Breaking News

காணாமல் போவதற்கு தமிழர் என்ன விலங்குகளா?



இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமல் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல், இராணுவத்திற்கு வயல் எதற்கு எமது வயல் எமக்கு வேண்டும்.சந்தைக் காணி எமது சொத்து ஆக்கிரமிப்பை கைவிடு, அரச அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர், 

ஆக்கிரமிப்பை நிறுத்து இராணுவமே வெளியேறு,காணமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்,சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, சட்டவிரோத மீன்பிடிக்காரர்களை வெளியேற்று, 

எமது விவசாய நிலங்களை ஆக்கிரமிக்காதே, காணாமல் போவதற்கு தமிழர் என்ன விலங்குகளா?, காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது அரசே பதில் சொல், அனர்த்த நிவாரணம் தென்பகுதிக்கு மட்டுமா? போன்ற கோஷங்கள் மற்றும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.