான முறையில் செயற்­பட்டு தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண­வேண்டும் என்று கூறி­யி­ருந்தார்.

அத்­துடன் இவ்­வ­ருட இறு­தியில் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்வார் என எதிர்­பார்க்­கின்றோம். இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவு மிகவும் நெருக்­க­மா­னதும் விசே­ட­மா­ன­து­மாகும். இலங்­கையில் என்ன நடந்­தாலும் அது இந்­தி­யாவில் தாக்­கத்தைக் கொண்­டு­வரும் என்றும் இந்­திய தூதுவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

உண்­மையில் இந்­திய தரப்பும் இலங்கை தரப்பும் வலி­யு­றுத்­து­வ­தைப்­போன்று இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் இருக்­கின்ற உறவு வலு­வா­னது, நெருக்­க­மா­னது, விசே­ட­மா­னது, என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். பிராந்­திய வல்­லமை படைத்த நாடு என்ற வகையில் இந்­தியா இலங்­கைக்கு முக்­கி­ய­மான நாடாகும். மறு­புறம் மிக அருகில் இருக்­கின்ற கேந்­திர முக்­கி­யத்­துவ நாடாக இலங்கை இருக்­கின்­றமை இந்­தி­யா­வுக்கு மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

எனவே இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவு வலு­வா­னது மற்றும் விசே­ட­மா­னது என்­பது தர்க்­கத்­துக்கு உட்­ப­டாமல் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அந்­த­வ­கையில் பிராந்­தி­யத்தில் வேறு நாடு­களில் இல்­லாத அக்­கறை இலங்கை மீது இந்­தி­யா­வுக்கு இருக்­கலாம். இலங்­கையில் என்ன நடந்­தாலும் அது இந்­தி­யாவில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று இந்­திய பிர­தி­நிதி கூறு­வ­தி­லி­ருந்தே இலங்கை மீதான இந்­தி­யாவின் அக்­கறை எவ்­வாறு அமையும் என்­பது தெளி­வா­கின்­றது.

ஆனால் அந்த அக்­க­றை­யா­னது இலங்­கையில் அர­சியல் தீர்வு என்ற தேவை­யுடன் இருக்­கின்ற தமிழ் மக்­களின் தீர்வு செயற்­பாட்டில் ஆரோக்­ கி­ய­மற்ற வகையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­ கூ­டாது என்­பதே தமிழ் மக்­களின் கோரிக்­கை­யாகும். இலங்­கையில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வதில் காணப்­ப­டு­கின்ற தடை­களும் சிக்­கல்­களும் காலத்­துக்கு காலம் வேறு­பட்டு வரு­கின்­றன.

ஆனால் எந்­த­வொரு வழி­யிலும் தீர்வை அடைய முடி­யாத துர­திர்ஷ்­ட­வ­ச­மான நிலையே தமிழ் மக்­க­ளுக்கு நீடித்­து­வ­ரு­கின்­றது. தடை­களும் சிக்­கல்­களும் காலத்­துக்கு காலம் மாறு­பட்டு வந்­தாலும் தீர்வு கிடைக்­காது என்­பது மட்டும் நிலை­யா­கவே இருந்­து­வ­ரு­கின்­றது.

ஒரு கட்­டத்தில் சமஷ்டி தீர்வுக் கட்­ட­மைப்பு குறித்து பேசப்­பட்­டு­வந்த நிலையில் இன்று தீர்வு விவ­கா­ரத்தில் அடிப்­படை விட­ய­மாக உள்ள அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­தையே முழு­மை­யாக பெற்­றுக்­கொள்­வதில் பாரிய தடை­களும் சிக்­கல்­களும் காணப்­ப­டு­கின்­றன.

அத­னால்தான் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வதில் எதிர்­நோக்­கப்­படும் தடைகள் காலத்­துக்கு காலம் மாறிக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. சுதந்­தி­ரத்­துக்கு பின்­ன­ரான கால­கட்­டத்தில் தமிழ்­பேசும் மக்­க­ளுக்­கான தீர்வு விவ­காரம் தொடர்பில் பல­த­ரப்­பட்ட முயற்­சிகள் இடம்­பெற்­று­விட்­டன. பேச்­சு­வார்த்­தைகள் வட்­ட­மேசை மாநா­டுகள் அனைத்துக் கட்சிக் கலந்­து­ரை­யா­டல்கள் என அவற்றை குறிப்­பி­டலாம்.

ஆரம்ப நிலையில் எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் மேற் கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் மற்றும் திம்பு பேச்­சு­வார்த்தை முதல் இறு­தி­யாக இடம்­பெற்ற ஒஸ்லோ பேச்­சு­வார்த்தை என தீர்வை அடை­வ­தற்­கான முயற்­சிகள் பல வழி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் இறு­தியில் தமிழ் பேசும் மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு அல்­லது அந்த மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­ வேற்­றக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டங்கள் எத­னையும் அடைய முடி­யாமல் போனது.

இந்­நி­லை­யி­லேயே தமிழ் மக்­களின் தீர்வு செயற்­பாட்டில் இந்­தி­யாவின் அணு­கு­முறை தொடர் பாக தீவி­ர­மாக பேசப்­பட்­டு­வ­ரு­கின்­றது. தற்­போது '' தீர்­வுக்­கான இணக்­கப்­பாட்டை எட்­டிக்­கொள்­வ­தற்கு'' என்ற பெயரில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு உருவாக் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயத்தில் கூட இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அதாவது அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி அதில் ஏற்படுகின்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது குறித்து ஆராய முடியும் என்று கூட்டமைப்பு கூறுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற சமிக்ஞையை கூட இந்தியா வெளியிடாமல் உள்ளது.

எனினும் இந்தியா ஆரோக்கிய மான பங்களிப்பை செலுத்தி தீர்வைப் பெற்றுத்தரும் என்பதில் தமிழ் பேசும் மக்கள் இன்னும் நம்பிக்கையிலேயே உள் ளனர். ஆனால் அவ்வப்போது இடம்பெறுகின்ற நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகின்ற காய் நகர்த்தல்களும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்குமா என்ற விடயத்தில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் பலரையும் நம்பி ஏமாற்றமடைந்தனர். குறிப்பாக இந்தியாவின் தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

எனவே நாட்டின் சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலா ஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாறான தீர்வுத்திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். இதற்கான இராஜதந்திர செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மாறாக தீர்வை அடைவதற்கான முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் பிராந்திய அரசியல் நலனுக்கான காய் நகர்த்தல் வந்தால் அது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றமான நிலைக்கே கொண்டு செல்லும் என்பதே யதார்த்தமாகும்.