ரயில் நடை மேடைக்கும் ரயிலுக்குமிடையில் சிக்கிய பயணியை காப்பாற்றினர்
வடமேற்கு பகுதியில் உள்ளது ஸ்ட்ரிலிங் ரெயில் நிலையம். இன்று காலை 8.50 மணி அளவில் மிகவும் நெரிசலான நேரத்தில் வழக்கமாக வரும் ரெயில் ஒன்று வந்து நின்றது அனைவரும் கதவி திறக்கபட்டதும் ஏறி இறங்கினர்.
அப்போது வாசல் படியில் நின்று கொண்டு இருந்த இளைஞரின் ஒரு கால் எதிர்பாரத விதமாக ரெயிலுக்கும் ரெயில்வே நடைமேடைக்கும் இடையில் உள்ள பகுதியில் சிக்கி கொண்டது. உடனடியாக சக பயணிகள் ரெயில் டிரவைருக்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து டிரைவர் ரெயிலை இயக்கமால் நிறுத்தி வைத்தார். கால் சிக்கி கொண்ட இளைஞ்ர் காலை எடுப்பதற்கு முயற்சி செய்தார் எடுக்க முடியவில்லை அவருக்கு சக பயணிகளும் உதவி செய்தனர். இருந்தாலும் அவரால் காலை எடுக்க முடியவில்லை.
கால் முட்டிவரை உள்ளே சென்று விட்டது.அவர் ரெயில் படியிலேயே அமர்ந்து இருந்தார். உடனடியாக ரெயில் பயணம் செய்த அனைவரும் இறங்கி 10 ஆயிரம் டன் எடை உள்ள ரெயிலை ஒருபுறமாக சிறிது சாய்த்தனர்.
அவர் வாசல் படியில் நின்று கொண்டிருந்ததால் அவரது கால் வழுக்கி இடைவெளிக்குள் மாட்டி கொண்டது. டிரைவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்ததால் ரெயில் இயக்ககபடவில்லை.உடனடியாக எங்களது ஊழியர்களும் -பயணிளும் இணைந்து அவரின் கால்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். என்று கூறினார்