இது எங்கள் நாடு ‘‘நீங்கள் புலிகள்‘‘ போய்விடுங்கள் -தமிழ் மாணவன் மீது தாக்குதல்
இன்று- ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகிய மாணவன் கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் எனபவரே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் சங்கங்கள் தடை செய்யப்பட்டு இன்றுடன் 507 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள்,இறுதி சந்தர்ப்பம் போய்விடுங்கள்! போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட தோற்றத்தை கொண்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் உடலில் பச்சை குத்தியிருந்ததாகவும் அவர்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் கூறியுள்ளார்.


பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியின்றி மாணவர்களின் விடுதிகளுக்கு வெளியார் செல்ல முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.